ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, April 7, 2020

#8 - போஜனரசவிபாக சந்தி

#8 - போஜனரசவிபாக சந்தி


நிருபமானந்தா3த்3ம ஹரி
ங்கருஷண ப்ரத்யும்ன ரூபதி3
லிருதிஹனு போ4க்த்ருகளொளகெ3 தச்சக்தித3னு எனிஸி |
கரெஸுவனு நாராயணனிரு
த்தெரடு3 நாமதி3 போ4ஜ்யவஸ்துக3
நிருத த1ர்ப1கனாகி த்ருப்தியனீவ சேதனகெ ||8


நிருபமானந்தாத்ம = ஒப்புமை இல்லாத ஆனந்த ஸ்வரூபனான
ஹரி = ஸ்ரீபரமாத்மன்
சங்கருஷண பிரத்யும்ன ரூபதலிருதிஹனு = சங்கர்ஷண, பிரத்யும்ன ரூபங்களில் இருந்து
போக்த்ருகளொளகெ = போஜனம் செய்பவர்களுக்குள் இருந்து
இருதிஹனு = வாசம் செய்கிறான்.
தச்சக்திதனு = உணவு உண்ணும் சக்தியைக் கொடுக்கிறான் என்று
கரெசுவனு = சர்வபோக்தன் என்று ஞானிகளால் அழைத்துக் கொள்ளப்படுகிறான்
நாராயணனிருத்தெரடு நாமதி = நாராயண, அனிருத்த என்னும் இரு நாமங்களில்
போஜ்யவஸ்துக = உணவை உண்ணும் தகுதியுள்ள பதார்த்தங்களில் இருந்துகொண்டு
நிருத = தினந்தோறும் (எப்போதும்)
தர்ப்பகனாகி = ஜீவர்களை உணவினை உண்ணச்செய்து
த்ருப்தியனீவ = திருப்தியைக் கொடுக்கிறான்
சேதனகெ = ஜீவர்களுக்கு

ஒப்புமையில்லாத, ஆனந்த ஸ்வரூபியான ஸ்ரீபரமாத்மன், சங்கர்ஷண பிரத்யும்ன என்னும் இரு ரூபங்களில் உணவை உண்பவர்களில் இருந்து, உணவை உண்பதற்கான சக்தியை அவர்களுக்குக் கொடுத்து, ‘போஜனசக்திப்ரதன்’ என்னும் பெயரைப் பெறுகிறான். நாராயண அனிருத்த என்னும் இரு பெயர்களில், உணவை உண்ணும் தகுதியுள்ள பதார்த்தங்களில் இருந்துகொண்டு, அதனை ஜீவர்களை உண்ணச்செய்து, அவர்களுக்கு திருப்தியைக் கொடுக்கிறான். 

***

No comments:

Post a Comment