#16 - விபூதி சந்தி
மன வசன காய ப்ரத3க்ஷணெ
அனுதி3னதி3 சர்வத்ர வியாபக1
வன ருஹேக்ஷண க3ர்ப்பிசுத1 மோதி3ஸுத1லிரு சதத |
அனுப4வக்கெ1 தந்து3கோ1 சகல ஸா
தனக3ளொளகி3து3 முக்2ய பாமர
மனுஜரிகெ3 பே1ளித3ரெ திளியது3 பு3த4ரிக3ல்லத3லெ ||16
சர்வத்ர வியாபக = அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கும்
வனருஹேக்ஷணகெ = தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீபரமாத்மனுக்கு
அனுதினதி = தினந்தோறும்
மனவசன காயக = மனோ, வாக், காயங்களால் செய்யப்படும் செயல்களே
பிரதக்ஷிணே = பிரதட்சிணை என்று நினைத்து
அர்ப்பிஸுத = அந்த பரமாத்மனுக்கு அர்ப்பணம் செய்து
ஸதத = அனைத்து காலங்களிலும்
மோதிஸுதலிரு = மகிழ்ச்சி அடைவாயாக
அனுபவகெ தந்துகோ = ஹே அதிகாரியான மனிதனே. நாம் சொன்னதை அனுபவத்திற்குக் கொண்டுவா. (சொன்னவாறு செய்)
ஸாதனகளொளகெ = முக்திக்காக நாம் செய்யும் சாதனைக்கான செயல்கள், பற்பல இருந்தாலும், அந்த சாதனைகளுக்குள்,
இது முக்ய = இதையே முக்கிய சாதனை என்று அறி
புதரிகல்லதெ = ஞானிகளைத் தவிர
பாமர மனுஜரிகெ = அஞ்ஞானிகளுக்கு
பேளிதரெ = இதைச் சொன்னால்
திளியது = இந்த விஷயங்கள் புரியாது.
மனதால், வாக்கினால், தேகத்தால் செய்யும் அனைத்து காரியங்களையும், ஸ்ரீபரமாத்மனுக்கு செய்யப்படும் பிரதட்சிணை என்று நினைத்து, அவற்றை ஸ்ரீபரமாத்மனுக்கு அர்ப்பித்து, மகிழ்ச்சி அடைந்துகொண்டிரு. இந்த விஷயங்களை சொல்லிப் பலனில்லை. அனுபவத்திற்குக் கொண்டு வா. முக்திக்கு இதைவிட சாதனை என்று எதுவும் இல்லை. ஆனால், இது சாதாரண மக்களின் மனதிற்கு புரிவது கஷ்டம். ஞானிகளுக்கு மட்டுமே புரியும் விஷயம் இது. அஞ்ஞானிகளுக்கு உபதேசம் செய்து என்ன பலன்? என்று உதாசீனம் செய்யவேண்டாம். புரியாத விஷயங்களை, குருகளிடமிருந்து அறிந்து, அனுபவத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதே தாசராயரின் கருத்து.
***
No comments:
Post a Comment