#1 - பஞ்சதன்மாத்ர சந்தி
***
ஹரிகதா2ம்ருதசார கு3ருக3ள
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்3ப4க்தரித3னாத3ரதி கேளுவுது3
பூ4 ஸலில ஷிகி2 பவன பூ4தா
காஷ தொ3ளகை3தை3து3 தன்மா
த்ரா ஸஹித ஒந்ததி4க பஞ்சாஷத் வரணவேத்3ய |
ஈ ஷரீரதி3 வ்யாபிஸித்து3 சு
ராசுரரிகெ3 நிரந்தரத3லி சு
கா2 சுக2ப்ரத3னாகி3 ஆடுவ த்வேஷிபர பி3டு3வ ||1
பூ = பூமி
சலில = தண்ணீர்
ஷிகி = அக்னி
பவன = வாயு
பூதாகாஷதொளு = ஆகாயம்
ஐது = 5
தன்மாத்ரா சஹித = ஷப்த, ஸ்பர்ஷாதி 5 குணங்களுடன் கூடிய
ஈ ஷரீரதி = இந்த பாஞ்சபௌதிக சரீரத்தில்
ஒந்ததிக பஞ்சாஷத் வரணவேத்ய = 51 எழுத்துக்களால் அறியப்படுபவனான
வியாபிஸி = வியாபித்தவாறு இருந்து
சுராசுரரிகெ = தேவ தைத்யர்களுக்கு
ஸுகாசுகப்ரதனாகி = சுக துக்கங்களை கொடுப்பவனாக
ஆடுவ = விளையாடும் (செயல்களை செய்யும்)
த்வேஷிபர = த்வேஷிகளை
பிடுவ = சம்ஹரிக்கிறான்.
இந்த சந்தியில், தன்மாத்ர குணங்களில் இருக்கும் பகவத்ரூபங்களை சொல்லியாறு, முதல் பத்யத்தில் அதன் சாரத்தை சொல்கிறார். ப்ருதிவி, அபு,
தேஜஸ், வாயு,
ஆகாச என்னும் 5 பஞ்சபூதங்கள். இவற்றின் மாத்ரா குணங்கள், கந்த,
ரஸ,
ரூப,
ஸ்பர்ஷ மற்றும் ஷப்த. இவற்றைக் கொண்டிருக்கும் இந்த சரீரத்தில் ஆகாஷாதி 51 எழுத்துக்களால் புகழப்படும் அஜ, ஆனந்தாதி 51 ரூபங்களை சிந்திக்க வேண்டும். மஹாபூதங்களில் ஆகாஷாதி ஒவ்வொரு பூதங்களிலும், வாய்வாதி 5 பூதாதிகளின் சம்பந்தம் இருக்கிறது. அதுபோலவே, ஆகாஷாதிகளின் தன்மாத்ரா குணங்களான ஷப்தாதிகளில் ஸ்பர்ஷாதி குணங்கள், ஸ்பர்ஷாதிகளில் ஷப்தாதி குணங்களின் கலவை இருக்கிறது. ஒவ்வொரு பூதங்களிலும்
மற்ற 4 பூதங்களின் சம்பந்தமும், மாத்ரா குணங்கள் ஒவ்வொன்றிலும் இதர
4 மாத்ரா குணங்களின் சம்பந்தமும் இருக்கிறது என்று அறிய வேண்டும்.
பாகவத 3ம் ஸ்கந்தம் 27ம் அத்தியாயம் 51ம் ஸ்லோகம் ‘பரஸ்ய த்ருஷ்யதே தர்மோஹ்ய பரஸ்மின்னமுன்வயாத்’. இதை விஜயத்வஜீய வியாக்யானத்தில் ‘பரஸ்ய பூர்வஸ்ய, காரணஸ்ய ஷாகாஷாதேதர்ம: ஷப்தாதி குணோsபரஸ்மின் பச்சாத்தனேகார்யே
வாய்வாதௌ த்ருஷ்யதேஹி | குத: சமன்வயாத் சம்பந்தாத் ||’. பரஸ்ய = முன்னர் இருக்கக்கூடிய. ஆகாஷாதி தர்மம் என்றால் ஷப்தாதி குணங்கள்.
