ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, April 10, 2020

#14 - போஜனரசவிபாக சந்தி

#14 - போஜனரசவிபாக சந்தி


எரடு3 கோ1ஷக3ளொள ஹொரகெ3
ங்கருஷணைது3 சுலக்‌ஷத3ரவ
த்தெரடு3 ஸாவிரதே3 ளதிக1ஷத1 ரூபக3ள த4ரிஸி |
கரெசிகொம்ப மனோமயனு யெ
ந்த3ரவிதூ3ரனு ஈரெரடு ஸா
விரத முன்னூராத3 மேல் நால்கதிக எப்பத்து ||14


எரடு கோஷகள = பிராண மற்றும் அன்ன என்னும் இரு கோஷங்களின்
ஒள ஹொரகெ = உள்ளே மற்றும் வெளியே
அரவிதூரனு = தோஷங்கள் அற்றவனான
சங்கர்ஷண = சங்கர்ஷண ரூபி பரமாத்மன்
ஐது சுலக்‌ஷதரவத்தெரடு சாவிரதேளதிக ஷத = 500000 + 62000 + 100 + 7 = 562107
ரூபகள தரிஸி = ரூபங்களை தரித்து
கரெசிகொம்ப மனோமயனு = மனோமயன் என்று அழைத்துக் கொள்கிறான்
ஈரெரடு சாவிரத = இந்த வாக்கியம் அடுத்த பத்யத்தில் சேர்ந்து கொள்கிறது. ஆகவே இவை அங்கு விளக்கப்படும்.

நம் தேகத்தில் அன்னகோஷம் என்றும், பிராணகோஷம் என்றும் இரு கோஷங்கள் இருக்கின்றன. போஜ்ய பதார்த்தங்கள் அனைத்தும் அன்னகோஷத்தில் சேர்கின்றன. பிராணகோஷத்தில் காற்று சஞ்சரிக்கிறது. இந்த இரு கோஷங்களின் உள்ளே மற்றும் வெளியே சங்கர்ஷணரூபியான ஸ்ரீபரமாத்மன், முன்னர் சொன்ன எண்ணிக்கையின்படி, ச=7 ங்=0 க=1 ரு=6 ஷ=2 ண=5 என வருகிறது. இதை வலமிருந்து படித்தால், 526107 ஆகிறது. இவ்வளவு ரூபங்களை தரித்து, மனோமயன் என்று அழைத்துக்கொண்டு வியாப்தனாக இருக்கிறான் ஸ்ரீபரமாத்மன். 

***

No comments:

Post a Comment