ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, May 6, 2020

#37 - விபூதி சந்தி

#37 - விபூதி சந்தி


அரியதி3த்3ரு எம்மொளித்த3
வரத1 விஷயக3ளும்ப3 ஞானோ
த்தரதி தனக3ர்ப்பிஸலு சித்சுக2வித்து ந்தெய்ப |
ரிது1 கா1ல ப்ரவஹக3ளு
ண்ட3ரெயு ரி காணதி3ரெ ப1ரிவுவு
மரளி மஜ்ஜன பான கர்மக3ளிந்தெ3 சுக2வஹவு ||37


அரியதிர்தரு = நமக்கு தெரியவில்லை என்றாலும்
எம்மொளித்து = நமக்குள் இருந்து
அனவரத = எப்போதும் இருப்பவன்
விஷயகளும்ப = விஷயசுகங்களின் சாரத்தை ஏற்றுக்கொள்பவன்
ஞானோத்தரதி = ஞானோதயம் வந்தபிறகு (நமக்கு விவரம் தெரிந்தபிறகு)
தனகெ = பரமாத்மனுக்கு
அர்ப்பிஸலு = சமர்ப்பணம் செய்தால்
சித்சுகவித்து = நிரந்தரமான சுகத்தைக் கொடுத்து (முக்தியைக் கொடுத்து)
ஸந்தெயிப = சமாதானம் செய்வான் (அருள்வான்)
ஸரிது கால = மழைக்காலத்தில்
ப்ரவஹகளு = வரும் வெள்ளங்கள்
கண்டரெயு ஸரி = ஒருவர் பார்த்தாலும் சரியே
காணதிரெ = காணவில்லையென்றாலும் சரியே
பரிவவு = பாய்ந்து கொண்டே இருக்கும்
மரளி = வெள்ளம் வருகிறது என்பதை மக்கள் அறிந்தபிறகு
மஜ்ஜனபான கர்மகளிந்த = ஸ்னான பானாதி கர்மங்களை செய்தால்
சுகவஹவு = அவர்களுக்கு சுகங்களைக் கொடுப்பான். 

அஞ்ஞானத்தால், நாம் செய்த காரியங்களை, சில காலங்களுக்கு, பரமாத்மனுக்கு அர்ப்பணம் செய்யாது இருந்தாலும், விஷயம் தெரிந்தபிறகு சமர்ப்பணம் செய்தாலும், அதனை ஸ்வீகரித்து, முக்தியைக் கொடுக்கிறான் என்று சொல்கிறார் தாசராயர். 

ஆற்று வெள்ளமானது, எப்படி யாரும் பார்க்கிறார்களோ, இல்லையோ, அது தன் பாட்டிற்கு பாய்ந்துகொண்டு போகிறதோ, அப்படி வெள்ளம் வந்திருக்கிறது என்று மக்களுக்கு தெரிந்தபிறகு, அது தணிந்தபின் ஆற்றில் செய்யப்படும் ஸ்னான பானங்களை செய்தால், எப்படி சுகங்களைக் கொடுக்கிறதோ, அப்படியே பரமாத்மன் நமக்குள் இருந்து, கர்மங்களை செய்விக்கிறான், விஷயசுகங்களை அனுபவிக்கிறான் என்று நமக்கு தெரியாவிட்டாலும், அவன் அந்த விஷய சுகங்களை ஏற்காமல் விடமாட்டான். அப்படி அவன் ஏற்கிறான் என்ற விஷயம் நமக்குத் தெரிந்தபிறகு, நாம் செய்த செயல்களை பரமாத்மனுக்கு சமர்ப்பித்தால், நிரந்தர சுகமயமான முக்தியைக் கொடுத்து அருள்வான். ஆகையால், நாம் செய்த அனைத்து கர்மங்களையும் பரமாத்மனே செய்து, செய்விக்கிறான் என்று அறிந்து, அதனை அவனுக்கு அர்ப்பிக்க வேண்டும் என்பது கருத்து. 

***

No comments:

Post a Comment