ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, April 4, 2020

#2 - போஜனரசவிபாக சந்தி

#2 - போஜனரசவிபாக சந்தி

நீட33ந்த33லிப்ப லிங்க3க்கெ
ஷோடஷாத்மக1விபா43
மாடி3 ஷோட3ஷகலெகளிகெ3 உபசயகளனெ கொடு3|
க்ரோட3னெப்பத்தெரடு3 ஸாவிர
நாடி331 தேவதெக3ளொளகி

த்தா3டுதா1 நந்தா3த்ம சரிஸுவ லோக1தொ3ளு தா1னு ||2

நீடதந்தலிப்ப = பறவைகளின் கூடுகளைப்போல
இப்ப = இருக்கிறான்
லிங்ககெ = ஸ்தூல சரீரத்திற்கு
ஷோடஷாத்மக = மனம் 1, பஞ்சபூதங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5. கர்மேந்திரியங்கள் 5. ஆக 16 இந்திரியங்களிலும், அவற்றின் அபிமானி தேவதைகளிலும் அதன் ரூபனாக, அதன் உருவமாக இருப்பதால், ஸ்ரீபரமாத்மனுக்கு ‘ஷோடஷாத்மக’ என்று பெயர். இத்தகைய ‘ஷோடஷாத்மகனான’ ஸ்ரீபரமாத்மன்.
ரசவிபாகவ = காத்ய, பேய, பூஜ்ய, லேஹ்ய என்னும் நான்குவித பதார்த்தங்களில் இருக்கும் சுவைகளை வகுத்து, 16 கலைகளுக்கு, மேற்கூறிய 16 இந்திரியங்களுக்கு
உபசயகளனெ கொடுதா = புஷ்டியை / வலிமையைக் கொடுத்து
க்ரோட = வராஹ ரூபியான ஸ்ரீபரமாத்மன்
எப்பத்தெரடு சாவிர நாடிகத = 72,000 நாடிகளில் இருக்கும்
தேவதெகளொளகித்து = தேவதைகளில் இருந்து
ஆடுத = சஞ்சரித்தவாறு
ஆனந்தாத்ம = ஆனந்தஸ்வரூபனான
லோகதொளு = இந்த உலகத்தில்
சரிசுவ = சஞ்சரிக்கிறான்

பறவைகள் அதன் கூட்டில் வசிப்பதைப் போல, ஜீவன் அதற்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் ஸ்தூல சரீரத்திற்கு, ஷோடஷாத்மகனான ஸ்ரீபரமாத்மன், நான்குவித ரசங்களை (ருசிகளை) பிரித்து உண்ணக் கொடுக்கிறான். நான்குவித பதார்த்தங்கள் என்றால், காத்ய பதார்த்தங்களில், உப்பு, காரம் கலந்த பதார்த்தங்கள் சில உள்ளன. சில இனிப்பு பதார்த்தங்கள். அனைத்தும் காத்ய பதார்த்தங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இதைப்போலவே பேய, போஜ்ய மற்றும் லேஹ்யத்திலும் இருக்கின்றன. இத்தகைய சுவைகளை பிரித்து, ஷோடஷ கலைகளுக்குத் தேவையான வலிமையைக் கொடுக்கிறான். ஷோடஷ கலை என்றால், பாகவத 1ம் ஸ்கந்தத்தில்: 

கலாஷ்ச பஞ்ச பூதானி ஞான கர்மேந்த்ரியாணிச| 
பஞ்சபஞ்ச மனஷ்சேதி ஷோடஷோக்தோமனீஷிபி: ||

என்னும் வாக்கியத்தின்படி, மனஸ், பஞ்சபூதங்கள், ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் என்னும் இந்த 16 இந்திரியங்களுக்கும் புஷ்டியைக் கொடுத்து வராகரூபியான ஸ்ரீபரமாத்மன், ஸ்தூல சரீரத்தில் இருக்கும் 72,000 நாடிகளின் அபிமானி தேவதைகளில் இருந்து, செயல்களை செய்தவாறு, ஆனந்தஸ்வரூபனாக லோகங்களில் சஞ்சரிக்கிறார். 

***

No comments:

Post a Comment