ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, April 3, 2020

#32 - வியாப்தி சந்தி

#32 - வியாப்தி சந்தி


எல்லரொளு தானிப்ப தன்னொள
கெ3ல்லரனு த3ரிசிஹனு அப்ரதி1
மல்ல மன்மதஜனக ஜக3தா3த்யந்த3 மத்3யகள |
3ல்ல, 4ஹுகு3ணப3ரித தா3னவ
தல்லண ஜகன்னாதவிட்டல
சொல்லனாலிஸி ஸ்தம்பதிந்தலி பந்த பகு1தனிகெ3 ||32

அப்ரதிமல்ல = ஒப்புமையில்லாத வீரனான
மன்மதஜனக = மன்மதனின் தந்தையான
தானவதல்லண = தானவர்களைக் கொல்பவனான
ஜகன்னாதவிட்டல = ஜகன்னாத தாசராயரின் இதய கமலத்தில் இருக்கும் பிம்பரூபியான ஸ்ரீஜகன்னாத விட்டலன்
எல்லரொளு = அனைத்து பிராணிகளிலும்
தானிப்ப = தான் இருக்கிறான்
தன்னொளகெ எல்லரனு தரிசிதனு = தன்னில் அனைத்தையும் / அனைவரையும் அடக்கியிருக்கிறான்
ஜகதாத்யந்த மத்யகள = உலகத்தின் ஆதி, அந்த்ய, மத்யங்கள் என எல்லா பாகங்களையும்
பல்ல = அறிந்தவன்
பஹுகுணபரித = அனந்தகுண பரிபூர்ணன்
பகுதனிகெ = பக்தனுக்கு அருள்வதற்காக
சொல்லலாலிஸி = பிரகலாதன் தன் தந்தைக்கு, இந்தத் தூணிலும் பகவந்தன் இருக்கிறான் என்று சொல்லியதைக் கேட்டு
கம்பதிந்த பந்த = அந்தத் தூணிலிருந்து நரசிம்ம ரூபத்தில் வந்தான்
(அத்தகைய நரசிம்ம ரூபி பரமாத்மனை நான் வணங்குகிறேன்).

எல்லரொளு தானிப்ப தன்னொளகெல்லரனு தரிசிஹனுஎன்று இந்த சந்தியின் கடைசி பத்யத்தில் சொல்லியிருக்கிறார் தாசராயர். பரமாத்மனை உபாசனை செய்து வருபவர்கள், இறுதிக்காலத்திலும் இப்படியே உபாசனை செய்து, சத்கதியை அடைவார்கள் என்று சொல்வதற்காக இந்த பத்யத்தில் இப்படி சொல்லியிருக்கிறார்.

பாகவத மூன்றாம் ஸ்கந்தத்தில், கர்தமன் தன் இறுதிக்காலத்தில் செய்த தியானத்தை விளக்கும்போது:

ஆத்மானம் சர்வபூதேஷு பகவந்தமவஸ்திதம் |
அபஷ்யத்சர்வ பூதானி பகவத்யபிஜாத்மனி ||
வாசுதேவே பகவதி சர்வக்ஞே ப்ரத்யகாத்மனி பரேண பக்திபாவேனலப்யாத்மா முக்தபந்தன: |
இச்சாத்வேஷ விஹீனேன சர்வத்ர சமசேதஸா |
பகவத்பக்தி யோகேன ப்ராப்தே பாகவதீம் கதிம் ||

அனைத்து பிராணிகளிலும் அந்த பகவந்தன் இருப்பதையும், அந்த பகவந்தனில் அனைத்து பிராணிகளும் இருக்கின்றன என்பதையும், அந்த பரமாத்மன் தம்முள் இருக்கிறான் என்பதையும் தியான யோகத்தின் மூலமாக அறிந்தார். இப்படி, சர்வக்ஞனான, தமக்குள் பின்னனாக இருக்கும் வாசுதேவ நாமக ஸ்ரீபரமாத்மனிடம் பக்தி கொண்டு, அந்த பகவத் ஸ்வரூபத்தை அறிந்து, பந்தங்களிலிருந்து முக்தராகி, ஆசை த்வேஷம் ஆகியவற்றை விட்டு, அனைத்து இடங்களிலும் நிலைத்திருக்கும் பகவந்தனின் ரூபங்களில் அறிவை வைத்து, இதன் மூலம் பரமாத்மனின் லோகத்தை அடைந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால், பரமாத்மனை அனைவரிடமும், அனைவரிடத்தில் பரமாத்மனையும், அதே பரமாத்மனை தனக்குள்ளும் இருக்கிறார் என்பதை அறியவேண்டும் என்று இந்த பதத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

