ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, April 5, 2020

#4 - போஜனரசவிபாக சந்தி

#4 - போஜனரசவிபாக சந்தி


ஆரு ரஸ த்வாதி3 பே43தி
ஆரு மூராகி3வு ஸாரா
ஸார நீதா1னீத12ண்டாக2ண்ட சித்ப்ரசுர |
ஈரதி4க எப்பத்து ஸாவிர
மாரமணன ரசாக்2யரூப
ரீரதலி போ4ஜ்ய சுபதார்த்த2தி தி1ளிது3 புஞ்ஜிபுது3 ||4

ஆருரஸ = இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு என்னும் அருசுவைகள்

சத்வாதிபேததலி = சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்று குணங்களால்
ஆரு மூராகிகவு = 6x3=18
ஸாராஸார = ஸார, அஸார என்ற பெயரில்
நீதானீத = நீத அனீத என்ற பெயரிலும்
கண்டாகண்ட = கண்ட, அகண்ட என்றும்
சித்ப்ரசுர = சித்ப்ரசுர என்ற பெயரிலும்
ஈரதிக எப்பத்துசாவிர = 72,000
மாரமணன = லட்சுமிபதியான
ரசாக்யரூப = 72,000 ரச ஷப்தத்தின் பெயரால் அழைக்கப்படும் ரூபங்களை
ஷரீரதலி = நம் தேகத்தில்
போஜ்ய சுபதார்த்ததி = போஜனம் செய்யும் உத்தம பதார்த்தங்களில்
திளிது = அறிந்து
பஞ்சிபுது = போஜனத்தை செய்யவேண்டும். 

அறுசுவைகளில் பகவத்ரூபங்களை சிந்திக்க வேண்டிய கிரமத்தை சொல்கிறார். இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு என்பவை அறுசுவைகள். இவற்றில் ஒவ்வொன்றிலும் சாத்விக பாகம் என்றும், ராஜஸ பாகம் என்றும், தாமஸ பாகம் என்றும் மூன்று பாகங்கள் உண்டு. இப்படி 6x3=18 பாகங்கள் ஆகின்றன. அவற்றில், சாராசார, நீதானீத, கண்டாகண்ட, சித்ரப்ரசுர என்னும் நான்கு த்வந்த்வங்கள் (இரு பாகங்கள்) சம்பந்தப்பட்டிருக்கின்றன. 

அது எப்படியெனில், சாத்விக பாகம், ராஜஸரில் பாதி பாகம் கலந்த சாத்விக பாகம் - இது சார என்று அழைக்கப்படுகிறது. அசார என்றால், தாமஸ பாகம், ராஜஸ கலந்த தாமஸ பாகம் எனப்படுகிறது. இப்படி ரஜோ குணத்தை இரு பாகங்களாக செய்து, சத்வகுணத்தில் பாதி பாகத்தையும், தமோகுணத்தில் பாதி பாகத்தில் கொண்டு சேர்ப்பதினால், சார அசார என்று இரு பாகங்கள் உண்டாகின்றது. இந்த சாராசார பாகங்கள் இரண்டும், 18ல் 1 பாகம் ஆயிற்று. இதில் மற்றொரு பாகம் - நீத என்றும், அப்ரசுர என்றும் இரு பெயர்களைக் கொண்ட த்வந்த்வம் - இருக்கிறது. 

அது எப்படியெனில்:

நீத என்றால் நாக்கிற்கு நன்றாக சுவை தெரியக்கூடிய இனிப்பு ஆகியவை. அப்ரசுர என்றால் இனிப்பு ஆகியவற்றில் சம்பந்தப்பட்டு நாக்கிற்கு நன்றாக சுவை தெரியும் இனிப்பு பதார்த்தங்கள் என்று பொருள். அதாவது, கசப்பு, இனிப்பு ஆகிய ஒவ்வொரு சுவைகளிலும் நன்றாக தெரியும் உப்பில் இருக்கும் உவர்ப்பு, புளியில் இருக்கும் கசப்பு என இவற்றைத் தவிர மற்ற 5 சுவைகளும் கலந்த சுவையே இது. இவை நாக்கிற்கு தெரிவதில்லை. உப்பில் இருக்கும் உப்பின் சுவைக்கு நீத என்றும், அதில் அடங்கியிருக்கும் மற்ற 5 சுவைகளுக்கு அப்ரசுர என்றும் பெயர். இவை இரண்டும் ஒன்றிலேயே அடங்கியிருப்பதால் இந்த இரண்டையும் ஒரே பாகம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் கண்ட என்றும் அகண்ட என்றும் ஒரு த்வந்த்வ பாகம் உருவாகிறது. கண்ட என்றால் ஒரு சுவையில் இன்னொரு சுவையை சேர்த்து, அந்த சுவை மாற்றுவதற்கு பெயர். ரசம் முதலான பதார்த்தங்களில் புளி சேர்த்து, அதை மாற்றுவதற்காக உப்பு, காரம் ஆகியவற்றை சேர்ப்பது. இப்படி ஒரு பதார்த்தத்தில் பல சுவைகள் சேர்வதால், ருசி-பேதம் ஏற்படுவதற்கு கண்ட என்று பெயர். இனிப்பு முதலான பதார்த்தங்களில், வேறு எந்த சுவையையும் சேர்க்காததால், அதற்கு அகண்ட என்று பெயர். இவை இரண்டு சேர்ந்து ஒரு பாகமாகிறது. சத்வ, ரஜஸ் இவை கலந்த என்னும் சார பதார்த்தங்கள், பகவத் பக்தர்களுக்கு சுகங்களைக் கொடுப்பதால் சித் என்று பெயரைப் பெறுகிறது. தாமஸ ராஜஸ சம்பந்தமான அசார பதார்த்தங்கள், நீசர்களுக்கு நன்றாக புரிவதால், அவை ப்ரசுர என்று பெயரைப் பெறுகிறது. 

ஆக, இந்த நான்கு த்வந்த்வங்களும், அந்த 18 ரசங்களில், பாதி சாத்விக ராஜசராகவும், பாதி தாமச ராஜசவாகவும் என இரு பாகங்களாக இருப்பதால், சாராசாராதி 4 த்வந்த்வங்களில் சாராதிகள், சாத்விக ராஜசத்திற்கும், அசாராதிகள் ராஜஸ தாமஸத்திற்கும் சேர்கின்றன. 

ஆகையால், இந்த 4 த்வந்த்வங்களையும், 4 பாகங்களாக பிரிக்கின்றனர். ஆகையால், 18x4 = 72 ஆகிறது. இந்த 72 சுவைகளில் ஒவ்வொன்றிலும், விஷ்வாதி 1,000 பகவத் ரூபங்களை சிந்திக்க வேண்டும். அப்படி செய்தால், 72x1000=72,000 ஆகிறது. இதே மாதிரி லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மன் நம் தேகத்தில் 72,0000 ரசரூபத்திலும், போஜனம் செய்யும் பதார்த்தங்களிலும் ரசரூபியான பரமாத்மனை சிந்தித்து, உணவினை உண்ணவேண்டும். 

***



No comments:

Post a Comment