#10 - விபூதி சந்தி
வித்த தே3ஹாகா3ர தா1ரா
ப1த்ய மித்ராதி3க3 ளொளகெ3 கு3ண
சித்த புத்4யா தி3ந்த்ரியக3ளொளு ஞான கர்மதொ3ளு |
த1த்த1தா3ஹ்வயனாகி3 க1ரெசுத1
சத்யசங்கல்பானு ஸாரதி3
நித்யத3லி தா1 மாடி3 மாடி3பனெந்து3 ஸ்மரிஸுதி1ரு ||10
வித்த தேஹாகார தாராபத்ய = வித்த = த்ரவ்ய, தேக, அகார = வீடு. தாரா = கணவன் / மனைவி. அபத்ய = மக்கள்.
மித்ராதிகளொளகெ = நண்பர்கள், ஆகியோர்களில்
குண சித்த புத்யாதிந்த்ரியகளொளு = குண = சத்வாதி குணங்களிலும். சித்த, புத்தி, மனஸ், அஹங்காரம் ஆகிய இந்திரியங்களிலும்
ஞான கர்மதொளு = ஞானேந்திரிய கர்மேந்திரியங்களிலும்
தத்ததாஹ்வயனாகி கரெஸுத = அந்தந்த பெயர்களில் அழைத்துக் கொண்டு
ஸத்யசங்கல்பானு சாரதி = தான் சத்யசங்கல்பன் என்று அழைத்துக் கொள்வதற்கு ஏற்ப
நித்யதலி = தினமும்
தா = தான்
மாடி மாடிபனெந்து = செய்து, செய்விக்கிறான் என்று
ஸ்மரிசுதிரு = நினைத்துக் கொள்.
தன் தேகம், மனைவி / கணவன், மக்கள் ஆகியோர்களில் பகவத்விபூதியை அறியவேண்டுமென்று சொல்கிறார். தன் வீட்டில் இருக்கும் த்ரவ்யம் (பொருட்கள்), தன் தேகம், வீடு, மனைவி மக்கள், நண்பர்கள் ஆகியோர் என அனைவரிலும் அகண்ட ரூபத்தினால் பரமாத்மன் இருந்து, பூஜைக்கு உதவும் பொருட்களாக இருக்கிறான் என்று அறியவேண்டும். மேலும், சாத்விக, ராஜஸ, தாமசர்களில் சத்ய, ரஜஸ், தமோ ரூபனாக இருந்து, தான், தன் மனைவி ஆகிய அனைவரின் சித்த, புத்தி, மனஸ், அஹங்காரகளிலும், ஞானேந்திரியங்களிலும், கர்மேந்திரியங்களிலும், அந்தந்த பெயரினால் அழைத்துக் கொண்டு, ‘சத்ய சங்கல்பதோ விஷ்ணுர் நான்யதாதுகரிஷ்யதி’ என்னும் பிரமாணத்தைப் போல, தினந்தோறும், மேற்சொன்ன மக்களில், இந்திரியங்களுக்குள்ளும் இருந்து, கர்மங்களை தான் செய்து, அந்த மக்களால் செய்விக்கிறான் என்று நினைக்கவேண்டும். தன்னிலும், மனைவி, மக்கள் ஆகியோரில் அகண்ட ரூபத்தையும், அவர்களின் கை, கால் ஆகிய இந்திரியங்களில் கண்ட ரூபத்தையும் நினைக்கவேண்டும்.
***
No comments:
Post a Comment