ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, April 19, 2020

#3 - விபூதி சந்தி

#3 - விபூதி சந்தி


ப்ரதி1மெ ஷாலக்3ராம கோப்4யா
3த அதி1தி1 ஸ்ரீதுளசி பி1ப்ப1
யதி1 வனஸ்த2 க்4ருஹஸ்த2 வடு1 யஜமான ஸ்வபர ஜன |
ப்ருதி2வி ஜல ஷிகி21வன தாரா
பத2 நவக்ரஹ யோக3 கரண ப4
தி1தி2 ஸிதாஸிதபக்‌ஷ சங்க்ரம அவனதி3ஷ்டான ||3

ப்ரதிமெ = சல, அசல பிரதிமைகள்

ஸாலகிராமம், 
கோ = பசு
அப்யாகத = வீட்டிற்கு வந்த விருந்தினர்கள்
அதிதி = வைஷ்வதேவ காலத்திற்கு வீட்டிற்கு வந்த அறிமுகம் இல்லாதவர்கள். 
ஸ்ரீதுளஸி,
பிப்பல = அஸ்வத்த மரம்
யதி
வனஸ்த = வானபிரஸ்த ஆசிரமத்தில் இருப்பவர்
கிருஹஸ்த = திருமணம் ஆனவர்
வடு = பிரம்மசாரி
யஜமான = அதிபதி / முதலாளி
ஸ்வபரஜன = உற்றார் உறவினர் & பிறர்
ப்ருதிவி = பூமி
ஜல = தண்ணீர்
ஷிகி = அக்னி
பவன = வாயு
தாராபத = ஆகாயம்
நவகிரக = நவக்கிரகங்கள்
யோக, கரண
ப = நட்சத்திரங்கள்
திதி, 
ஸிதாஸிதபக்‌ஷ = சுக்ல, கிருஷ்ண பட்சங்கள்
ஸங்க்ரமண = மேஷாதி 12 சங்கிரமணங்கள்
அவன = ஸ்ரீபரமாத்மனின்
அதிஷ்டான = சன்னிதானம் இருக்கும் இடங்கள்

பரமாத்மனின் விபூதியை அறிவதற்காக, அவனின் சன்னிதானம் இருக்கும் இடங்களில், நீத, சாதாரண, சஜாதி முதலான ரூபங்களை சொல்கிறார். 

ஸ்வயம்வ்யக்த பிரதிமைகள், சாலகிராமங்கள் இவற்றில் நீத விபூதியை அறியவேண்டும். பசு, அழைத்த (ஏற்கனவே வந்திருக்கும்) விருந்தினர்கள், வைஷ்வதேவ காலத்தில் சரியாக வீட்டிற்கு சாப்பிட வந்த (அழையா) விருந்தினர்கள், ஸ்ரீதுளசி, அஷ்வத்த, யதி, வானபிரஸ்த, இவற்றில் விசேஷ விபூதியை அறியவேண்டும். கிருஹஸ்த, பிரம்மசாரி, பிரபு (முதலாளி), சொந்த மக்கள், பிற மக்கள் என இவர்கள் பகவத் பக்தர்களாக இருந்தால், அவர்களில் சாதாரண விபூதியை அறியவேண்டும். அல்லது மேற்கூறிய வனஸ்த, கிருஹஸ்த, பிரம்மசாரி, யஜமான இவர்கள் அனைவரும் ஸ்வ-பரராக இருக்கவேண்டும் என்று அர்த்தம். 

‘ஸ்வாதந்த்ர்யாத்ஸ்வ: பரமாத்மாதஸ்மின்வரா:, ஆஸக்தா:, ஸ்வபரா:,’ ஸ்வ என்றால் ஸ்வதந்த்ரமான பரமாத்மன். அவனில் நம்பிக்கை வைப்பவர்கள் ஸ்வபரர். மேற்கூறிய அனைவரும் பகவத்பக்தர்களாக இருந்தால், அவர்களை பூஜிக்க வேண்டும் என்று பொருள். ப்ருத்வி, ஜல, அக்னி, வாயு, ஆகாஷ இவற்றில் பரமாத்மனின் அகண்ட விபூதியை சிந்திக்க வேண்டும். ‘ப்ருத்வி வாயுராகாஷ அபோஜ்யோதிரஹம்மர்ஹா’ என்னும் (பாகவத 11ம் ஸ்கந்தம், 19ம் அத்தியாயம், 37ம் ஸ்லோகம்) வாக்கியத்தினால் ப்ருதிவ்யாதி பஞ்சபூதங்களில் தன்னை அகண்ட ரூபமாக அறி என்று உத்தவனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். 

இவற்றிலேயே கண்ட ரூபங்களையும் சிந்திக்க வேண்டும். (பாகவதம். 37-33). கந்தமாத்ரமஹம்புவ: | அபாம்ரஸஸ்சபரம: ஷப்தோஹம்னபஸ:பர:’ ஆகிய வாக்கியங்களால் பூமியில் கந்த (வாசனை) குணம், தண்ணீரில் சுவை, தேஜஸ்ஸில் ரூபம், வாயுவில் ஸ்பர்ஷம், ஆகாயத்தில் ஷப்தம் என இவற்றில் கண்ட ரூபத்தை சிந்திக்கவேண்டும். 

நவக்கிரகங்களில் விஜாதீய கண்ட ரூபங்களை சிந்திப்பதோடு மட்டுமல்லாமல், நவக்கிரக விஜாதியில், சூரியனில் அகண்ட ரூபத்தை சிந்திக்க வேண்டும். யோகங்களில் சஜாதீய கண்ட ரூபங்களை, வியதீபாதங்களில் அகண்ட ரூபங்களை சிந்திக்க வேண்டும். இப்படியே கரணங்களில் கண்டரூப, விஷ்கம்பத்தில் அகண்ட ரூபத்தையும், நட்சத்திரங்களில் கண்ட ரூபம், அபிஜித் என்னும் நட்சத்திரத்தில் அகண்ட ரூபத்தையும் சிந்திக்க வேண்டும். ‘நட்சத்திராணாம் ததாபிஜித்’ என்னும் பாகவத வாக்கியமே இதற்கு ஆதாரம் ஆகும். 

திதியில் கண்ட ரூபத்தையும், த்வாதசியில் அகண்ட ரூபத்தையும் சிந்திக்க வேண்டும். சுக்ல கிருஷ்ண பட்சங்களில் கண்ட ரூபத்தையும், பௌர்ணமி, அமாவாசைகளில் அகண்ட ரூபத்தையும் சிந்திக்க வேண்டும். மேஷாதி 12 சங்கிரமணங்களில் கண்ட ரூபத்தையும், மகர, கடக சங்கிரமணங்களில் அகண்ட ரூபத்தையும் சிந்திக்க வேண்டும். 

***


No comments:

Post a Comment