#24 - போஜனரசவிபாக சந்தி
அபு3ஜஜாண்டோத3ரனு விபி1னதி3
ஷபரியெஞ்சலனுண்ட3 கோ3கு1ல
தப3லெயர னொலிஸித3னு ரிஷிபத்னியரு கொட்டன்ன |
சுபு4ஜ தா பு4ஞ்சிஸித ஸ்வரமண
குபு3ஜெக3ந்த4கெ ஒலித3 முனிக3ண
விபுத4ஸேவித பி3டுவனெ நாவித்த கர்மப2ல ||24
அபுஜஜாண்டோதரனு = பிரம்மாண்டத்தை தன் வயிற்றில் தரித்திருக்கும் ஸ்ரீபரமாத்மன்
விபினதி = காட்டினில்
ஷபரியெஞ்சலனுண்ட = ஷபரி என்னும் வயதானவர் கொடுத்த எச்சில் பழங்களை உண்டான்
கோகுல தபலெயர நொலிசிதனு = கோகுலத்தில் இருக்கும் கோபிகா ஸ்த்ரியர்களை மெச்சி, அவர்கள் தன்னை அடையுமாறு செய்தான்
ரிஷிபத்னியரு = பூஜை செய்துகொண்டிருந்த பிராமண பெண்கள்
கொட்டன்ன = கொடுத்த அன்னத்தை
சுபுஜ = சுவையான உணவை உண்ணும் ஸ்ரீபரமாத்மன்
புஞ்சிஸித = உண்டான்
ஸ்வரமண = எந்தவொரு வேலைக்கும் யாருடைய உதவியும் தேவைப்படாதவன்
குபுஜெ = த்ரிவக்ரை என்பவள் கொடுத்த
கந்தகெ = சந்தனத்திற்கு
ஒலித = மகிழ்ந்து, அவள் தன்னை அடையுமாறு செய்தான்
முனிகண விபுதசேவித = முனிகணங்களாலும், தேவகணங்களாலும் வணங்கப்படுபவனான ஸ்ரீபரமாத்மன்
நாவித்த கர்மபல = நாம் சமர்ப்பித்த கர்மபலன்களை விட்டுவிடுவானோ?
ஸ்ரீபரமாத்மன் பக்தவத்ஸலன் என்று இங்கு சொல்கிறார். ஸ்ரீபரமாத்மன் ராமாவதாரத்தில், சீதா லட்சுமணனுடன் காட்டில் வசித்தபோது, ஷபரி என்னும் வயதானவள், ராமனின் வருகையை முதலிலேயே அறிந்து, மரத்திலிருந்து விழுந்த நல்ல பழங்களை சேகரித்து, அவற்றைக் கடித்துப் பார்த்து, சுவை நன்றாக இருந்தால், இவை ராமனுக்கு என்று தனியே எடுத்து வைத்திருந்தாள். இப்படி சேகரித்து வைத்த பழங்களை ராமன் வந்தபோது சமர்ப்பித்தாள். ஸ்ரீராமனும் அவளுடைய பக்தியை மெச்சி, அந்த பழங்களை ஏற்றுக்கொண்டான்.
அவன் ஸ்வரமணனாக இருந்தாலும், கோகுலத்தின் கோபிகா ஸ்த்ரியர்களுக்கு அருளினான். ரிஷி கணங்களாலும், பிரம்மாதி தேவ கணங்களாலும் வணங்கப்படுபவன் ஆனாலும், ரிஷிபத்னியர் கொடுத்த அன்னத்தை ஏற்றுக்கொண்டான். த்ரிவக்ரை என்னும் குப்ஜை சந்தனத்தைக் கொடுக்க, அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டு அவள் தன்னை அடையுமாறு செய்தான்.
இப்படி ஜாதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வெறும் பக்தியை மட்டுமே மெச்சி, மேற்சொன்னவர்களுக்கு அருளினான் என்றபிறகு, நாம் பக்தியுடன் கர்மங்களின் பலன்களை அவனுக்கு சமர்ப்பித்தால், பரமாத்மன் நம்மை கைவிடுவானோ? சந்தேகமில்லாமல் அவற்றை ஏற்றுக்கொள்வான் என்று பொருள்.
No comments:
Post a Comment