#31 - வியாப்தி சந்தி
ஒந்து கு3ணதொளனந்த கு3ணகளு
ஒந்து ரூப1தொ3ளிஹவு லோக1க3
ளொந்து ரூப1தி த4ரிஸி த1த்த1த்தர்த்த3 தொளஹொரகெ |
பா3ந்த3ளத3 வோலித்து1 ப3ஹு பெச
ரிந்த க1ரெசுத1 பூர்ணஞானா
நந்தமய பரிபரி விஹாரவ மாடி3 மாடி3சுவ ||31
ஒந்து குணதொளு = பரமாத்மனுக்கு இருக்கும் அனேக
குணங்களில் ஒரு குணத்தில்
ஒந்து ரூபதொளு = பரமாத்மனுக்கு இருக்கும் அனேக
ரூபங்களில் ஒரு ரூபத்தில்
லோககளு = அனந்த லோகங்கள்
இஹவு = இருக்கிறது. அந்த லோகங்களை
ஒந்து ரூபதி தரிஸி = ஒரு ரூபத்தால் தாரணை செய்து
தத்கத பதார்த்ததொளஹொரகெ = அனைத்து பிராணிகளின் உள்ளே
மற்றும் வெளியே
பாந்தளதவோலித்து = ஆகாயத்தைப் போல வியாப்தனாக இருந்து
பஹுபெசரிந்த = அனந்தானந்த நாமங்களால்
கரெசுத = அழைத்துக் கொள்ளப்படும்
பூர்ணா ஞானானந்தமய = பூர்ண ஞானானந்த ஸ்வரூபனான
ஸ்ரீபரமாத்மன்
பரிபரிய விஹாரவமாடி = பற்பல விதங்களில் சஞ்சரித்து
மாடிசுவ = அனைவரின் உள்ளேயும் இருந்து செயல்களை
செய்கிறான்.
ஸ்ரீபரமாத்மனிடம் இருக்கும் அனந்தானந்த குணங்களில்
ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால், அந்த ஒரு குணத்தில் அனந்தானந்த குணரூபங்கள் அடங்கியிருக்கின்றன. அதில்
இருக்கும் ஒரு ரூபத்தை எடுத்துக்கொண்டு பார்த்தால், அந்த ரூபத்தில் அனந்தானந்த லோகங்கள் காணப்படுகின்றன. அந்த லோகங்களை ஒரு
ரூபத்தால் தரித்து, அ லோகங்களில் இருகும் அனைத்து பதார்த்தங்களின் உள்ளேயும் வெளியேயும் அனைத்து
இடங்களிலும் ஆகாயம் வியாபித்திருப்பதைப் போல, நிர்லிப்தனாக, ஸ்வயம் பூர்ணானந்த ஞானமயனாக இருந்தாலும், அனைத்து பதார்த்தங்களின் நாமத்தினால் பற்பல விதங்களாக வடிவெடுத்து செயல்களை
செய்விக்கிறான்.
அதாவது, மனிதர்களில் மனிதனின் வடிவத்தில்
இருந்து,
மனித நாமத்தை தரித்து, யானை குதிரைகளில், யானை குதிரைகளின் வடிவில் இருந்து, நாமத்தைப் பெற்று, மனிதர்களுக்கு வாகனங்களாக இருக்கிறான். மனிதர்களாக அமர்கிறான். யானை
குதிரைகளில் இருந்து அவர்களை தூக்கிக் கொள்கிறான். மனிதர்களை யானை குதிரைகளின்
மேல் அமரச் செய்கிறான். இப்படி பற்பல வித காரியங்களை, பிராணிகளில் இருந்து தானும் செய்து அவர்களாலும் செய்விக்கிறான்.
***
No comments:
Post a Comment