ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, April 19, 2020

#2 - விபூதி சந்தி

#2 - விபூதி சந்தி


ஜலத4ராக3ஸ தொளகெ3 சரிஸு
ஹலவு ஜீவர நிர்மிஸிஹ னத
ரொளு சஜாதி1 விஜாதி1 சாதா3ரண விசேஷக3|
தி1ளிது3 தத்தத் ஸ்தா2னதலி வெ
க்க3ளிஸி ஹப்பி33மனதி3 பூ1ஜிஸு
தலவ வ்யாப்த1ன ரூபக3ள நோடு3தலெ ஹிக்கு3தி1ரு ||2


ஜலதராகஸரொளகெ = ஜல=தண்ணீரில். தர=பூமியில், ஆகஸதொளகெ = ஆகாயத்தில்
சரிசுவ = சஞ்சாரம் செய்யும்
ஹலவு ஜீவர = நானாவித ஜீவராசிகளை
நிர்மிஸிஹனு = ஸ்ருஷ்டிப்பவன்
அதரொளகெ = அதில்
சஜாதி விஜாதி சாதாரண விசேஷகள திளிது தத்தத்ஸ்தானதலி = சஜாதியரான மனிதர்களில் அரசர்களிலும், விஜாதியரான மிருகங்களில் சிங்கத்திலும், அதிதி, விருந்தினர் முதலான சாதாரண மனிதர்களில் யதி முதலான விசேஷ ரூபங்களிலும், இப்படியாக அந்தந்த ஸ்தானங்களை
வெக்களிஸி = அதிகமாக
ஹப்பித = வியாபித்திருக்கும்
அலவ வ்யாப்தன = அனைத்திடங்களிலும் வியாப்தனான ஸ்ரீபரமாத்மன்
ரூபகள = ரூபங்களை
மனதி = மனதில்
பூஜிஸு = பூஜிப்பாயாக
நோடுதலி = சாதாரண விசேஷ சஜாதி விஜாதி வஸ்துகளில் விசேஷ ரூபங்களைப் பார்த்தவாறு
ஹிக்குதிரு = மகிழ்ச்சி அடையவேண்டும். 

தண்ணீரில், பூமியில், அதன் கீழுள்ள உலகத்தில், ஆகாயத்தில், அதன் மேலுள்ள ஸ்வர்க்காதி உலகங்களிலும் சஞ்சரிக்கும் அனைத்து பிராணிகளையும் ஸ்ரீபரமாத்மனே ஸ்ருஷ்டித்திருக்கிறான். இவற்றில் சஜாதி விஜாதி விபூதிகளை அறியவேண்டும். (சஜாதி, விஜாதி, சாதாரண, விசேஷ என்னும் சொற்களுக்கு முந்தைய பத்யத்தில் அர்த்தம் பார்க்கவும்). இப்படியாக, அந்தந்த பொருட்களில் உத்தமமானது எதுவோ, அதில் பகவந்தனின் விபூதி இருக்கிறது என்று அறிந்து மனதில் பூஜிக்கவேண்டும். விபூதியென்றால், கீதையில் சொன்ன இடங்களில் மட்டுமே என்று புரிந்து கொள்ளக்கூடாது என்னும் அபிப்பிராயத்திலேயே தாசராயர் ‘வெக்களிஸி ஹப்பித’ என்றார். 

நம் மனதில் நாமே சிந்தித்து அங்கங்கு இருக்கும் விபூதியை நினைக்கவேண்டும். கீதையில் சொன்னது மட்டுமே அல்லாமல், சாதாரண விபூதிகளை நாமே சிந்திக்க முடியும். பொதுவாக, ஒரு வயது, இரு வயதுக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தால், அதை பார்ப்பவர்களுக்கு மிகவும் அழகாகத் தோன்றும். ஸ்ரீபரமாத்மன், அங்கு அந்த மக்களின் ரூபத்தில் ஆடிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்து சஜாதி சாதாரண விபூதியை நினைக்கவேண்டும். அந்தக் குழந்தைகளில் எந்த குழந்தை மிகவும் அதிகமாக விளையாடுகிறதோ, மற்றும் மனிதர்களில் சாமான்ய மனிதர்களால் செய்யமுடியாத அசாத்திய காரியங்களை யாராவது ஒருவர் செய்தால், அங்கு சஜாதிய விசேஷ விபூதி ரூபம் இருக்கிறது என்று அறியவேண்டும். அலவவியாப்தி என்றால் ஓரிரு இடங்களில் மட்டுமன்றி அனேக இடங்களில் வியாபித்திருக்கிறான் என்று பொருள். இத்தகைய பகவத்ரூபங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டும். 

***

No comments:

Post a Comment