#13 - விபூதி சந்தி
ஜலஜனாப4ன மூர்த்தி மனத3லி
நெலெகொ3ளிஸி நிஸ்சல ப4கு3தி1யலி
சளி பிஸிலு மளெ கா3ளிக3ள நிந்தி3ஸதெ நித்யத3லி |
நெலதொ3ளிஹ க3ந்த4வெ சுக2ந்த4வு
ஜலவெ ரஸ ரூபவே சுதீ3பவு
எலரு சாமர ஷப்த வாத்3ய க3ளர்ப்பிஸலு ஒலிவ ||13
ஜலஜனாபன = பத்பனாபனின்
மூர்த்தி = ராமகிருஷ்ணாதி ரூபங்களை
மனதலி = மனதில்
நெலெகொளிஸி = ஸ்திரமாக நிலைநிறுத்தி
நிஸ்சல பகுதியலி = த்ருட பக்தியில்
சளெபிஸிலு மளெ காளிகள நிந்திஸதெ = வெயில், மழை, குளிர் ஆகியவற்றை சகித்துக்கொண்டு
நித்யதலி = தினமும்
நெலதலி = பூமியில்
இஹ = இருக்கும்
கந்தவெ = பொதுவாக இருக்கும் மணம்
சுகந்தவு = பரமாத்மனின் பூஜாசாதனமான சுகந்தம்
ஜலவெ = தண்ணீரில் இருக்கும் சுவை குணமே அறுசுவை பதார்த்தங்கள்
ரூபவெ = அக்னியில் இருக்கும் ரூபகுணம். அதற்கு ஈடான பூஜாசாதனமான தீபம்.
எலரு = வாயுவில் இருக்கும் ஸ்பர்ஷ குணம்
சாமரவு = பூஜைக்கு பயன்படும் சாமரம்
ஷப்த = ஆகாயத்தில் இருக்கும் ஷப்த குணமே வாத்தியங்கள்
அர்ப்பிஸலு = இப்படியாக சிந்தித்து சமர்ப்பித்தால்
வலிவ = மகிழ்வான்
பஞ்சதன்மாத்ரா குணங்களில் பகவத்பூஜா சாதனங்களை சொல்கிறார். கமலனாபனின், ராமகிருஷ்ணாதி ரூபங்களை, த்ருடமான பக்தியினால், மனதில் நிலைநிறுத்தி, மாத்ரா ஸ்பர்ஷங்களால் ஆகும் குளிர், காற்று, வெயில், மழை, ஆகியவற்றின் தோஷங்களை திட்டாமல், அந்தந்த காலங்களில் பகவந்தனால் கிடைத்தவற்றால் திருப்திப்பட்டு, மனதிலேயே பரமாத்மனை பூஜித்தவாறு, ப்ருத்வி, அபு, தேஜஸ், வாயு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களின் மாத்ரா குணங்களில் இருக்கும் மணமே சுகந்தம் என்றும், சுவையே அறுசுவையினாலான நைவேத்தியம் என்றும், ரூபமே தீபம் என்றும், ஸ்பர்ஷமே சாமரம் என்றும், ஷப்தமே வாத்தியங்கள் என்று நினைத்து பூஜித்தால், ஸ்ரீபரமாத்மன் நமக்கு அருள்வான்.
அதாவது, இந்த பூமியில் நாம் எங்கு இருந்தாலும், எவ்வகையான நறுமணத்தை நாம் முகர்ந்தாலும், ‘ஆஹா, எத்தகைய நறுமணம்! என்ன ஆனந்தம்!’ என்று நாம் மட்டும் திருப்தியடையாமல், அந்த நறுமணத்தை அதில் அந்தர்யாமியாக இருக்கும், கந்த குணத்திற்கான பூத தத்வ ரூபியான ஸ்ரீபரமாத்மனுக்கு இதையே நறுமணமாக அர்ப்பிக்கிறேன் என்று சமர்ப்பிக்க வேண்டும். அறுசுவையில் இருக்கும் சுவையை, நாம் நாக்கின் மூலம் ஸ்வீகரிக்கும்போது, அந்த ருசியை, அதில் அந்த ரூபத்தால் இருக்கும் நம் நாக்கில் இருக்கும் பரமாத்மனுக்கு இந்த அறுசுவைகளின் சுவையை சமர்ப்பிக்கிறேன் என்று சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
இதைப்போல, எந்த ரூபத்தைப் பார்த்தாலும், அந்த ரூபகுணங்களில் அதன் நாமகனாக இருக்கும் பரமாத்மனுக்கு நம் கண்ணிற்குத் தெரியும் தேஜோமய ரூபங்கள் அனைத்தும் தீபமாக சமர்ப்பிக்கிறேன் என்று நினைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் நாம் நொந்து போகும்போது, நல்ல தென்றல் வீசினால், அந்த ஸ்பர்ச சுகத்தை, ஸ்பர்ஷ குணத்தில் இருக்கும் பரமாத்மனுக்கு இது சாமரம் என்று சமர்ப்பிக்க வேண்டும்.
காதுகளில் விழும் அனைத்து நல்ல சப்தங்களும், பரமாத்மனுக்கு வாத்தியங்கள் என்று சமர்ப்பித்து பூஜித்தால் வெயில், குளிர் ஆகிய பிரச்னைகள் ஜீவனுக்கு எப்படி வரும்? அவன் பகவத் அருளுக்கு பாத்திரனாவான்.
***
No comments:
Post a Comment