ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, April 1, 2020

#28 - வியாப்தி சந்தி

#28 - வியாப்தி சந்தி


மளல மனெகளமாடி3 மக்களு
கெலவு காலதொ3ளாடி3 மோத3தி3
து1ளிது3 கெ1டிசுவ தெ1ரதி3 லகு1மீரமண லோககள |
ஹலவு பகெயலி நிர்மிசுவ, நி
ஸ்சலனு தானாகி3த்து3 சலஹுவ
எலருணிய வோல் னுங்குவவகெல்லிஹுதோ3 சுக2து3க்க ||28


மளல = மண் அல்லது மண்ணினால்
மனெகள மாடி = வீடுகளை செய்து
மக்கள் = குழந்தைகள்
கெலவுகாலதலாடி = சிறிது நேரம் விளையாடிவிட்டு
மோததி = மகிழ்ச்சியுடன்
துளிது கெடிசுவ தெரதி = அதை எட்டி உதைத்து உடைத்து விடுவதைப் போல
லகுமிரமண = ஸ்ரீபரமாத்மன்
லோககள = உலகங்களை
ஹலவுபகெயலி = பற்பல விதங்களில்
நிர்மிசுவ = ஸ்ருஷ்டித்து
நிஷ்சலனு தானாகி = அ-ஸ்திரமான ஜடங்களில் ஸ்திரமாக தான் இருந்து
சலஹுவ = அனைத்தையும் காப்பாற்றுவான்
எலருணியவோல் = காற்றை உண்ணும் பாம்பு, தன் முட்டைகளை தானே உண்ணுவதைப் போல
நுங்குவவகெ = உண்ணும் பரமாத்மனுக்கு
சுகதுக்க = தேகங்களில் இருக்கும் சுக துக்கங்கள்
எல்லிஹதோ = எங்கு இருக்கும்? (இருக்கவே இருக்காது என்று பொருள்).

குழந்தைகள் விளையாடுவதற்காக மணலில் வீடு கட்டி சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் அதனுடன் விளையாடிவிட்டு, பிறகு தங்கள் கால்களிலேயே அதை எட்டி உதைத்து, அந்த மணல் வீட்டை இடித்துவிடுவார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அந்த வீடு கட்டும்போதும் மகிழ்ச்சியே, விளையாடும்போதும் மகிழ்ச்சியே, அதை இடிக்கும்போதும் மகிழ்ச்சியே. அதை கட்டும்போது, கட்டவேண்டுமே என்கிற ஆயாசம் இல்லை. அதை இடிக்கும்போது துக்கமும் இல்லை. அதுபோல, பரமாத்மனும் தன் லீலைகளால் கஜ துரகாதி 84 லட்ச யோனிகளில் அபரிமித ஜீவராசிகளை ஸ்ருஷ்டிக்கிறான். அதாவது, யானை குதிரை மனுஷ்யாதி ஸ்தூல சரீரங்களை ஜீவர்களின் லிங்க சரீரங்களின் மேல், ஒரு உறையாக ஸ்ருஷ்டிக்கிறான். அந்த தேகங்களில் அவர்களைப் போல இருந்து, கர்மங்களை செய்து, செய்வித்து, விளையாட்டினைப் போலவே அனைவரையும் காப்பாற்றுகிறான். 

கட்டிய வீட்டினை குழந்தைகள் இடிப்பதைப்போல, விளையாட்டினைப் போல அந்த சரீரங்களை தானே அழிக்கிறான். பூர்ணானந்த ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மனுக்கு ஸ்ருஷ்டிப்பதால் மகிழ்ச்சியோ, நாசம் செய்வதால் வருத்தமோ இருப்பதில்லை. இதற்கு தாசராயர் இன்னொரு உவமையையும் கொடுக்கிறார். பாம்பு, தான் இடும் தன் முட்டைகளை, தானே தின்றுவிடுவதைப் போல, அப்போது அதற்கு சுக துக்கங்கள் எப்படி இல்லையோ, அதுபோல, ஸ்ரீபரமாத்மன் ஸ்ருஷ்டிக்கும்போதும், அழிக்கும்போதும், தான் அதற்கு சம்பந்தப்படாமல், அதாவது சுக துக்கங்களால் பாதிக்கப்படாமல் இருக்கிறான்.

***


No comments:

Post a Comment