ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, April 9, 2020

#13 - போஜனரசவிபாக சந்தி

#13 - போஜனரசவிபாக சந்தி

ஆரெரடு ஸாவிரத3 மேலி
ந்னூர ஐவத்தொந்து3 ரூபதி3
ஸாரபோக்த னிருத்ததே3வனு அன்னமயனெனிப |
மூரெரடுவரெ ஸாவிரத3 மே
ல் மூரதி31 நால்வத்து ரூபதி3
தோ1ருதி1ஹ ப்ரத்3யும்ன ஜக3தொ3ளு ப்ராணமயனாகி3 ||13

ஆரெரடு சாவிரத = 6+2=8 ஆயிரம்
மேலே இன்னூர ஐவத்தொந்து ரூபதி = + 251 ரூபத்தினால்
அனிருத்ததேவனு = அனிருத்த ரூபி பகவந்தன்
சாரபோக்த = போஜ்ய பதார்த்தங்களின் சாரத்தை ஏற்றுக்கொள்பவன்
அன்னமயனெனிப = அன்னமய என்று அழைத்துக் கொள்கிறான்
மூரெரடுவரெ சாவிரத = 3+2.5=5.5 ஆயிரம்
மேல் மூரதிக நால்வத்து ரூபதி = + 43 ரூபத்தில்
ப்ரத்யும்ன = பிரத்யும்ன ரூபியான பகவந்தன்
ஜகதொளு பிராணமயனாகி = பிராணமயனாக உலகில்
தோருதிஹ = நிலைத்திருக்கிறான்.


அனிருத்ததேவன், அன்னமயனாகி 8251 ரூபங்களால், அனைத்து பதார்த்தங்களின் சாரத்தையும் ஏற்றுக் கொள்பவன் என்று அழைக்கப்படுகிறான். இந்த எண்ணிக்கை, அனிருத்த என்ற சொல்லின் எண்ணிக்கைக்கு பொருந்துகிறது. அ=1 நி=5 ரு=2 த்த=8 ஆக 8251.பிரத்யும்னன், உலகத்தில், பிராணமயனாகி 5543 ரூபங்களால் நிலைத்திருக்கிறான். இங்கும் பிரத்யும்ன என்பதற்கு இந்த எண் சரியாகப் பொருந்துகிறது. ப்=1 ர=2 (1+2=3) த்யு=4 ம்=5 ன=5 ஆக 5543 என்று வருகிறது. 

***

No comments:

Post a Comment