ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, April 6, 2020

#6 - போஜனரசவிபாக சந்தி

#6 - போஜனரசவிபாக சந்தி

விஷத3 ஸ்திர தீக்‌ஷணவு நிரஹர
3ளொளு மூரைதுஸாவிர
த்ரிஷதனவ ரூபக3ள சிந்திஸி பு4ஞ்சிபுது விஷய |
ஷ்வஸன தத்3வேஷரொளகி3த்தீ3
பெ1சரினிந்த3லி க1ரெசுவனு தே3
நிசிதரீப1ரி மனகெ பொ1ளெவனு ப3ல்ல விபு4தரிகெ ||6

ரசகளலி = மேலே கூறிய பால், நெய், வெல்லம், பழம் ஆகியவற்றில் முறையே விஷத = 354, ஸ்திர = 29, தீக்‌ஷண = 5101, நிரஹர = 2825 என்று சிந்தித்து, 
மூரைதுசாவிர த்ரிஷதனவ ரூபகள = 3+5= 8*1000 + 3*100 + 9 = 8309 ரூபங்களை
சிந்திஸி = சிந்தித்து, 
புஞ்சிபுது விஷய = உண்பதற்கு ஏற்ற உணவுகளை உண்ணவேண்டும். 
ஷ்வஸ தத்வேஷரொளகித்து = சித்தத்திற்கு அபிமானியான வாயுதேவரே முதலான தத்வாபிமானி தேவதைகளில் இருந்து
ஈ பெசரினிந்தலி = விஷத, ஸ்திர முதலான பெயர்களால்
கரெசுவனு = அழைத்துக் கொள்கிறான்
ஈ பரி = இந்த மாதிரி
தேனிசிதரெ = தியானம் செய்தால்
பல்ல = அறிந்த
விபுதரிகெ = ஞானிகளுக்கு
மனகெ = மனதில் 
பொளெவெனு = காட்சியளிப்பான். 


எண் கணித சாஸ்திரத்தை இங்கு குறிப்பிட்டிருக்கிறார் தாசராயர். அது என்னவெனில்: ’காதினவ, டாதி பஞ்ச, பாதி பஞ்ச, யாதி தச’. இதன் பொருள்: 

* க’வில் துவங்கி ஞ’வை விட்டு அதற்கு முன்னர் ‘ஜ’வரை மொத்தம் 9 எழுத்துக்கள். 
* ட’வில் துவங்கி ண வரை மொத்தம் 5 எழுத்துக்கள்
* ப வில் துவங்கி ம வரை மொத்தம் 5 எழுத்துக்கள்
* ய முதல் க்‌ஷ வரை மொத்தம் 10 எழுத்துக்கள்

இப்படி எண்களை குறிக்கும் சம்பிரதாயம் இருக்கிறது. மேலும் ‘அங்கானாம் வாமதோகதி:’ என்று, எண்களை வலது பக்கத்திலிருந்து இடதிற்கு சேர்த்து படிக்கவேண்டும். 

அதன்படி இங்கு விஷத, ஸ்திர, தீக்‌ஷண, நிரஹர என்று சொல்லியிருக்கிறார். இதில் :

விஷத = வி=4 ஷ=5 த=3 என 453 வந்தாலும், அதை 354 என்று படிக்கவேண்டும். இதுவே பாலில் இருக்கும் பகவத்ரூபங்கள்
ஸ்திர = ஸ்=7 தி=2 ர=2. இதில் ஸ்+தி இரண்டும் சேர்ந்து இருப்பதால், 7+2=9. ஆக 92. இதை 29 என்று படித்து, இதுவே நெய்யில் இருக்கும் பகவத்ரூபங்கள்
தீக்‌ஷ்ண = தீ=1 க்‌ஷ=10 ண=5. இதில் 10ஐ தனியாக 01 என்று மாற்றினால், 5101 என்று வருகிறது. இதுவே வெல்லத்தில் இருக்கும் பகவத்ரூபங்கள்
நிரஹர = நி=5 ர=2 ஹ=8 ர=2. இது 5282. இதை 2825 என்று படித்து, இதுவே பழங்களில் இருக்கும் பகவத்ரூபங்கள் என்று சிந்திக்க வேண்டும்.


இவை அனைத்து எண்களையும் கூட்டினால், மொத்தம் 8309 வருகிறது. உண்ணத் தகுதியான பதார்த்தங்களை உண்ணும்போது இந்த ரூபங்களை அந்தந்த சுவைகளில் சிந்தித்து உண்ணவேண்டும். இந்த தேகத்தில் இருக்கும் சித்த அபிமானியான வாயுதேவரே முதலான தத்வாபிமானி தேவதைகளில் இருந்து, பகவந்தன் விஷதாதி நாமங்களால் தன்னை அழைத்துக் கொள்கிறான். இப்படியாக சிந்தித்தால், கற்றறிந்த ஞானிகளுக்கு, அங்கங்கு அந்தந்த பகவத்ரூபங்கள் வெளிப்படும் (பகவந்தன் காட்சியளிப்பான்).

***




No comments:

Post a Comment