#5 - விபூதி சந்தி
ஸ்ரீரமண ப்ரதிமெக3ளொளகெ3 ஹதி3
மூரதி4க வாகி3ப்ப மேலை
நூரு ரூபவ த4ரிஸி இப்ப1னு ஆஹிதா1சலதி |
தா3ரு மத2னவகை3யே பாவக1
தோ1ருவந்தெ ப்ரதீ1க சுரரொளு
தோ1ருதிப்பனு தத்த1தா3கா1ரத3லி நோள்பரிகெ3 ||5
ஸ்ரீரமண = லட்சுமிபதி
ப்ரதிமெகளொளகெ = தங்கம், வெள்ளி, பஞ்சலோகம் முதலான சிறிய பிரதிமைகளில்
ஹதிமூரதிகவாகி = 13 ரூபங்கள் அதிகமாக
ஐனூரு ரூபவ = 500 ரூபங்களை தரித்து (மொத்தம் 513)
இப்ப = இருப்பான்
ஆஹிதாசலதி = ஆலயங்களில், அஷ்டபந்தனங்களால் நிறுவப்பட்டிருக்கும் அசல பிரதிமைகளில்
இப்பனு = எப்போதும் இருக்கிறான். சலபிரதிமைகளில் இருக்கும் பகவத் விபூதிகளுக்கு அஹித விபூதி என்று பெயர்.
தாரு மதனவகையே = அரணியால் மதனம் செய்தால்
பாவகதோருவந்தெ = அக்னி தெரிவதைப் போல
ப்ரதீக சுரரொளு = பிரதிமா ரூபங்களான தேவர்களில்
ததாகாரதல்லி = பிரதிமா தேவதைகளின் உருவத்தில்
நோள்பரிகெ = பார்க்கும் மக்களுக்கு
தோருதிப்பனு = காண்பித்துக் கொள்வான்.
வீட்டில் இருக்கும் பூஜைக்கு ஏற்ற பஞ்சலோஹ பிரதிமைகளில், பிரதிமா என்னும் சொல்லின் எண்ணிற்கேற்ப, ப்+ர=1+2=3, தி=1, ம=5. இதை வலது பக்கமாக படித்தால், 513 ஆகிறது. இவ்வளவு ரூபத்தினால், சஹஜ விபூதி என்று எப்போதும் இருக்கிறான். அஹித விபூதியென்று அசலமாக தேவாலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் சிலா பிரதிமைகளிலும் அவ்வளவே விபூதி ரூபங்களால் வசிக்கிறான். யாகசாலைகளில் அக்னியை உருவாக்குவதற்காக, அரணிக்கட்டையை, இன்னொரு கட்டையால் மதனம் செய்தால், அக்னி வருவதைப் போல, ராமகிருஷ்ணாதி பிரதிமைகளில், அதே உருவத்தினால் ஞானிகளுக்கு தெரிகிறான். காஷ்டத்தில் அக்னி இருந்தாலும், அது நம் கண்ணிற்குத் தெரிவதில்லை. அதையே மதனம் செய்தால் எப்படி அக்னி தெரியவருகிறதோ, அதுபோலவே, சாதாரண மக்களுக்கு சாதாரண பஞ்சலோகாதி பிரதிமைகளைப் போல காணுவான். பக்தியினால் தியானம் செய்யும் ஞானிகளுக்கு தேஜோமயனாக பிரதிமை தேவதா ருபனாக, அதாவது, ராம பிரதிகளில் ராம ரூபியாகவும், கிருஷ்ணாதி ரூபங்களில் அந்தந்த ரூபியாகவும் காண்பித்துக் கொள்வான்.
***
No comments:
Post a Comment