#21 - போஜனரசவிபாக சந்தி
த்ரினவதி1 சுரூபாத்மக1 னிரு
த்த4னு சதா யஜமானனாகி
த்த3னல யம ஸோமாதி3 பித்ருதேவதெக3ளிகெ3 அன்ன |
எனிபனா ப்ரத்3யும்ன சங்கரு
ஷண விபா4கவ மாடிகொண்டு3
ண்டுணிப நித்யானந்த போ4ஜனதா3யி துர்யாஹ்வ ||21
த்ரினவதி சுரூபாத்மக = 93 ஸ்வரூபங்களால் ஆன
அனிருத்தனு = அனிருத்த நாமக பரமாத்மன்
சதா = எப்போதும்
யஜமானனாகி = ஸ்ரார்த்தங்களில் கர்த்ரு ரூபனாக
இர்த்து = கர்த்ருவின் உள்ளே இருந்து
ப்ரத்யும்ன = ப்ரத்யும்ன ரூபத்தினால்
அனல = அக்னி
யம சோமாதி = யமன், சந்திரன் முதலானவர்களே அதிபதிகளாக இருக்கும்
பித்ருதேவதெகளிகெ = பித்ரு தேவதைகளுக்கு
எந்தனு = தலைவன் என்று
எனிப = என்று சொல்லிக் கொள்ளும்
சங்கர்ஷண = சங்கர்ஷணன்
விபாகவ மாடி = பித்ரு பிதாமகர்களுக்கு பிரித்துக் கொடுத்து
கொண்டு = தானும் ஸ்வீகரித்து
உணிப = பித்ருகளுக்கு உண்ணக் கொடுப்பான்
துர்யாஹ்வ = நான்காம் வாயுதேவர்
நித்யானந்த போஜனதாயி = எப்போதும் ஆனந்தமயமான போஜனங்களைத் தருவான்.
பித்ருதேவதைகளுக்கு அன்னரஸங்களைப் பிரித்துக் கொடுக்கும் விதத்தை இங்கு சொல்கிறார்.
அனிருத்த நாமக பரமாத்மனும், 93 ஸ்வரூபங்களைக் கொண்டவனுமான பரமாத்மன். 93 எப்படியென்றால், விஸ்வே தேவதைகள் 10 பேர், ஸ்ரார்த்தாதிகளில் ஸ்வாஹாகாரத்தினால் ஆராதிக்கப்படுபவர்கள். புரூரவ, ஆர்த்ரா ஆகிய 5 பேர்களில் அனிருத்த ரூபமும், நாராயண ரூபமும் இருக்கிறது. பித்ரு தேவதைகளில், அமூர்த்தா கணங்கள் 3, மூர்த்த கணங்கள் 4, என மொத்தம் 7 கணங்கள் உள்ளன. இந்த ஒவ்வொன்று கணங்களிலும் பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் ரூபங்கள் இருக்கின்றன. இப்படி 3*7 = 21 ரூபங்கள் ஆகின்றன. இதற்கு விஸ்வே தேவதைகள் 10 பேரை சேர்த்தால், 21+10=31 ஆகிறது.
இந்த ஒவ்வொருவருக்கும் யஜமானன், அதாவது அதிபதி என்றால் அது, அக்னி, யமன் சந்திரன் இவர்கள் மூவர். ஆக மொத்தம் 31 * 3 = 93 ஆகிறது. இந்த 93 ஸ்வரூபங்களால் அனிருத்தாதி ஐந்து ரூபங்களைக் கொண்ட பரமாத்மன், அனிருத்த ரூபத்தினால் ஸ்ரார்த்த கர்த்ருவில் இருக்கிறான். விஷ்வே தேவதைகளில் அனிருத்த, நாராயண ரூபங்களால் இருக்கிறான். பித்ருதேவதைகளுக்கு அபிமானி தேவதைகளான அக்னி, யம, சந்திரர்களில் பிரத்யும்னன் இருந்து, அந்த பித்ருதேவதைகளுக்க்கு ப்ரேரகனாக (வழிநடத்துபவன் / தலைவன்) இருக்கிறான்.
சங்கர்ஷணன், ‘அமூர்த்தானாஞ்ச மூர்த்தானாம் பித்ருணாம் தீப்த தேஜனாம்’ என்னும் பிரமாணத்திற்கேற்ப தேவதைகள் செய்யும் ஸ்ரார்த்தாதிகளை அமூர்த்த பித்ருகணங்களுக்கும், மூர்த்தரான 4 கணங்களுக்கு பிராஹ்மண, க்ஷத்ரிய, வைஷ்ய, ஷூத்ர என்னும் 4 வர்ணத்தவர் செய்யும் ஸ்ரார்த்தங்களை பிரித்து, இந்த பித்ரு கணங்களிலும், விஷ்வே தேவதைகளிலும் வைத்து, தானும் அதை ஏற்றுக் கொள்கிறான். வாசுதேவன், விஷ்வே தேவதைகளுக்கும், பித்ரு கணங்களுக்கும் தான், நித்யானந்தகரமான போஜனங்களை உண்ணக் கொடுத்து, திருப்திப்படுத்துகிறான்.
***
No comments:
Post a Comment