ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, April 25, 2020

#14 - விபூதி சந்தி

#14 - விபூதி சந்தி


கோ3ளக13ளு ரமாரமணன நி
ஜாலயக3ள னுதினதி ஸம்ப்ர
க்‌ஷாலனெயெ ம்மார்ஜனவு க1ரணக3ளெ தீ3பக3
ஸாலு தத்தத் விஷயக3
ம்மேளனவே பரியங்க1 தத்ஸு2
தேளிகெ3யெ ஸுப்பத்திகா3த்ம நிவேத3னவே வஸன ||14


கோளகளு = கை கால்களால் ஆன இந்த ஸ்தூல தேகம், அதன் உள்ளே இருக்கும் அனிருத்த தேகம், லிங்கதேகம் ஆகியவை 
ரமாரமணன = ரமாபதியின்
நிஜாலயகளு = தேவாயலங்கள்
அனுதினதி = தினந்தோறும்
ப்ரக்‌ஷாலனவெ = தேகத்தை கழுவுவது (ஸ்னானம் செய்வது)
சம்மார்ஜனவு = பரமாத்மனின் கோயில்களை கழுவி, துடைப்பது
கரணகளெ = கை, கால் ஆகிய கரணங்களே
தீபகள சாலு = தீபங்களின் வரிசை
தத்தத் விஷயகள = சம்மேளனவெ = கண் காது ஆகிய இந்திரியங்களுக்கு, ரூப, ரஸ முதலான மாத்ரா குணங்களை பொருத்துவது.. அதாவது, கண்களால் பார்ப்பது, காதுகளால் கேட்பது என்று பொருள். இவையே, 
பரியங்க = படுக்கை
தத்சுக தேளிகெயெ = பார்த்து, கேட்டு அனுபவிக்கும் சுகமே
சுப்பத்திகெ = போர்வை
ஆத்ம நிவேதனெ = தன் சரீரத்தையே பரமாத்மனுக்கு சமர்ப்பணம் செய்வதே
வஸன = வஸ்திரம்.

தன் தேஹேந்திரியங்களால் தான் செய்யும் அனைத்து கர்மங்களும் பரமாத்மனின் பூஜை என்று எண்ண வேண்டும் என்னும் விஷயத்தை இங்கு விவரிக்கிறார் தாசராயர். விபூதி சந்தியென்று சொல்லிவிட்டு, இதற்கு சம்பந்தமில்லாத விஷயங்களை தாசராயர் இங்கு ஏன் சொல்கிறார் என்று கேட்கக்கூடாது. 

அது ஏனெனில், முந்தைய பத்யங்களில், தன் இந்திரியங்களிலும், பஞ்ச மஹாபூதங்களிலும், தன்மாத்ரா குணங்களிலும், விபூதியை சிந்தித்து பூஜிக்கும் விதத்தை சொல்லியிருந்தார். ‘சங்கோச விஸ்தராப்யாஞ்ச கதயந்தி மனீஷிண:’ என்னும் வாக்கியத்திற்கேற்ப, முதலில் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு, அதையே விளக்கமாக சொல்வது ஞானிகளின் சம்பிரதாயம் (வழக்கம்). அதைப் போலவே தாசராயரும், ’பாந்தளவெ மொதலாத’ என்னும் பத்யத்தினால் ஆகாயாதி ஒவ்வொன்றிலும் புதிது புதிதான பற்பல விதமான பூஜாசாதன த்ரவ்யங்களை சிந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அந்த பூஜா சாதனங்களையே இந்த பத்யங்களிலும் தொடர்ந்து சொல்லி வருகிறார். 

தேஹேந்திரியங்களால் செய்யப்படும் அனைத்து விஷயங்களும் பூஜை என்றே சிந்திக்க வேண்டும் என்று சொன்னது சம்பந்தமில்லாத விஷயங்கள் இல்லை என்று அறியவேண்டும். ரமாபதியான ஸ்ரீபரமாத்மனுக்கு, நம் ஸ்தூல தேகம், அனிருத்த தேகம், சூக்‌ஷ்ம லிங்க சரீரம் ஆகியவை தேவாலயங்கள் என்று நினைக்க வேண்டும். ஸ்னானங்களை செய்து நாம் தேகத்தை சுத்தம் செய்துகொள்வதே, பரமாத்மனின் கோயிலை நன்றாக கழுவித் துடைப்பது என்று நினைக்க வேண்டும். கை, கால்களே தீபங்களின் வரிசை. பார்ப்பது, கேட்பது ஆகிய விஷய அனுபவங்களே படுக்கை. அந்த அனுபவங்களால் கிடைக்கும் சுகங்களே போர்வை. தன் சரீரம், தன் மனைவி, மக்கள் ஆகிய அனைத்தையும் பரமாத்மனுக்கு ஒப்படைப்பதே வஸ்திரம். 

***

No comments:

Post a Comment