ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, April 5, 2020

#5 - போஜனரசவிபாக சந்தி

#5 - போஜனரசவிபாக சந்தி


க்‌ஷீரக3த ரசரூபக3ளு மு
ந்னூரு மேலைவத்து நாலகு
சாரு க்4ருதக3த ரூபக3ளு இப்பத்தரொம்பத்து |
ஸார கு33தொளகைது3 சாவிர
னூர ஒந்து3 சுரூப த்வி
ஸ்ராரெரடு ஷத பஞ்சவிம்ஷதி ரூப ப2லக3ளலி ||5


க்‌ஷீரகத ரசரூபகளு = பாலில் இருக்கும் சுவையில் இருக்கும் பகவத் ரூபங்கள்
முன்னூரு மேலைவத்து நாலகு = 354
சாரு = மனோஹரமான (சுவையான)
க்ருதகத = நெய்யில் இருக்கும்
ரூபகளு = பகவத் ரூபங்கள்
இப்பத்தரொம்பத்து = 29
குடதொளகெ = வெல்லத்தில்
ஐதுசாவிர நூர ஒந்து = 5101
சுரூப = உத்தமமான பகவத் ரூபங்கள்
பலகளலி = பழங்களில்
த்விசஹஸ்ர = 2,000
ஆரெரடு ஷத = (6+2)x 100 = 800
பஞ்சவிம்ஷதி = 25. மொத்தம் 2,825
ரூப = பகவத் ரூபங்கள் இருக்கிறதென்று அறியவேண்டும்.

முந்தைய பத்யத்தின் சாரமாக, அறுசுவைகளில் அடங்கியிருக்கும் பகவத்ரூபங்களை சொல்லி, இப்போது பால் முதலியவற்றில் அடங்கியிருக்கும் பகவத்ரூபங்களை தனித்தனியாக சொல்கிறார். பாலில் இருக்கும் இனிப்புச் சுவையில் 354 பகவத்ரூபங்களை சிந்திக்கவேண்டும். சிறந்த பதார்த்தமமான நெய்யில் 29 பகவத்ரூபங்களையும், வெல்லத்தில் 5101 ரூபங்களையும், பழங்களில், பழச்சாறுகளில் 2825 ரூபங்களையும் சிந்திக்கவேண்டும். 

***

No comments:

Post a Comment