ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, May 10, 2020

#4 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#4 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


4ரணியெம்புதெ3 அக்3னி ம்வ
த்ஸரவெ மிதெ3 விஹாயவெ ஹொகெ3
இருளுரி திஷங்கா3ரவாந்தர தி3க்3வலய கி1டி3யு |
வருஷவெம்பா3ஹுதி க3ளிந்த3லி
ஹரிய மெச்சிஸி சக1லரொளக3
த்4வரியனாகி3ரு சர்வரூபாத்மகன சிந்திஸுத ||4


தரணியெம்புதெ = பூமி என்பதே, அக்னி,
சம்வத்ஸரவெ சமிதெ = சம்வத்ஸரமே சமித்து
விஹாயஸவெ ஹொகெ = ஆகாயமே புகை
இருளு = இரவு
உரி = ஜ்வாலை
திஷா = திசைகள்
அங்கார = கங்குகள்
ஆவாந்தர திக்வலய = விதிக்குகளே தீப்பொறிகள்
வருஷவெம்ப = மழை என்னும், ஆஹுதிகளால்
ஹரிய மெச்சிஸி = பக்தியுடன் ஸ்ரீஹரியை
ஸர்வரூபாத்மகன = ப்ருத்வி அக்னியில் சங்கர்ஷண, சம்வத்ஸர காஷ்டங்களில் சங்கர்ஷண நாராயண, சங்கர்ஷண வாசுதேவ முதலான 6 ரூபாத்மகனான பரமாத்மனை சிந்தித்தவாறு
சகலரொளகெ அத்வரியனாகிரு = யாகங்களில் அத்வர்யர் எப்படி தலைவரோ அதுபோல அனைவருக்கும் தலைவனாக இரு. இத்தகைய ஞானம் உள்ளவன், தலைவனாக இருப்பான் என்று பொருள்.

இந்த பத்யத்தில், மூன்றாம் ப்ருத்வி அக்னியில் ஹோமம் செய்யும் விதத்தை விளக்குகிறார் தாசராயர். 

இந்த அனைத்து பத்யங்களுக்கும், உபநிஷத் வாக்கியங்கள் இருக்கின்றன. அதன் பொருள் மட்டும் இங்கு சொல்லப்படுகிறது. கிரந்தம் பெரிதாகிவிடும் என்பதால், உபநிஷத் வாக்கியங்களைக் கொடுக்கவில்லை.

'ப்ருதி தத்வாத் ப்ருதிவீ நாம ப்ருதிவீஸ்த: சங்கர்ஷண: அக்னி:’. உலகத்தில் புகழ் பெற்றவனாக இருப்பதால், பரமாத்மனுக்கு ப்ருதிவி என்று பெயர். ப்ருத்வியில் இருக்கும் அக்னியின் பெயர் சங்கர்ஷணன். அனைவரையும் தனக்குள் வசிக்க அனுமதிப்பவன் ஆகையால், சம்வத்ஸரன் என்று பெயருள்ள சங்கர்ஷண நாராயண ஸ்வரூபமே காஷ்டம் (சமித்து). நன்றாக ஒளி தருபவனாகையால், ஆகாஷன் என்று பெயர். இந்த ஆகாயத்தில் இருக்கும் சங்கர்ஷண வாசுதேவ ஸ்வரூபன் எப்படி ‘ரதிர்வானாத்ராத்ரி:’, ரதிப்ரதன் ஆகையால், ராத்ரி என்று பரமாத்மனுக்குப் பெயர். ராத்ரியில் இருக்கும் சங்கர்ஷண சங்கர்ஷண ஸ்வரூபனே ஜ்வாலை. ஞானத்தைக் காட்டுபவனாகையால் (’திஷதீதி திக்’), பரமாத்மனுக்கு திக் என்று பெயர். திக்குகளில் இருக்கும் சங்கர்ஷண பிரத்யும்ன ஸ்வரூபனே கங்குகள். ‘அவாந்தரந்திஷதீதி அவாந்தரதிக்’ அவாந்தர ஞானத்தைக் காட்டுபவனாகையால், பரமாத்மனுக்கு அவாந்தர திக் என்று பெயர். அவாந்தர திக்குகளில் இருக்கும் சங்கர்ஷண அனிருத்தனே தீப்பொறிகள். மழைத்துளிகளையே ஆஹுதிகளாச் செய்து, ஹரியை துதித்தவாறு, மேற்சொன்ன காஷ்டங்களில் இருக்கும் அனைத்து ரூபங்களை சிந்தித்தவாறு அனைவரைவிடவும் சிறந்தவனாக இரு. இப்படியாக சிந்தித்தால், ஸ்வாமி நம்மை சஜாதியர்களில் அனைவரைவிடவும் சிறந்தவராக மாற்றி, அருள்வான் - என்று சொல்கிறார்.

***

No comments:

Post a Comment