ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, March 31, 2020

#27 - வியாப்தி சந்தி

#27 - வியாப்தி சந்தி


கா131ப்பிண ஹிடி3து33டி3யலு
வேத3னெயு லோஹக3ளிக3ல்லதெ3
ஆதுதே1னை அனலகா3வ்யதெ ஏனமாடித3ரு |
ஆதிதே3வனு சர்வஜீவர
கா1து கொண்டிஹனொளஹொரகெ3 து:
க்கா2திக3ளு சம்பந்தவாகுவவேனு சின்மயகெ3 ||27


காதகப்பிண = நெருப்பில் நன்றாக காய்ச்சிய இரும்பினை
ஹிடிது படியலு = பிடித்து அடித்தால்
வேதனெயு = அந்த அடியின் வலி, அந்த இரும்புக்கு மட்டுமே வலிக்கும்
ஏனு மாடிதரு = என்ன செய்தாலும்
அனலகெ = நெருப்புக்கு
ஆதுதேனை = என்ன ஆகப்போகிறது? (ஒன்றும் ஆகாது என்று பொருள்).
ஆதிதேவன் = அனாதி காலத்திலிருந்தும் இருக்கும் ஸ்ரீபரமாத்மன்
சர்வஜீவர = அனைத்து ஜீவர்களின் உள்ளே வெளியே
காதுகொண்டிஹ = காத்துக் கொண்டிருக்கிறான்
சின்மயகெ = சிதானந்த ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மனுக்கு
துக்காதிகள சம்பந்தவு = தேக சம்பந்தமான துக்கங்களின் சம்பந்தம்
ஆகுவுதேனை = என்றைக்கும் ஆகாது (வராது).

இரும்பை நீளமாக்க வேண்டுமெனில், அதனை நன்கு காய்ச்சி அடிப்பர். அப்போது அந்த அடியானது, அந்த இரும்பிற்கு வலிக்குமே தவிர, அதற்குள் இருக்கும் அந்த நெருப்பிற்கு ஒன்றும் / எதுவும் ஆகாது. அதுபோலவே, பரமாத்மனும் அனைத்து ஜீவர்களின் உள்ளே வெளியே வியாப்தனாக இருந்தாலும், அவர்களுக்கு சம்பந்தப்படாமல், ஜீவர்களின் தேகங்களுக்கு ஆகும் துக்காதிகள், அந்த தேகத்தில் இருக்கும் பரமாத்மனுக்கு சம்பந்தப்படுவதில்லை.

***


No comments:

Post a Comment