ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, April 8, 2020

#11 - போஜனரசவிபாக சந்தி

#11 - போஜனரசவிபாக சந்தி


அக3ணிதாத்ம சுபோ4ஜன பதா
ர்த்த2கள ஒளகெ3 அகண்ட3னொந்தொ
ந்தகளி னொளனந் தாம்ஷதி3ந்த3லி க2ண்ட3னெந்தெ3னிஸி |
ஜக3தி3 ஜீவர த்ருப்திபடி3ஸு
ஸ்வக3தபே43 விவர்ஜிதன இ
ப்ப3கெ3ய ரூபவனரிது பு4ஞ்சிஸி அர்ப்பிஸவனடி3கெ3 ||11


அகணிதாத்ம = எண்ணிக்கையில்லா ரூபங்களைக் கொண்ட
சுபோஜன பதார்த்தகள = போஜனம் செய்வதற்கு ஏற்ற பதார்த்தங்களின்
ஒளகெ = உள்ளே
அகண்ட = அகண்ட என்றும்
ஒந்தொந்தகளினொள் = ஒவ்வொரு அம்சத்திலும்
அனந்தாம்ஷதிந்தலி = அனந்தமான அம்சங்களில் இருந்து
கண்டனெந்தெனிஸி = கண்ட என்ற பெயரைப் பெற்று
ஜகதி = உலகத்தில்
ஜீவர த்ருப்திபடிசுவ = ஜீவர்களை திருப்திப்படுத்தும்
ஸ்வகதபேதவிவர்ஜிதன = தன் ரூபங்களில் பரஸ்பரம் பேதங்கள் அற்ற ஸ்ரீபரமாத்மன்
ஈ பகெய = கண்டாகண்ட என்னும் இரு விதங்களான
ரூபவனு = ரூபங்களை
அரிது = அறிந்து
புஞ்சிஸி = போஜனத்தை உண்டு
அவனடிகெ = பரமாத்மனின் பாதாரவிந்தங்களில்
அர்ப்பிஸு = சமர்ப்பணம் செய்.

அனந்தானந்த ரூபங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன், உண்ணும் பக்‌ஷ்ய, பதார்த்தங்களில், அந்தந்த பெயர்களில் அகண்ட ரூபனாக இருந்து, அன்னத்தின் ஒவ்வொரு பருக்கையிலும், காய்கறிகளின் ஒவ்வொரு துண்டுகளிலும் கண்ட நாமகனாக இருக்கிறான். சிரோடி முதலான பக்‌ஷ்ய பதார்த்தங்களில் அகண்ட ரூபங்களில் இருக்கிறான். அதாவது, 100 சிரோடிகளை சேர்த்து வைத்தால், அந்த மொத்த பதார்த்தத்திலும் அகண்ட ரூபனாகவும், ஒவ்வொரு சிரோடியிலும் கண்டரூபனாகவும் இருக்கிறான். இப்படி கண்டாகண்ட ரூபங்களில் போஜ்ய வஸ்துகளில் இருந்தாலும், இந்த பகவத்ரூபங்களில் பரஸ்பரம் பேதங்கள் இல்லாதவனாக இருக்கிறான். சிரோடி, ஜிலேபி, அன்னம், ரசம் ஆகிய பதார்த்தங்களுக்கு பரஸ்பரம் பேதங்கள் இருந்தாலும், அவற்றில் அந்தந்த உருவங்களில் இருக்கும் பகவத்ரூபங்களுக்கு, குணாதிகளில் பரஸ்பரம் பேதம் இல்லை என்பதே இதன் பொருள். 

இப்படியாக பதார்த்தங்களில் கண்ட, அகண்ட ரூபங்களில் இருந்து, அந்தந்த பதார்த்தங்களை உண்ணும் பிராணிகளை திருப்திப்படுத்துகிறான் என்று சிந்தித்து, உண்டு, அதனை பரமாத்மனுக்கே அர்ப்பிக்கவேண்டும். 

இதை கேட்போர், பின்பற்றுவோர் என பலர் இருந்தாலும், தாசராயர் சொல்லும்போது ஒருமையிலேயே செய், அறி என்று சொல்வது எதற்காக என்றால், ‘சமுதாயைகவசன’ என்னும் இலக்கணக்குறிப்பினால், தன் சிஷ்ய மண்டலியை ஒரே குழுவாக நினைத்து தாசராயர் அவர்களிடம் இப்படி சொல்வதாக அறியவேண்டும். 

***


No comments:

Post a Comment