தனக்கு சமம் என்று யாருமே இல்லாத, மன்மதனின் தந்தையான, இந்த உலகத்தில் ஆதி, அந்தம், மத்யம் என அனைத்து காலங்களிலும் இருக்கக்கூடிய, அந்த அனைத்து காலங்களையும் நன்கு அறிந்தவனான, மற்றும்
என்னபஷ்யந்தி பஷ்யந்தம் சக்‌ஷுர்யஸ்யனரிஷ்யதி |
தம்பூத நிலயம் தேவம் சுபர்ணமுபதாவத ||

என்னும் பாகவத வசனத்திற்கேற்ப, அனேக சூரியர்களை ஒரே நேரத்தில் பார்த்தாலும், பரமாத்மனின் கண்களுக்கு கூச்சம் ஏற்படாது. பிறர் ஒரே ஒரு சூரியனைக்கூட நேராக பார்க்கமுடியாதவர்களாக இருக்கின்றனர். சூரியன் பரமாத்மனை பார்க்க வேண்டுமென்றாலும், கூச்சத்தில் தன் கண்களை மூடிக்கொள்கிறான். பரமாத்மன் அனேக கோடி சூர்யர்களின் ஒளியைக் கொண்டிருக்கிறான் என்பது பொருள். மேலும் அனந்த குணங்களைக் கொண்டவன். தானவர்களைக் கொல்பவன்.

தாசராயரின் உபாஸ்ய மூர்த்தி, நரசிம்ம தேவர் ஆனதால், சந்தியின் இறுதி பத்யத்தில் நரசிம்மனையே போற்றுகிறார். தன் பிம்பமூர்த்தியான ஜகன்னாதவிட்டலன், தன் பக்தனான பிரகலாதன், தன்னுடைய தந்தைக்குக் கூறிய வசனம்: க்வாஸௌ யதி சர்வத்ர கஸ்மாத் ஸ்தம்பேன த்ருஷ்யதே’.

ஹிரண்யகசிபு: உன்னுடைய கடவுள் எங்கும் இருக்கிறான் என்று சொல்கிறாயே, அவன் எங்கு இருக்கிறான்?.

பிரகலாதன், அவன் அனைத்து இடங்களிலும் இருக்கிறான்.

ஹிரண்யகசிபு: எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்றால் இந்தத் தூணில் ஏன் இல்லை?

பிரகலாதன்: ஹே ஸ்தம்பனே! (என்றால் ஜடப்பொருளின் அரசனே என்று பொருள்). எல்லா இடங்களிலும் பகவந்தன் இருக்கிறான் என்றபிறகு, ஜடமான கம்பத்திலும் இருந்தே இருக்கிறான் என்பதால், அதை நிரூபிப்பதற்காக ஹே ஸ்தம்பனேஎன்று அழைக்கிறான்.

ஹிரண்யகசிபு: இப்போதே நான் உன்னை இந்த கதையால் அடிக்கிறேன். உன் ஸ்ரீஹரி இருப்பது உண்மையானால், வந்து உன்னை காப்பாற்றட்டும்.

என்று ஹிரண்யகசிபு பிரகலாதனை அடிக்க வரும்போது சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்உண்மையான பக்தனான பிரகலாதனின் வாக்கியத்தை உண்மையாக்குவதற்கு அந்த கம்பத்திலிருந்தே ஸ்ரீஹரி, நரசிம்ம ரூபத்தினால் வெளிவந்தான் -- என்னும் பாகவத வாக்கியத்தை தாசராயர் இங்கு குறிப்பிடுகிறார்.

இத்தகைய கருணைக்கடலான ஸ்ரீபரமாத்மனை நான் வணங்குகிறேன் என்று பொருள். இந்த சந்தி முழுக்க, பரமாத்மனின் வியாப்தியையே வர்ணித்திருப்பதால், இந்த கடைசி பத்யத்திலும் அந்த வியாப்தியையே சொல்லி, பகவன் மகிமையைக் கொண்டாடி, சந்தியை முடிக்கிறார் தாசராயர்.

வியாப்தி சந்தி இங்கு முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து. ***

No comments:

Post a Comment