#7 - போஜனரசவிபாக சந்தி
கபில = கபில நாமக பகவந்தன்
நரஹரி = நரஹரி ரூபியான பகவந்தன்
பார்கவ = பரசுராமன்
த்ரய = இந்த மூன்று ரூபங்கள்
வபுஷ = சரீரத்தின்
நேத்ரதி = கண்களிலும்
நாஷிக = மூக்கிலும்
ஆஸ்யதி = வாயிலும்
ஷபர நாமக = மத்ஸ்ய நாமகனான பரமாத்மன்
ஜிஹ்வெயலி = நாக்கினில்
ஹம்ஸாக்ய = ஹம்ஸ நாமக பரமாத்மன்
தந்ததலி = பற்களில்
த்ரிபதிபாத்ய = மூன்று வேதங்களாலும் புகழப்படும்
ஹயாஸ்ய = ஹயக்ரீவ நாமகனை
வாச்யதொள் = வாக்கியத்திலும்
ஹீகெ அபரிமித = எல்லைகள் இல்லாத
சந்தத = நிரந்தரமான
சுகபூர்ண = ஆனந்தபூர்ணனான ஸ்ரீபரமாத்மன்
க்ருபணரொள் = இந்திரியங்களை வெல்லமுடியாத மக்களில்
இத்து = இருந்து
அவரவர ரஸ = அந்தந்த ஜீவர்களில் / இந்திரியங்களில் இருந்து, ஏற்பதற்கு தகுந்த விஷயங்களை
ஸ்வீகரிஸி = தான் ஏற்றுக்கொண்டு
கொடுவ = ஜீவர்களுக்கு திருப்தியைக் கொடுக்கிறான்.
கபில நரஹரி பா4ர்க3வ த்ரய
வபுஷ நேத்ரதி நாசிகாஸ்யதி3
ஷபர நாமக ஜிஹ்வெயலி த3ந்த1த1லி ஹம்ஸாக்2ய |
த்ரிப1திபாத்3ய ஹயாஸ்ய வாச்யதொ3
ளப1ரிமித1 சுக2பூர்ண சந்தத
க்ருபணரொளகி3த்த3வரவர ரஸஸ்வீகரிஸி கொடு3வ ||7
கபில = கபில நாமக பகவந்தன்
நரஹரி = நரஹரி ரூபியான பகவந்தன்
பார்கவ = பரசுராமன்
த்ரய = இந்த மூன்று ரூபங்கள்
வபுஷ = சரீரத்தின்
நேத்ரதி = கண்களிலும்
நாஷிக = மூக்கிலும்
ஆஸ்யதி = வாயிலும்
ஷபர நாமக = மத்ஸ்ய நாமகனான பரமாத்மன்
ஜிஹ்வெயலி = நாக்கினில்
ஹம்ஸாக்ய = ஹம்ஸ நாமக பரமாத்மன்
தந்ததலி = பற்களில்
த்ரிபதிபாத்ய = மூன்று வேதங்களாலும் புகழப்படும்
ஹயாஸ்ய = ஹயக்ரீவ நாமகனை
வாச்யதொள் = வாக்கியத்திலும்
ஹீகெ அபரிமித = எல்லைகள் இல்லாத
சந்தத = நிரந்தரமான
சுகபூர்ண = ஆனந்தபூர்ணனான ஸ்ரீபரமாத்மன்
க்ருபணரொள் = இந்திரியங்களை வெல்லமுடியாத மக்களில்
இத்து = இருந்து
அவரவர ரஸ = அந்தந்த ஜீவர்களில் / இந்திரியங்களில் இருந்து, ஏற்பதற்கு தகுந்த விஷயங்களை
ஸ்வீகரிஸி = தான் ஏற்றுக்கொண்டு
கொடுவ = ஜீவர்களுக்கு திருப்தியைக் கொடுக்கிறான்.
இந்த சரீரத்தின் கண்களில் கபில நாமக பரமாத்மனும், மூக்கினில் நரசிம்ம நாமக பரமாத்மனும், வாயில் பரசுராம நாமக பரமாத்மனும், என இந்த மூன்று ரூபங்களும் இந்த மூன்று இந்திரியங்களில் இருக்கின்றன. நாக்கினில் மத்ஸ்ய நாமக பரமாத்மனும், பற்களில் ஹம்ஸ நாமக பரமாத்மனும் இருக்கின்றனர். த்ரி என்றால் வேதங்கள் என்று பொருள். பாகவத முதலாம் ஸ்கந்தத்தில்: ’ஸ்த்ரி ஷூத்ர த்விஜ பந்தூனாம் த்ரயீ நஸ்ருதி கோசரா’, பெண்கள், சூத்திரர், பிராமணர் அல்லாதோர் இவர்களுக்கு த்ரயி = வேதங்கள் இவர்களுக்கு பொருந்தாது. இதே த்ரயீ என்னும் சொல்லை, இங்கு த்ரி என்று சொல்லியிருக்கிறார் தாசராயர். இத்தகைய வேதங்களால் புகழப்படும் ஹயக்ரீவன், வாக்கியங்களில் இருக்கிறான். இப்படி நிரந்தரமானவனான, எல்லைகளற்ற பூர்ணானந்தத்தைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன், ‘க்ருபணயோஜிதேந்த்ரிய:’ என்னும் பாகவத வாக்கியத்திற்கு ஏற்ப, க்ருபணன் என்றால் இந்திரியங்களை தன் வசப்படுத்தாதவர்கள். இத்தகைய மக்களில் இருந்து, அவரவர்களின் சுவையை ஏற்றுக்கொள்கிறான்.
கண்களில் இருந்துகொண்டு பார்க்கிறான். மூக்கினில் இருந்து வாசம் பார்க்கிறான். வாயில் இருந்து உண்கிறான். இந்த செயல்களை ஸ்ரீபரமாத்மன் செய்து அவர்களை திருப்திப்படுத்துகிறான். அஜிதேந்திரியர்களில் என்று ஏன் சொல்லியிருக்கிறார் என்றால், ஜிதேந்த்ரியர்களுக்கு நிஷித்த (ஏற்கத்தகாத) பதார்த்தங்களில் ஆசை இருப்பதில்லை. ஆகையால், அஜிதேந்திரியர்களில் இருந்து அந்த விஷயங்களை ஸ்வீகரிக்கிறான். அப்படி தான் ஸ்வீகரிப்பதால், அவர்களுக்கு திருப்தியைக் கொடுக்கிறான்.
***
No comments:
Post a Comment