#23 - விபூதி சந்தி
மாரமண னரமனெகெ3 ஸுமஹா
த்4வார வெனிஸுவ வதனகொப்பு1வ
தோரண ஷ்மச்ருக3ளு கே1ஷக3ளெ ப1தாகெ1க3ளு |
ஊரி நடெ3வங்க்4ரிக3ளு ஜங்கெ4க3
ளூரு மத்4யோத3ர ஷிரக3ளா
கா3ரது3ப்ப1ரிகெ3க3ளு கோ1ஷக3ளைது3 கோணெக3ளு ||23
மாரமணன = லட்சுமிபதியின்
அரமனெகெ = அரண்மனை என்னும் இந்த சரீரத்திற்கு
சுமஹாத்வாரவெனிஸுவ = பெரிய வாயில்கள் எனப்படும்
வதனகெ = முகத்திற்கு
ஒப்புவ = அழகான
ஸ்மஸ்ருகளு = மீசைகள்
தோரண = தோரணங்கள்
கேஷகளே = கூந்தல்களே
பதாகிகளு = அலங்காரக் கொடிகள்
ஊரிநடெவ = நிலத்தில் ஊன்றி நடக்கும்
அங்க்ரிகளு = பாதங்கள்
ஜங்கெகளு = முழங்காலுக்குக் கீழ் பாகங்கள்
ஊரு = துடைகள்
மத்ய = நடுவே
உதர = வயிறு
ஷிரகளு = தலை, ஆகியவையே
ஆகாரத = வீட்டில் உப்பரிகைகள்
கோஷகளைது = அன்னமய, பிராணமய, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய என்னும் ஐந்து கோஷங்களும்
கோணெகளு = கொட்டடிகள்
ஸ்ரீபதியின் அரண்மனை என்னும் இந்த தேகத்திற்கு மகாத்வாரம் போல இருக்கும் இந்த முகத்தில் இருக்கும் மீசைகளே தோரணங்கள். அதாவது ‘தோரணோsஸ்த்ரீ பஹிர்த்வாரம்’ என்னும் அமரகோச வாக்கியத்திற்கேற்ப, தோரணங்கள் என்றால், ஊருக்கு எல்லையில் இருக்கும் வாயில் என்று பொருள். கூந்தல் மயிர்களே த்வஜக் கொடிகள். பூமியில் ஊன்றி நடக்கும் பாதங்கள், அதற்கு மேல் முழங்காலுக்குக் கீழ் இருக்கும் பகுதிகள், துடைகள், வயிறு, தலை ஆகியவையே வீட்டின் உப்பரிகைகள். அன்ன, பிராண, மனஸ், விக்ஞான, ஆனந்த என்னும் ஐந்து கோஷங்களே ஐந்து கொட்டடிகள். இந்த விதமாக நம் தேகத்தையே பரமாத்மனின் அரண்மனை என்று சிந்தித்து பூஜை செய்வது ஒரு சாதனையாகும்.
***
No comments:
Post a Comment