ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, April 3, 2020

#1 - போஜனரசவிபாக சந்தி

#1 - போஜனரசவிபாக சந்தி

வனஜஜாண்ட3தொ3ளுள்ளகி2ல சே
தனரு பு4ஞ்ஜிப சதுரவித4 போ4
ஜன பதா3ர்த்த2தி3 சதுரவித4ரூப தா1னாகி3 |
மனகெ13ந்துத3னுண்டுணிஸி சம்
ஹனனகு11சய க1ரணகா1

ந்த3னிமேஷரிகா3த்ம ப்ரதர்ஷன சுக2வனீவ ஹரி ||1

பிரம்மாண்டதொளுள்ள அகிலசேதனரு = பிரம்மாண்டத்தில் இருக்கும் அனைத்து பிராணிகளும்
புஞ்சிப = தின்னும்
சதுரவித = காத்ய, பேய, போஜ்ய, லேஹ்ய என்னும் நான்கு வகைகள். காத்ய = கடித்துத் தின்னும் பதார்த்தங்கள். பேய = குடிக்கும் பால் முதலியன. போஜ்ய என்றால் வாயில் போட்டு மெல்லும் பதார்த்தங்கள். லேஹ்ய என்றால் நாக்கில் நக்கி சாப்பிடுவது.
போஜனபதார்த்ததி = போஜன பதார்த்தங்களில்
சதுரவித ரசரூப = நான்கு வகையான பதார்த்தங்களின் ரச ரூபங்கள்
தானாகி = அந்த பரமாத்மனே ஆகி
மனகெபந்ததனு = அவரவர்களின் மனதிற்கு வேண்டியதை, உண்டு, உண்ணவைத்து, பிராணிகளில் இருந்து உண்டு,
சம்ஹனனகெ = தேகத்திற்கு
உபசய = புஷ்டியை / வலிமையை
கரணகெ = ஞானேந்திரிய, மனம் ஆகிய இந்திரியங்களுக்கு
ஆனந்த = சுகத்தை / மகிழ்ச்சியை
அனிமிஷரிகெ = தத்வாபிமானி தேவதைகளுக்கு
ஆத்மப்ரதர்ஷன = தன் ஸ்வரூப தரிசனமான
சுகவனீவ = சுகத்தை
கொடுவனு ஹரி = ஸ்ரீஹரி பரமாத்மன் கொடுக்கிறான்.

இந்த சந்தியில், போஜன பார்த்தங்களில் எந்தெந்த பகவத் ரூபங்கள் உள்ளன என்னும் விஷயத்தை சொல்லியவாறு, அப்படி அறிவதன் பலன்களை இந்த பத்யத்தில் சொல்கிறார் தாசராயர். பிரம்மாண்டத்தில் இருக்கும் அனைத்து பிராணிகள் உண்ணும் நான்கு விதமான பதார்த்தங்களில், நான்கு விதமான ருசிகளும் தானே ஆகியிருக்கிறான். அறுசுவைகள் என்று நாம் பொதுவாக சொல்வதை, தாசர் நான்கு என்று சொல்வதற்கான காரணம். 

அறுசுவைகள் என்றால்: இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு மற்றும் உவர்ப்பு. இந்த ஆறும், தாசராயர் கூறியுள்ள நான்கில் அடங்கியுள்ளன. பக்‌ஷ்ய என்றால் இனிப்பு, கசப்பு கலந்தவை சில, உப்பு, காரம் கலந்தவை சில. இப்படி இந்த சுவைகளுள்ள பதார்த்தங்களில், ருசியாக தானே இருக்கிறான். அந்தந்த சேதனர்களின் உள்ளிருந்து, அவர்களுக்கு இந்த சுவைகளுள்ள பதார்த்தங்களை தான் உண்டு, அவர்களை உண்ணவைத்து, தேகத்திற்கு வலிமையைக் கொடுத்து, கண் காது போன்ற இந்திரியங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து, தத்வாபிமானி தேவதைகளுக்கு தன் ஸ்வரூப தரிசனத்தைக் கொடுத்து சுகங்களைக் கொடுக்கிறான் ஸ்ரீபரமாத்மன். 

***

No comments:

Post a Comment