அபரர்ஸ்மி = இதற்குப் பிறகு காரியபூதமான வாயுகளில் இருக்கிறது. அது எப்படியெனில், ஸமன்வயாத் = ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருப்பதால், என்று சொல்லியிருக்கிறார்.
இந்த ஆதாரத்தினால், பஞ்சபூதம் 5. ஒவ்வொன்றிலும் இதர பூதங்கள் 4 என்றால், பூமி ஒன்று. அதில் தண்ணீர் முதலான 4 ரஸ சம்பந்தங்கள் 5. இப்படியாக ஒவ்வொன்றிலும் 5 என்றால், மொத்தம் 25 ஆகிறது. இதைப்போல, தன்மாத்ரா ஷப்தாதிகள் 25. மொத்தம் 50. இதனுடன் மனஸ் சேர்த்தால், 51. இந்த 51ல் அஜ, ஆனந்த முதலான 51 எழுத்துக்களால் வர்ணிக்கப்படுபவனை அறியவேண்டும். நம் தேகத்தில் தத்வாபிமானி
தேவதைகள் எவ்வளவு பேர் இருக்கின்றனரோ, அவ்வளவு தத்வாபிமானி தைத்யர்களும்
இருக்கின்றனர். தேவதைகள், புண்ய கர்மங்களை செய்விப்பவர்கள்.
தைத்யர்கள், பாவ கர்மங்களை செய்விப்பவர்கள்.
பாகவத 11ம் ஸ்கந்தம், 2ம் அத்தியாயம், 49ம் ஸ்லோகத்தில் ‘தேஹேந்த்ரிய ப்ராணதியாம்’ என்பதின் பாகவத தாத்பர்யத்தை, விஜயத்வஜீய வியாக்யானத்தில் சொல்லியிருக்கிறார். அது என்னவெனில்:
தேஹேந்த்ரிய ப்ராணதியாம் த்ரிதைவத்வபிமானின: |
தத்ரோத்தமா தேவதாஸ்தா: ஸர்வ தோஷ விவர்ஜிதா: ||
மத்யமா குணதோஷேதா அவமா அஸுரா மதா: |
தேப்யோன்யோ மானுஷோ ஜீவஸ்தப்யாம் தேவாஸுராவபி |
ஜீவாபிமானினஸ்சைவ த்ரிவிதா சம்ப்ரகீர்த்திதா: ||
ஜீவமான்யுத்தமோ பிரம்மா மத்யம: ஸ்வயமேவது |
அதம: கலிருத்திஷ்ட: தத்ர மத்யம நீசயோ: ||
ம்ருதிஜன்ம க்ஷுதாதுக்க ப்ரப்ருத்யகிலமேவது ||
நோத்தமஸ்யது ஜீவஸ்ய தேஹாதேஷ்ச கதஞ்சன ||
அசுராணாமதர்மஸ்ய வ்ருத்யா சுகமபீஷ்யதே ||
தேவானாம் நைவகேனாபி துக்கம் ப்ரீதிஸ்துதர்மத: |
அதர்மோபி ப்ரீதயேஸ்யாத சுராணாம் தமோகதே: ||
தேவானாம் புண்யபாபாப்யாம் சுகமேபோத்த ரோத்தரம் |
தேஷாம் துக்காதிகம் கிஞ்சிதசுராவேஷதோ பவேத் ||
ப்ராணஸ்ய நாசுராதேஷோ ஹரிணாச (அகணாஸ்ச) சமோஹிஸ: ||
சம்பூர்ணானுக்ரஹாத்விஷ்ணோ: ப்ராண: பூர்ணகுணோமத |
அஸுராணாம் சுகாத்யாஷ்ச தேவாவேஷாதுரீரிதா: ||
தேகம், இந்திரியங்கள், பிராண, புத்தி ஆகியவற்றிற்கு அபிமானிகள், மூன்று விதங்கள்.
* உத்தமர் தேவதைகள், தோஷங்கள் இல்லாதவர்கள்.
* மத்யமர் குணதோஷங்கள் கொண்டவர்கள்.
* அதமர் தைத்யர் அனைவரும் தோஷங்கள்
கொண்டவர்கள்.
இந்த மூன்றிலிருந்து வேறுபட்டவர்கள், மனுஷ்யஜீவர்கள். இவனுக்கு, தேவாசுரர்கள் அபிமானிகள்.
