#29 - விபூதி சந்தி
பூ4ஸுரரொளிப்ப1ப்ஜ ப4வனொளு
வாஸுதே3வனு வாயு க2க3ப ஸ
தா3 ஷிவஹிபே1ந்த்ரனு விவஸ்வான் நாமக சூர்ய |
பே4ஷ காமமராஸ்ய வருணா
தீ3 சுரரு க்ஷத்ரியரொளிப்பரு
வாஸவாகி3ஹ சங்கருஷ்ணன நோடி3 மோதி3பரு ||29
பூசுரரொளிப்ப = பிராமணர்களின் உள்ளிருக்கும்
அப்ஜ பவனொளு = பிரம்ம தேவருக்குள்
வாசுதேவனு = வாசுதேவ நாமக பரமாத்மன்
வாயு = வாயுதேவர்
ககப = பறவைகளில் சிறந்தவனான கருடன்
ஸதாசிவ = ருத்ரதேவர்
அஹிப = சேஷதேவர்
இந்திரன்,
விவஸ்வன் நாமக சூர்ய = விவஸ்வன் நாமகனான சூரியன்
பேஷ = நட்சத்திரங்களின் தலைவனான சந்திரன்
காம = மன்மதன்
அமராஸ்ய = அக்னி
வருணாதி = வருணன் முதலான தேவதைகள்
க்ஷத்ரியரொளிப்பரு = க்ஷத்ரிய அபிமானியாக இருப்பவர்கள்
தம்மொளகெ வாஸவாகிஹ = வசிக்கும்
ஸங்கருஷணன = சங்கர்ஷண நாமக பரமாத்மனை
நோடி மோதிபரு = பார்த்து மகிழ்வர்.
பிராம்மணாதி வர்ணாபிமானி தேவதைகளையும், அந்த ஜாதியின் நியாமகனான வாசுதேவ ரூபங்களையும், ‘பூசுரரொளிப்ப’ என்னும் பத்யத்தில் தொடங்கி அடுத்த 31ம் பத்யம் வரைக்கும் விளக்குகிறார் தாசராயர்.
பிராமண ஜாதியினருக்கு அபிமானி பிரம்மதேவர். இவர் பிராமணர்களில் இருப்பவர். அவரில் வாசுதேவ மூர்த்தியை சிந்திக்க வேண்டும். வாயுதேவர், கருட, ருத்ர, சேஷ, இந்திர, விவஸ்வான் என்னும் சூரியன், சந்திரன், மன்மதன், அக்னி, வருணாதி தேவதைகள் ஆகியோர் க்ஷத்ரிய ஜாதியின் அபிமானிகள், இவர்கள் க்ஷத்ரியர்களில் இருப்பார்கள். இவர்களில் சங்கர்ஷணரூபி ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான் என்று சிந்திக்க வேண்டும்.
***
No comments:
Post a Comment