ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, April 16, 2020

#26 - போஜனரசவிபாக சந்தி

#26 - போஜனரசவிபாக சந்தி

ஜீவக்ருத கர்மக3ள பி3டதெ ர
மாவரனு ஸ்வீகரிஸி ப2லகள
நீவனதிகாரானுசாரதி3 அவரிக3னவரத |
பாவகனு சர்வஸ்வ பு4ஞ்சிஸி
தா விகாரவனைதனொம்மெகு3
பாவனகெ பாவனனெனிப ஹரியெம்பு3தே3னரிது3 ||26

ஜீவக்ருத கர்மகள = ஜீவர்கள் தங்கள் கர்மங்களை விடாமல்
ரமாதவனு = லட்சுமியைவிட உத்தமனான பரமாத்மன்
ஸ்வீகரிஸி = ஏற்றுக்கொண்டு
அவரிகெ = அந்த ஜீவர்களுக்கு
அதிகாரானுசாரதி = அந்த ஜீவர்களின் தகுதிக்கேற்ப
அனவரத = தினந்தோறும் (எப்போதும்)
பலகளனீவ = பலன்களைக் கொடுக்கிறான்
பாவகனு = அக்னி
சர்வஸ்வ புஞ்சிஸி = நல்லது கெட்டது என்று பார்க்காமல் அனைத்தையும் எரித்து உண்பதைப் போல
ஒம்மெகெ = ஒரு சமயத்திலும்
விகாரவனெய்து = தன் உருவத்தை இழப்பதில்லை. இப்படியிருக்கையில்,
பாவனகெ பாவனனெனிப = பவித்ரமான கங்காதி நதிகளை, பவித்ரம் ஆக்குபவன் என்ற பெயரைப் பெற்றவனான
ஹரி = ஸ்ரீபரமாத்மன்
உம்புதேனரிது = நாம் கொடுக்கும் கர்ம பலன்களை ஏற்றுக் கொள்வதில், என்ன ஆச்சரியம்?

ரமாதேவியின் பதியான (அல்லது ரமாதேவியரைவிட உத்தமனான) பரமாத்மன், தேவமனுஷ்யாதி ஜீவர்கள் செய்யும் புண்யபாபாதி கர்மங்கள், அவற்றை செய்விப்பது பகவந்தனே என்று நினைத்து அவனுக்கு சமர்ப்பிக்க, ஸ்ரீஹரி அவற்றை விட்டுவிடாமல் ஏற்றுக்கொண்டு, தன் பக்தர்கள் செய்த பாவ கர்மங்களை எரித்து (அழித்து), அவரவர் செய்த புண்யங்களுக்கேற்ப, அவரவர்களின் தகுதிக்கேற்ப, அவரவர்களுக்கு பலன்களைக் கொடுக்கிறான். 

ஆனால், அப்ராக்ருதனான ரமா வல்லபன், ப்ராக்ருதர்கள் செய்யும் பூஜைகளை, இவர்கள் கொடுக்கும் ப்ராக்ருத அன்னங்களை எப்படி ஏற்றுக்கொள்கிறான் என்றால்: 


அக்னி அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனாலும் அதற்கு எந்தவொரு விகாரமும் வருவதில்லை. தேவதைகளின் தாரதம்யத்தில் ‘விஷ்ணு: பரமோ அக்னிரவம:’ என்று அக்னியை கடைசியானவன் என்று சொல்லியிருக்கின்றனர். இப்படிப்பட்ட அக்னியே அனைத்தையும் ஏற்று, விகாரமாகாதவனாக இருக்கையில், கங்காதி பவித்ரமான நதிகளை, பவித்ரமாக ஆக்குபவன் என்னும் பெயரைப் பெற்ற ஸ்ரீபரமாத்மன் ப்ராக்ருத உணவினை உண்டு, அவற்றை பவித்ரமாக ஆக்குவான் என்றால் அதில் என்ன ஆச்சரியம்?

***

No comments:

Post a Comment