ஜீவாபிமானிகள் கூட மூன்று விதமானவர்கள்.
* ஜீவமானிகளில் உத்தமர் பிரம்மதேவர்.
* மத்யமன் ஜீவன் மற்றும் புரஞ்சனன்
என்னும் ராஜன்.
* அதமன், கலி.
இவற்றில், மத்யமனான ஜீவனுக்கும், ஜீவமானியான புரஞ்சனனுக்கும், நீசனான கலிக்கும், மரணம், ஜனனம், பசி முதலான துக்கங்கள் உண்டு.
இதேபோல, தேகத்தில் இருக்கும் தத்வாபிமானி
தேவதைகளுக்கு, தேகத்தில் இருக்கும் சுகங்கள் மட்டுமே உண்டு. ஜீவனுக்கு சுக துக்கங்கள் என
இரண்டின் சம்பந்தமும் இருக்கிறது. அசுரர்களுக்கு அதர்ம வழியாதலால், துக்கம் மட்டுமே உண்டாகிறது. துரியோதனாதிகளுக்கு ஆனதைப் போல, சில துக்கங்களே பல-ரூபமாக, சுகமும் ஆவதுண்டு. ஆனால் அதுவும்
அவர்களின் பாவத்திற்கே வழிவகுக்கும். தேவதைகளுக்கு எவ்வித துக்கங்களும் இல்லை.
தர்மத்தை பின்பற்றினால், பரமாத்மன் மேல் அன்பு
அதிகரிக்கும். சில சமயங்களில் தேவதைகள் அதர்ம செயல்களை செய்தாலும், அது அசுரர்களின் தமஸ் சாதனைக்காக, தாம் செய்து, அந்த பலன்களை தைத்யர்களுக்கே கொடுப்பர். ஆகையால், தேவதைகள், புண்ணியம் செய்தாலோ, பாவம் செய்தாலோ, அல்லது தேகங்களைக் கொண்டிருக்கும் நம்மிடமிருந்து புண்ய பாவங்களை செய்வித்தாலோ, அவர்களுக்கு புண்ய பலன்களே கிடைக்கிறது. பாப பலன்கள், அதன் அபிமானி தைத்யர்களுக்கே ஆகிறது. இதைத்தவிர, தைத்ய ஜீவர்களுக்கு என்றைக்கும் சுகம் இல்லை. தேவதைகளுக்கு என்றைக்கும்
துக்கம் இல்லை.
அஞ்ஞான வாசத்தில் பாண்டவர்கள் கஷ்டப்படவில்லையா? துர்யோதனாதிகள் அரசைப் பெற்று சுகப்படவில்லையா? என்றால், தேவதைகளுக்கு இருக்கும் அசுர ஆவேசத்தினால் மிகச்சிறிய அளவிற்கு துக்கம்
உண்டாகலாம். தேவதைகளின் உள்ளே இருக்கும் தைத்யர்களே அதனை அனுபவிப்பர். தேவதை
ஜீவிகள் அதனை அனுபவிக்க மாட்டார்கள். தைத்யர்களுக்கு சுகம் ஆனாலும், தேவ ஆவேசத்தாலேயே ஆகிறதே தவிர, தைத்ய ஜீவர்களுக்கு அல்ல.
பிராணதேவருக்கு மட்டும் என்றைக்கும் அசுர ஆவேசம்
இல்லை. பரமாத்மனின் ஸ்வரூபத்தைக் காட்டும் விஷயத்தில் அவர் உரைகல் போல.
பரமாத்மனின் பரமானுக்கிரகத்தினால் அவர் பூர்ண குணங்களைக் கொண்டவர் என்று
அறியவேண்டும். தேகங்களில் இருக்கும் தத்வாபிமானி தேவ தைத்யர்களுக்கு சுக
துக்கங்களை, அதாவது தேவதைகளுக்கு சுகங்களை, தைத்யர்களுக்கு துக்கங்களைக்
கொடுத்து,
இதே சரீரத்தில் நிலைத்திருந்து, அவரவரின் கர்மங்களுக்கேற்ப, த்வேஷிகளை திருத்தி, பரத்தில், தமோரூபமான தண்டனையைக் கொடுக்கிறான் என்று பொருள்.
***
No comments:
Post a Comment