ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, April 7, 2020

#9 - போஜனரசவிபாக சந்தி

#9 - போஜனரசவிபாக சந்தி


வாசுதே3வனு ஒளஹொரகெ3 அவ
கா1ஷகொ1டுவ நப4ஸ்த2னாகி3
மாமேத விஹாரமாள்ப1னு பஞ்சரூபத3லி |
ஆஸரோருஹ சம்ப4வாப4
வாசவாதி3 சமஸ்தசேதன
ராஷியொளகி3ஹ னெந்த3ரிதவனு அவனே கோ1வித3னு ||9


வாசுதேவனு = வாசுதேவன நாமக பரமாத்மன்
ஒளஹொரகெ = சரீரங்களின் உள்ளேயும் வெளியேயும் இருந்து
நபஸ்தனாகி = ஆகாயத்தில் இருந்து
அவகாஷ கொடுவனு = உள்ளே இருந்துகொண்டு ஸ்வாசத்தினை இழுப்பது, ஸ்வாசத்தினை விடுவது ஆகிய விஷயங்களை செய்கிறான்
பஞ்சரூபதலி = அனிருத்தாதி ஐந்து ரூபங்களால்
ரமா சமேத = ஷாந்தி, கிருதி முதலான 5 ரூபங்களைக் கொண்ட லட்சுமி சமேதனாக
விஹார மாள்பனு = இந்த சரீரத்தில் இருந்து செயல்களை செய்கிறான்
ஆ ஸரோருஹ சம்பவ = பரமாத்மனின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மதேவரில் தொடங்கி
பவ = ருத்ரர்
வாசவாதி = இந்திரனே முதலான என்றால், தேவ, தைத்ய, மனிதர்கள் என அனைவரும்
சேதனராசியொளகெ = சேதனர்களில்
இஹனெந்து = இருக்கிறான் என்று
அரிதவனு = யார் அறிகிறானோ
அவனே கோவிதனு = அவனே ஞானி.

வாசுதேவ நாமக பரமாத்மன், பாஞ்ச-பௌதிக சரீரமான நம் தேகத்தில் உள்ளே மற்றும் வெளியே இருந்துகொண்டு, உள்ளே அன்னம், தண்ணீர் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டும், ஸ்வாசத்தை இழுத்தும், வெளியே இருந்து அந்த ஸ்வாசத்தை விடுவதுமான செயல்களை செய்கிறான். இப்படி ஸ்ரீபரமாத்மன், ஷாந்தி, கிருதி, ஜயா, மாயா, லட்சுமி என்னும் 5 ரமாரூபங்களாக அவருடன், அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண என்னும் 5 தன்னுடைய ரூபங்களால் இந்த சரீரங்களில் இருந்து செயல்களை செய்கிறான். 

இப்படியாக பிரம்மன், ருத்ராதி அனைத்து தேவதைகளிலும், கலி முதலான தைத்யர்களிலும் இருந்து, மனுஷ்ய பறவை மிருகம் ஆகிய அனைத்து சேதனர்களிலும் இருந்து சஞ்சரிக்கிறான் / செயல்களை செய்கிறான் என்று அறியும் மனிதனே ஞானி என்று அறியவேண்டும். 

***

No comments:

Post a Comment