ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, June 1, 2020

#13 - பஞ்சதன்மாத்ர சந்தி

#13 - பஞ்சதன்மாத்ர சந்தி


மிசுனிமேலின மணியவோல் ரா
ஜிஸுவ பிரம்மாதி33ள மனத3லி
பிஸஜஜாண்டா3தா4ரகனு ஆதே3யனெந்தெ3னிஸி |
த்3விஷத1 நால்வத்தெரடு3 ரூபதி3 ஷஷியொ
ளிப்பனு ஷஷதொளகெ3 ஷோ
பி4ஸுவ நால்வத்தெரட3தி4கஷத ரூபத3லி பி33தெ ||13

மிஸுனிமேலின = தங்கத்தின் மேல் வேயப்பட்ட
வோல் = மாணிக்கத்தைப் போல
ப்ரம்மாதிகள = பிரம்மனே முதலான தேவதைகளின்
மனதலி = மனதில்
ராஜிஸுவ = நிலைத்திருப்பான்.
பிஸஜ ஜாண்டாதாரகனு = பிரம்மாண்டத்தை தரித்தவன் என்று
ஆதேயனெந்தெனிஸி = ஆதேயன் என்று அழைத்துக் கொண்டு
த்விஷத நால்வத்தெரடு ரூபதி = 242 ரூபங்களை
ஷஷியொளிப்பனு = சந்திரனில் இருக்கிறான்
ஷஷதொளகெ = சந்திரனில் இருக்கும் களங்கத்தில்
நால்வத்தெரடதிக ஷத = 142
ரூபதலி = ரூபங்களில்
பிடதெ = எப்போதும்
ஷோபிஸுவ = நிலைத்திருப்பான்.

ஒளிமயமான தங்க மலை சிகரத்தின் நடுவில் ஒளிரும் மாணிக்கத்தைப் போல, ஆதார, ஆதேய ரூபங்களால் பிரம்மாதிகளின் மனதில் நிலைத்திருக்கிறான். தங்கத்தின் நடுவே மாணிக்கம் போன்ற உதாரணத்தினால், தங்கமலை போன்றவனாக, பிரம்மாண்டத்திற்கு ஆதாரமாக இருக்கிறான். விஸ்வரூபத்தினால், மாணிக்கத்தைப் போல அதற்குள் வீற்றிருக்கிறான். இந்த ரூபத்தை, பிரம்மாதிகள் தத்தம் யோக்யதைக்கேற்ப அபரோக்‌ஷத்தில் காண்கின்றனர். ஆதாரமாக இருக்கிறான் என்னும் விஷயத்தில் இன்னொரு உவமானத்தையும் சொல்கிறார்.

சந்திரனுக்குள் கருப்பாக ஒரு விஷயம் காணப்படுகிறது. மக்கள் அதை மான் என்று சொல்வதுண்டு. அதற்கு சம்ஸ்கிருதத்தில் ஷஷஎன்று பெயர். ஷஷ என்றால் மூலம் (ஆதாரம்). இந்த சந்திரனின் களங்கத்திற்கு ஷஷ என்று பெயர் இருப்பதால், சந்திரனுக்கு - (ஷஷ உள்ளவன் ஆகையால்) ஷஷி என்ற பெயர் வந்தது.

இப்படி ஆதார நாமகனாக, எழுத்துக்களின் படியும், ஆ=2 தா=4 ர=2, 242 வலது பக்கத்தில் படித்தாலும் 242 வருகிறது. இத்தகைய ரூபங்களால், சந்திர, சந்திரனின் களங்கத்தில் ஆதார ரூபனாக, பிரம்மாண்டத்தில் ஆதேய நாமகனாகவும், ஆ=2 தே=4 ய=1. 241 இதை வலப்பக்கமான படித்தால் 142 ரூபங்கள் வருகிறது. இவ்வளவு ஆதேய ரூபங்களால், உலகங்களிலும் இதைப்போலவே, எந்த பொருளின் ஆதாரத்தின் மேல் எந்தப் பொருள் இருக்கிறதோ, அவற்றிலெல்லாம் ஆதார, ஆதேய ரூபங்களால் பரமாத்மன் எப்போதும் நிலைத்திருக்கிறான் என்று சிந்திக்க வேண்டும்.


***

No comments:

Post a Comment