#4 - பஞ்சதன்மாத்ர சந்தி
***
கலுஷவில்லத த3ர்ப்ப1ணதி3 ப்ரதி
ப2லிஸி ஸர்வ பதா3ர்த்த2க3ளு க
ங்கொ3ளிஸுவந்த3தி3 பி3ம்ப3 ஜட3 சேதனக3ளொளகி3த்து |
பொளெவ ப3ஹுரூபத3லி ஸஜ்ஜன
ரொளகெ மனத3ர்ப்ப1ணதி தா1 நி
ஸ்சல நிராமய நிர்விகார நிராஸ்ரய அனந்த ||4
கலுஷவில்லத = தூய்மையான
தர்பணதி = கண்ணாடியில்
ப்ரதிபலிஸி = பிரதிபலித்து
சர்வ பதார்த்தகளு = அனைத்து பதார்த்தங்களும்
கங்கொளிசுவந்ததி = கண்ணுக்குத் தெரிவதைப் போல
பிம்ப = பிம்பரூபியான பரமாத்மன்
ஜட சேதனகளொளகித்து = ஜட சேதனர்களில் இருந்து
பஹுரூபதலி = அனேக ரூபங்களால்
பொளெவ = ஒளிர்கிறான்
சஜ்ஜனரொளகெ = சஜ்ஜனர்களில்
மனதர்ப்பணதி = மனம் என்னும் கண்ணாடியில்
அனந்த = அனந்த ரூபங்களைக் கொண்ட
நிராஸ்ரய = யாரையும் நம்பியிருக்காத, ஸ்ரீபரமாத்மன்
தா = தான்
நிஸ்சல = நிஸ்சலனாக (நிலையானவன்)
நிராமய = நோய்கள் அற்றவனாகவும்
நிர்விகார = எவ்வித குறைகளும் அற்றவன்
பொளெவ = ஒளிர்கிறான்.
பிம்ப பிரதிபிம்பர்கள் என்னும் வகையில், பகவத் உபாசனையைப் பற்றி விளக்குகிறார். தூய்மையான கண்ணாடியில் பார்க்கும்
பொருட்கள் அனைத்தும் அதன் பிரதிபிம்பமாக எப்படி தோன்றுகிறதோ, அப்படியே பிம்பரூபியான ஸ்ரீபரமாத்மனுக்கு நித்யமான, ஜீவனஸ்வரூப தேகம் கண்ணாடியைப் போல இருக்கிறது. அந்த ஸ்வரூப தேகம் என்னும்
கண்ணாடியில் நித்யமான பிம்பரூபியான பரமாத்மனின் பிரதிபிம்பமே ஜீவனாக பிரதிபலித்து
தெரிகிறது. பிம்பரூபி ஒருவனே ஆனாலும், சரீரங்கள் வேறாகையால், பற்பல ப்ரதிபிம்பங்களாக காட்சியளிக்கிறது. உபாதி பேதத்தினாலேயே சாத்விகாதி
மூன்று வித ஜீவர்களாக இருக்கிறது.
தீபமானது எப்போதும் ஒரே மாதிரியான ஒளியைக்
கொடுத்தாலும், மேலிருக்கும் சிம்னிக்கேற்ப, சிவப்பு, வெள்ளை, மஞ்சள், கருப்பு என எப்படி பல வண்ணங்களாக தெரிகிறதோ. அதுபோலவே பரமாத்மனின் ரூபமானது
நிஸ்சல,
நிராமய மற்றும் நிராஸ்ரயமாக இருந்தாலும், ஜீவ ஸ்வரூபம் அதன் தேகத்தை அனுசரித்து, சாத்விக, ராஜஸ,
தாமஸ என்னும் பேதங்களாக தெரிகிறது.
ஜ்யோதிர்யதைவோதக பார்த்திவேஷ்வத: ஸமீர வேகானுகதம்
விபாவ்யதே -- என்னும் பாகவத 10ம் ஸ்கந்த வாக்கியத்தின்படி, தண்ணீரில் தெரியும் சூரியனின் பிரதிபிம்பமானது, தண்ணீர் ஆடும்போது, உடைந்திருப்பதைப் போல தெரிகிறது.
