ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, April 9, 2020

#12 - போஜனரசவிபாக சந்தி

#12 - போஜனரசவிபாக சந்தி


ஈப1ரியொளரிதும்ப3 நர நி
த்யோப1வாஸி நிராமயனு நி
ஷ்பாபி நித்ய மஹத்சு யக்3ஞக3ளா சரிசித3வனு |
போ1பு1திப்புது ப3ப்பு1தெ3ல்ல ர
மாபதி க3தி4ஷ்டா2னவெனலு க்ரு
பா பயோனிதி4 மாத1னாலிசுவனு ஜனனியந்தே ||12


ஈ பரியலி = இதுவரை சொன்னபடி
அந்து = அறிந்து
உம்ப = உண்ணும்
நர = மனிதன்
நித்யோபவாசி = நித்யோபவாச விரதத்தை அனுஷ்டிக்கும் பலனைப் பெறுகிறான்
நிராமயனு = நோய்கள் இல்லாதவன்
நிஷ்பாபி = பாவங்கள் இல்லாதவன்
நித்ய = நிரந்தரமாக (எப்போதும்)
மஹத் = பெரிதான
ஸு = சிறந்த
யக்ஞகள = யாக யக்ஞங்களை
ஆசரிசிதவனு = செய்த பலன்களைப் பெறுகிறான்
போபுது = தன் கை விட்டுப் போகும் பதார்த்தங்கள்
இப்புது = தன்னிடமே இருப்பவை
பப்புது = வருங்காலத்தில் வரப்போகும் விஷயங்கள்
எல்ல = இவை அனைத்தும்
ரமாபதிகெ = ரமாபதியான பரமாத்மனுக்கு
அதிஷ்டானவெனலு = இருப்பிடம் என்று அறி
க்ருபா பயோனிதி = கருணைக்கடல்
ஜனனியந்தெ = தாயைப் போல
மாதனு = நம் பேச்சினை
ஆலிசுவனு = அன்புடன் காது கொடுத்துக் கேட்பான்.

மேலே கூறியபடி, ஸ்ரீஹரி கண்டாகண்ட ரூபங்களால், போஜ்ய பதார்த்தங்களில் நிலைத்திருக்கிறான் என்பதை அறிந்து, போஜனம் செய்பவன், நித்யோபவாச விரதத்தினால் வரும் பலன்களைப் பெறுகிறான். நோய் நொடிகள் இல்லாதவன் ஆகிறான். பாவங்கள் இல்லாதவனாகிறான். தினந்தோறும் அஸ்வமேத யாகங்களை செய்வதால் வரும் பலன்களைப் பெறுகிறான். இதுமட்டுமல்லாமல், என்னை விட்டுப் போன பதார்த்தங்களில் இருக்கும் பரமாத்மனே, எனக்குள்ளும் இருந்து, எனது செயல்களுக்கேற்ப, எனக்கு போகங்களைக் கொடுக்கிறான். இப்போதும் என் செயல்களாலேயே எனக்கும் அந்த பதார்த்தங்களுக்கும் சம்பந்தத்தை ஏற்படுத்துகிறான். இது அவனது லீலை என்றே நினைக்கவேண்டும். நம்மிடம் இருப்பதை மிகுந்த அபிமானத்துடன் பார்க்காமல், பரமாத்மனே அதன் ரூபத்தில் எனக்கு போகங்களைக் கொடுக்கிறான். அவனது விருப்பத்தில், எப்போது இது போதும் என்று நினைக்கிறானோ, அப்போது அந்த பதார்த்தத்தை என்னிடமிருந்து விலக்குகிறான். ஆக, அனைத்து பதார்த்தங்களிலும் இருப்பவை பகவத்ரூபங்களே என்று சிந்தித்து, நம் அனைத்து பாரத்தையும் அவன் மேலே போட்டுவிட்டால், அவன் தாய் தன் குழந்தைகளைக் கொஞ்சி, அன்புடன் அவர்களை பார்த்துக் கொள்வதைப் போல, நம் பேச்சுக்களை பரமாத்மன் கேட்டு நம்மைக் காப்பாற்றுவான்.

***


No comments:

Post a Comment