ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, April 21, 2020

#6 - விபூதி சந்தி

#6 - விபூதி சந்தி


கரண நியாமகனு தானுப
கரணதொ3ள கை3வத்தெரடு ஸா
விரத3 ஹதினைததி31 ஷதரூபங்க3ளனெ த4ரிஸி |
இருதிஹனு தத்ரூபனாமக3
ளரிது பூஜிஸுதிஹர பூஜெய
நிருத கைகொம்ப த்ருஷார்த்தனு ஜலவ கொம்ப3ந்தெ1 ||6


கரண நியாமகனு = இந்திரியங்களின் பிரேரகனான ஸ்ரீபரமாத்மன்
தா = தான்
வுபகரணதொளகெ = பூஜைக்குப் பயன்படுத்தும் பொருட்களில்
ஐவத்தெரடு சாவிர ஹதினால்கதிக ஷதரூபகளனெ = 53114 ரூபங்களை
தரிஸி = தரித்து
இருதிஹனு = இருக்கிறான்
தத்ரூப நாமகளனரிது = கை, கால் ஆகியவற்றில் அந்தந்த ரூபங்களை தரித்து, அதில் அந்தர்யாமியாகவும் இருந்து, மேற்கூறிய அவ்வளவு ரூபங்களாலும் இருக்கிறான் என்று அறிந்து
பூஜிஸுதிஹர = பூஜையை செய்பவரின்
பூஜெய = பூஜையை
நிருத = தினந்தோறும் (எப்போதும்)
த்ருஷார்த்தனு = தாகம் கொண்டவன்
ஜலவ = தண்ணீரை
கொம்பந்தெ = குடிப்பதைப்போல
கைகொம்பனு = ஏற்றுக்கொள்வான்

ஞானேந்திர, கர்மேந்திரியங்களை நடத்துபவனான ஸ்ரீபரமாத்மன், பூஜைக்குப் பயன்படுத்தும் பொருட்களில், அதன் எண்ணிக்கையின்படி, வு=4, ப=1, க=1, ர=3, ண=5, இதை வலப்பக்கத்திலிருந்து படித்தால், 53114 ஆகிறது. அவ்வளவு பகவத் விபூதி ரூபங்களை பூஜைக்கான சாதனங்களில் (பதார்த்தங்களில் / பொருட்களில்) அறிந்து, பூஜிப்பவர்களின் பூஜையை, தாகம் எடுத்தவன் உடனடியாக எப்படி தண்ணீரைக் குடிக்கிறானோ, அதுபோல பரமாத்மன் ஏற்றுக்கொள்கிறான். 

***

No comments:

Post a Comment