#11 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
சித்தயிசுவுது3 எண்ட1தி4க இ
ப்பத்து ஸாவிர நால்கு1ஷத1 தை3
வத்த1மூரு ஸுமூர்த்திக3ளு அஹவல்லி பரியந்த1 |
ஹத்து நாலகு ரூபக3ள நெனெ
யுத்த அவனீப1ரி தி1ளிது3 புரு
ஷோத்தமன சர்வத்ர பூஜெயமாடு3 கொண்டா3டு3 ||11
சித்தயிசுவுது = இது கேட்கத் தகுந்தது
யெண்டதிக இப்பத்து சாவிர நால்குஷத தைவத்தமூரு சுமூர்த்திகளு = 8000+20,000+400+53 = 28,453 மூர்த்திகள்
இல்லி பர்யந்த = ஏகாத்ம, அத்யாத்மாதி த்ரய, பிராணாதி தஷ ரூபங்கள் என இது வரை
அஹவு = இருக்கிறது
நால்கு ரூபகளனெரெ = அத்யாத்மாதி 3, இதயத்தில் இருக்கும் ரூபம் 1, என மொத்தம் 4 ரூபங்களின் சம்பந்தமான
வித்தரமனு = விளக்கத்தை
ஈ பரி = இப்படியாக
திளிது = அறிந்து
புருஷோத்தமன = புருஷோத்தமனை பரமாத்மனை
சர்வத்ர = எல்லா இடங்களிலும்
பூஜெயமாடு கொண்டாடு = பூஜித்துக் கொண்டாடு.
மேற்சொன்ன பத்யத்தில் இருக்கும் 14 ஸ்தானங்களிலும் இருக்கும் பகவத்ரூபங்களை சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறார் தாசராயர். அனைவரின் இதயத்தில் இருக்கும் ரூபம் 1. அத்யாத்மாதி ரூபங்கள் 3. என இந்த நான்கு ரூபங்களில் உள்ள 10326 ரூபங்கள், தசபிராணர்களில் இருக்கும் ரூபங்கள் 18127 என மொத்தம் 28,453 என மேற்சொன்ன 14 ஸ்தானங்களில் மொத்தம் 28,453 ரூபங்களின் விளக்கத்தை அறிந்து, அனைத்து இடங்களிலும் பரமாத்மனை பூஜிக்க வேண்டும், மகிழ்ச்சி அடையவேண்டும் என்பது பொருள்.
***
No comments:
Post a Comment