#3 - போஜனரசவிபாக சந்தி
வாரிவாச்யனு = உதக நாமகனாகி ஸ்ரீபரமாத்மன்
வாரியொளகித்து = அந்த தண்ணீரில் இருந்து
ஆரு ரசவெந்தெனிஸி = அறுசுவை என்று அழைக்கப்பட்டு
மூவத்தாருசாவிர = 36,000 புருஷ, 36,000 ஸ்த்ரி நாடிகளிலும் இருந்து
தத்ரூப தாரகனு = நாடிகளின் ரூபத்தை தான் தரித்து
சர்வஷரீரிகளலி = அனைவரின் தேகத்திலும் இருந்து
அஹஸ்ச = பகல்
ராத்ரி = இரவுகளிலும் இருந்து
ப்ருஹதியெம்ப சுனாமதி = ப்ருஹதி என்னும் சந்தஸ்ஸின் சிறந்த பெயரில் இருந்து
கரெஸி = அழைக்கப்பட்டு
விஹாரமாள்பனு = செயல்களை செய்வான்.
***
வாரிவாச்யனு வாரியொளகி3
த்தா3ரு ரஸவெந்தெ3னிஸி மூவ
த்தாருஸாவிர ஸ்த்ரீ புருஷநாடி3யொளு தத்3ரூப
தா4ரக1னு தானாகி3 சர்வ ஷ
ரீரிக3ளலி அஹஸ்ச ராத்ரி வி
ஹாரமாள்பனு ப்3ருஹதியெம்ப3 ஸுனாமதிம் க1ரெஸி ||3
வாரிவாச்யனு = உதக நாமகனாகி ஸ்ரீபரமாத்மன்
வாரியொளகித்து = அந்த தண்ணீரில் இருந்து
ஆரு ரசவெந்தெனிஸி = அறுசுவை என்று அழைக்கப்பட்டு
மூவத்தாருசாவிர = 36,000 புருஷ, 36,000 ஸ்த்ரி நாடிகளிலும் இருந்து
தத்ரூப தாரகனு = நாடிகளின் ரூபத்தை தான் தரித்து
சர்வஷரீரிகளலி = அனைவரின் தேகத்திலும் இருந்து
அஹஸ்ச = பகல்
ராத்ரி = இரவுகளிலும் இருந்து
ப்ருஹதியெம்ப சுனாமதி = ப்ருஹதி என்னும் சந்தஸ்ஸின் சிறந்த பெயரில் இருந்து
கரெஸி = அழைக்கப்பட்டு
விஹாரமாள்பனு = செயல்களை செய்வான்.
தண்ணீரில் (அதன் தத்வத்தில்) அந்த தண்ணீரின் பெயரில் இருந்து, அந்த தத்வத்தின் மாத்ரா குணமான அருசுவைகளில் அதாவது, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு என்னும் அருசுவைகளின் பெயர்களைப் பெற்றிருக்கிறான். மேலும், 36,000 ஸ்த்ரி நாடிகளிலும், 36,000 புருஷ நாடிகளிலும் அந்த நாடிகளின் ரூபத்தை தானே தரித்து அவற்றில் இருக்கிறான். இந்த தேகத்தில் வலது பக்கத்தில் 36,000 நாடிகளும், இடது பக்கத்தில் 36,000 நாடிகளும் உள்ளன. இடது பக்க நாடிகளுக்கு ஸ்த்ரி நாடிகள் என்றும், வலது பக்கத்து நாடிகளுக்கு புருஷ நாடிகள் என்றும் பெயர்.
ஓராண்டிற்கு 360 பகல், 360 இரவுகள் உண்டு. மனிதனின் பொதுவான ஆயுள் 100 ஆண்டுகள். மொத்தம் 36,000 பகல்கள், 36,000 இரவுகள் ஆகின்றன. அந்த பகல் இரவுகளின் அபிமானி தேவதைகளே, இந்த நாடிகளுக்கும் அபிமானி தேவதைகள் ஆவர். இந்த ஸ்த்ரி புருஷ நாடிகளுக்கு திவா நாடிகள் என்றும், ராத்ரி நாடிகள் என்றும் பெயர் உண்டு.
இந்த 72,000 நாடிகளிலும், நாடிகளின் தேவதைகளிலும், அந்தந்த பெயர்களில் இருப்பதால், ப்ருஹதி என்னும் பெயர் ஸ்ரீபரமாத்மனுக்கு வந்தது. இத்தகைய பெயரால் ஞானிகளால் அழைக்கப்பட்டு நாடிகளில் இருந்து செயல்களை செய்வான்.
No comments:
Post a Comment