ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, May 23, 2020

#31 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#31 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


1ன்னனந்தானந்த ரூப ஹி
ரண்யக3ர்பா4திக3 ளொளகெ3 கா1
ருண்யஸா3ர ஹரகி3 அவரவரகி2ல வியாபா1|
பன்னபட3தெலெ மாடி3 மாடி3ஸி
4ன்யரெனிஸி மஸ்த தி3விஜர
புண்யக1ர்மவ ஸ்வீகரிஸி ப2லவித்து பா1லிஸுவ ||31

தன்னனந்தானந்த ரூபவ = தன் அனந்தானந்த ரூபங்களை
ஹிரண்யகர்ப்பாதிகளொளகெ = பிரம்மாதி தேவதைகளுக்குள்
காருண்யசாகர = கருணைக் கடலான ஸ்ரீபரமாத்மன்
ஹரஹி = நிலைத்திருந்து
அவரவர = அவரவர்கள் செய்ய வேண்டிய
அகிலவ்யாபார = அனைத்து காரியங்களையும்
பன்னபடதெலெ = எந்தவித சோர்வும் இல்லாமல்
மாடி மாடிஸி = (தான் அவர்களுக்குள் இருந்துகொண்டு) செய்து, செய்வித்து
சமஸ்ததிவிஜர = அனைத்து தேவதைகளும் செய்யும்
புண்யகர்மவ = தைத்ய சம்ஹார, தன்னை ஆராதிப்பது ஆகிய புண்யகர்மங்களை
ஸ்வீகரிஸி = ஏற்றுக்கொண்டு
பலவித்து = இஹத்தில் போகங்களையும், பரத்தில் அவரவர்களின் தகுதிக்கேற்ப முக்திசுகங்களைக் கொடுத்து
பாலிஸுவ = காப்பாற்றுவான்.

ஸ்ரீபரமாத்மன் பக்தர்களில் பரமப்ரீதியை செய்கிறான் என்பதை, பக்தியோகிகள் எனப்படும், பக்தியில் சிறந்தவர்கள் எனப்படும் பிரம்மாதி தேவதைகளில் இருந்துகொண்டு எப்படி செயல்களை செய்கிறான் என்பதையும், ஸ்ரீபரமாத்மனின் கருணையையும் இந்த பதத்தில் விளக்குகிறார் தாசராயர்.

கருணைக்கடலான ஸ்ரீபரமாத்மன், தன் அனந்தானந்த ரூபங்களால் தத்வாபிமானிகளான பிரம்மாதி தேவதைகளில் இருந்துகொண்டு, 24 தத்வங்களில், தத்-பதிகளாக இருந்துகொண்டு, கண், காது ஆகியவற்றால் அனைத்து பிராணிகளும் செய்யவேண்டிய செயல்களை, பிரம்மாதி தத்வபதி தேவதைகளில் இருந்து, தான் செய்து, அவர்கள் மூலமாக செய்ய வைக்கிறான் என்று பொருள்.

சத்யலோக, ஸ்வர்க்க லோகாதிகளில் வசித்திருக்கும், பிரம்ம ருத்ர, இந்திராதி அனைத்து தேவதைகளில், அந்தந்த உருவத்தில், அந்தந்த பெயர்களில், அனந்தானந்த ரூபங்களால், அவர்களில் இருக்கிறான். எப்படியெனில், பிரம்ம தேவரில் பிரம்மஎன்னும் சொல்லின் எண்ணைப் பார்த்தால், ப்ர=5 ஹ்ம=13. இதனை வலது பக்கத்திலிருந்து பார்த்தால் 315 ரூபங்கள் ஆகிறது.

பிரம்மாந்தர்கத வாசுதேவ மூர்த்தி, இவரின் எண்ணிக்கை. வா=4 சு=7 தே=3 வ=4. இதை வலது பக்கத்திலிருந்து படித்தால், 4374 ரூபங்களாகிறது. இதன் மேல், பிரம்மாதிகளின் பாஞ்சபௌதிக சரீரங்களிலும், 24 தத்வங்கள், தத்பதி தேவதைகள், அவர்களில் மேற்சொன்ன விதத்தில், 13,824 ரூபங்கள். இதைப்போல, அவர்களில் இருக்கும் தத்வாபிமானி தேவதைகளில் ஒவ்வொரு தேவதையிலும் அவ்வளவு ரூபங்கள் உள்ளன. இப்படி தத்வாபிமானி தேவதைகளுக்கும் அனந்த ரூபங்களைக் கொடுத்து, தான் ருத்ராதி ஒவ்வொருவரிலும் அனந்தானந்த ரூபங்களில் இருந்து, அவரவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை அவர்களுக்குள் இருந்து தான் செய்கிறான். அதாவது, தத்வாபிமானிகளில் இருந்து தத்வ கார்யங்களை செய்விக்கிறான்.

பிரம்ம தேவருக்குள் இருந்து ஸ்ருஷ்டிக்கிறான். ருத்ரரில் இருந்து சம்ஹாரம் செய்கிறான். இந்திரரில் இருந்து ஸ்வர்க்கத்தை ஆண்டவாறு, துஷ்ட நிக்ரஹத்தை செய்து, 100 அஸ்வமேத யாகங்களை செய்கிறான். இந்த காரியங்களை அந்தர்யாமியாக இருந்து, தான் செய்து, அவர்கள் மூலமாகவும் செய்வித்து, ஸ்ருஷ்டி கர்த்தா பிரம்மா, சம்ஹார கர்த்தா ருத்ர, வ்ருத்ராசுரனைக் கொன்றவன் இந்திரன், 100 அஸ்வமேதங்களை செய்தான், ருத்ரர் த்ரிபுராசுரர்களை சம்ஹரித்தார் என்னும் பற்பல புகழினை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் செய்த புண்ய கர்மங்களை தான் ஏற்று, இஹத்தில் அவர்களின் யோக்யதைக்கேற்ப பலன்களைக் கொடுத்து, முக்தியிலும், பிரம்மாதிகளுக்கு தாரதம்யத்திற்கேற்ப, மகிழ்ச்சியைக் கொடுக்கிறான்.

இப்படியாக, எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல், இத்தகைய புகழையும், மகிழ்ச்சியையும் கொடுப்பவனாகையால், பரமாத்மன் கருணைக்கடல் ஆகிறான். இவ்வளவு செய்தாலும் பரமாத்மனுக்கு அகர்த்தஎன்று பெயர் உண்டு. அது எப்படியெனில், ‘அகர்த்தாsக்லிஷ்டகாரித்வாத்எவ்வளவு செயல்களை செய்தாலும், கொஞ்சம்கூட அதில் சோர்வு இல்லாததால், இந்தப் பெயர். இதையே தாசராயர், பன்னபடதலெ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். சிரமம் இல்லாமல் செயல்களை செய்து செய்விக்கிறான் என்று பொருள்.


***

No comments:

Post a Comment