அதே பிரதிபிம்பம், ஒரு சிலையில் தெரியும்போது, தெளிவாக நிஸ்சலமாக தெரிகிறது.
இப்படி சூரியனின் பிரதிபிம்பமானது, தெளிவாகவும் / உடைந்தது போலவும்
தெரிவதற்கு, தண்ணீரும், சிலையும் காரணங்களே தவிர, சூரியனின் கிரணங்களில் எவ்வித
பிரச்னைகளும் இல்லை. அதுபோலவே, ஜீவர்களின் ஸ்வரூப யோக்யதைக்கேற்ப, பிரதிபிம்பரான ஜீவரே தோஷிகள் ஆகுவரே தவிர, பரமாத்மன் தோஷியல்ல. அதில், சாத்விகரான யோக்ய ஜீவர் மட்டும்
தூய்மையான, நிஸ்சலமான தம் மனம் என்னும் தர்மங்களில் கூடி ஒளிரும் பிம்பரூபியான பரமாத்மனை
காண்பர்.
சூரியன் எப்போதும் ஒளிர்பவனே ஆனாலும், மேகங்கள் மறைத்துவிட்டால் சூரியனை எப்படி காணமுடியாதோ, அப்படியே பரமாத்மன், தமக்குள் பிம்பரூபியாக இருந்து
ஒளிர்ந்து கொண்டிருந்தாலும், அஞ்ஞானிகளும், அயோக்யர்களும், அஞ்ஞானத்தில் மூழ்கி, அவனைக் காணமாட்டார்கள். ஜடங்களில்
ஜடரூபனாகவும், சேதனர்களில் சேதனரூபியாகவும், அனைவரிலும் ஒளிர்பவனாகவும்
இருப்பதை ஞானிகள் மட்டுமே அறிவார்கள்.
பரமாத்மன் நிஸ்சலமாக இருக்கிறான் என்றால் கல் போன்று
இருக்கிறான் என்று அர்த்தமல்ல. ஜடத்தில் நிஸ்சலமாக இருக்கிறான். ஜடசேதனாதிகளில் ‘சலிஸதெ’ என்றால் ஸ்திரமாக இருக்கிறான் என்று பொருள். மனுஷ்யாதி சரீரங்களில்
இருந்தாலும், ஜீவனுக்கு அவன் யோக்யதைக்கேற்ப நோய்கள் வந்திருந்தாலும், தான் மட்டும் நிரோகியாக இருக்கிறான். ஜீவன் சுக துக்கங்களால் விகாரம்
(தோற்றத்தில் மாற்றம்) பெற்றாலும், தான் நிர்விகாரனாக இருக்கிறான்.
ரமா பிரம்மாதி அனைத்து சேதனர்களும், ஜடர்களும் தன்னை நம்பியவர்களாக இருந்தாலும், தான் யாரையும் நம்பியவனாக இருப்பதில்லை. தான், ஒருவனே ஆனாலும், அனந்தரூபனாக இருக்கிறான். ஆகையால், தாசராயர், நிஸ்சல, நிராமய, நிர்விகார நிராஸ்ரய என்னும் சிறப்பு குணங்களை சொல்கிறார். இதிலிருந்து ஜீவ
பரமாத்மரின் வேறுபாடுகளை காட்டுவது போலவும் ஆயிற்று. ஜீவன், தேகத்தை விட்டுப் போகிறவன் ஆகையால், சலன். ஜீவன் நோய்களால்
பீடிக்கப்படுபவன். இந்த இரண்டும் பரமாத்மனுக்கு இல்லை. ஜீவன் சுகதுக்காதிகளால்
விகாரம் பெறுகிறான். பரமாத்மன் நிர்விகாரன். ஜீவன், பராஸ்ரயன், அஸ்வதந்த்ரன். பரமாத்மன் நிராஸ்ரயன், ஸ்வதந்த்ரன். இத்தகைய பற்பல
ரூபங்களால் ஒளிரும் பரமாத்மனை ஞானிகள் மட்டுமே காண்பர்.
***
No comments:
Post a Comment