#15 - போஜனரசவிபாக சந்தி
ஈரெரடு சாவிரத முன்னூராத மேல் நால்கதிக எப்பத்து = (2+2)*1000=4000 + 300+80+4 = 4384
ரூபதிம் = ரூபங்களால்
விக்ஞானமய = விக்ஞானமய என்ற பெயரில்
வாசுதேவனு = வாசுதேவன் என்னும் பகவந்தன்
மஹதாதிதத்வ = மஹத் தத்வ முதலான தத்வங்களில்
தத்பதிகளொளகெ = மஹத் முதலான தத்வங்களின் அபிமானிகளான பிரம்மாதி தேவதைகளுக்குள்
வியாபிசிஹ = நிலைத்திருக்கிறான்
ஈ புருஷ நாமகன = இந்த புருஷ நாமகனான வாசுதேவன்
ஷுப = மங்களகரமான
ஸ்வேதாபளெனிஸி = வியர்வையிலிருந்து உதித்த விரஜா நதி
ரமாம்ப = ரமா நாமகளான ஜகன்மாதா
தா = தான்
பிரம்மாபரோக்ஷிகளாதவர = பிரம்ம அபரோக்ஷத்தைப் பெற்று, முழுமையான சாதனைகளை செய்தவர்களுக்கு, அவர்களின் முக்திகாலத்தில்
லிங்காங்க = லிங்க தேகத்தை
கெடிசுவளு = பங்கம் செய்கிறாள்.
***
ரூபதிம் விக்ஞானமய னெ
ம்பீ3பெ1சரினிம் வாசுதே3வனு
வ்யாபிசிஹ மஹதா3தி3 த1த்வதி தத்ப1தி1களொளகெ3 |
ஈ புருஷ நாமகன ஷுபஸ்வே
தா3பளெனிப ரமாம்ப3 தா பிர
ம்மா பரோக்ஷிகளாத3வர லிங்கா3ங்க3 கெடி3சுவளு ||15
ஈரெரடு சாவிரத முன்னூராத மேல் நால்கதிக எப்பத்து = (2+2)*1000=4000 + 300+80+4 = 4384
ரூபதிம் = ரூபங்களால்
விக்ஞானமய = விக்ஞானமய என்ற பெயரில்
வாசுதேவனு = வாசுதேவன் என்னும் பகவந்தன்
மஹதாதிதத்வ = மஹத் தத்வ முதலான தத்வங்களில்
தத்பதிகளொளகெ = மஹத் முதலான தத்வங்களின் அபிமானிகளான பிரம்மாதி தேவதைகளுக்குள்
வியாபிசிஹ = நிலைத்திருக்கிறான்
ஈ புருஷ நாமகன = இந்த புருஷ நாமகனான வாசுதேவன்
ஷுப = மங்களகரமான
ஸ்வேதாபளெனிஸி = வியர்வையிலிருந்து உதித்த விரஜா நதி
ரமாம்ப = ரமா நாமகளான ஜகன்மாதா
தா = தான்
பிரம்மாபரோக்ஷிகளாதவர = பிரம்ம அபரோக்ஷத்தைப் பெற்று, முழுமையான சாதனைகளை செய்தவர்களுக்கு, அவர்களின் முக்திகாலத்தில்
லிங்காங்க = லிங்க தேகத்தை
கெடிசுவளு = பங்கம் செய்கிறாள்.
வாசுதேவன் என்னும் பெயரை எண்ணிக்கையில் பார்த்தால், வா=4 சு=8 தே=3 வ=4. இதை வலதுபுறமாக படித்தால் 4384 என வருகிறது. வாசுதேவ நாமகனான ஸ்ரீபரமாத்மன் இவ்வளவு ரூபங்களால், விக்ஞானமயன் என்று பெயரில், மஹத் தத்வ, அஹங்கார தத்வ முதலான தத்வங்களிலும், தத்வாபிமானி தேவதைகளிலும் நிலைத்திருக்கிறான். இத்தகைய புருஷ நாமகனான வாசுதேவரூபி ஸ்ரீபரமாத்மனின் பத்னியான ஜகத்ஜனனியான ரமாதேவி, பரமாத்மனின் வியர்வையிலிருந்து, விரஜா நதி என்னும் பெயரில் பிறந்திருக்கிறாள். இவள், முக்தியோக்யரான அனைத்து ஜீவர்களும், பிரம்ம அபரோக்ஷத்தைப் பெற்று தங்களின் சாதனைகளை முடித்துக்கொண்ட பிறகு, பிரம்மலோகத்தை அடைந்து சில காலம் இங்கு இருந்து பின் முக்திக்கான காலம் வந்தபோது, பிரம்மனுடன் சேர்ந்து, விரஜா நதி என்னும் தன்னில் ஸ்னானம் செய்வித்து, அப்போது அவர்களின் லிங்கதேகத்தை பங்கம் செய்கிறாள்.
***
No comments:
Post a Comment