#20 - விபூதி சந்தி
தா4து1க3ளு ஸப்தாவரண உப
வீதி4க3ளெ நாடிக3ளு மத3க3ளு
யூத1பக3ளு சுஷும்ன நாடி3யெ ராஜபந்தா2ன |
ஈ தனூருஹக3ளெ வனங்க3ளு
மாதரிஷ்வனு ப1ஞ்சரூபதி3
பாத1க1க3ளெம்பரிக3ளனு ஸம்ஹரிப த1ளவார ||20
தாதுகளு = ரத்தம், மாமிசம், மஜ்ஜை என்னும் 7 பாகங்கள்
ஸப்தாவரணவு = 7 பிரகாரங்கள்
நாடிகளு உபவீதிகளு = நாடிகளே குறுக்குத் தெருக்கள்
மதகளு = செல்வங்களால் வரும் கர்வம்
யூதபகளு = மத கஜங்கள்
சுஷும்னா நாடியே = தேகத்தின் நடுவில் இருக்கும் பிரம்ம நாடியே
ராஜபந்தான = ராஜ மார்க்கம் (ராஜவீதி)
ஈதனுருஹகளெ = முடிகளே வனங்கள்
மாதரிஷ்வனு = முக்யபிராண தேவர்
பஞ்சரூபதி = பிராண, அபான, வியான, உதான, சமான என்னும் ஐந்து ரூபங்களில்
பாதககளெம்ப = பாவங்கள் என்னும்
அரிகளன = எதிரிகளை
ஸம்ஹரிப = கொல்லும்
தளவார = ஆயுதங்கள்
த்வக், சர்ம, மாம்ஸ, ரக்த, மேதஸ், மஜ்ஜை, அஸ்தி என்னும் 7 பாகங்களே இந்த பட்டணத்தின் ஏழு பிரகாரங்கள். இளா பிங்களா ஆகிய நாடிகளே சிறிய குறுக்குத் தெருக்கள். கல்வி, செல்வங்களால் வரும் எட்டு துர்குணங்களே மதகஜங்கள். முக்யபிராணதேவர், பிராண, அபானாதி ஐந்து ரூபங்களால் காம, கிரோதாதி ஆறு எதிரிகளைக் கொல்லும் ஆயுதங்கள்.
***
No comments:
Post a Comment