ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, April 18, 2020

#1 - விபூதி சந்தி


#1 - விபூதி சந்தி

ஸ்ரீத1ருணி வல்லப4ன பரம வி
பூ4தி1ரூப1வ கண்ட3கண்ட3
ல்லிதெ1ரதி3 சிந்திசுத1 மனத3லி நோடு3 சம்ப்4ரமதி3 |
நீத1 சாதாரண விசேஷ ச
ஜாதி நைஜாஹிதவு சஹஜ வி
ஜாதி க2ண்டா32ண்ட3 பகெ33ளனரிது புத4ரிந்த ||1


ஸ்ரீதருணி வல்லபன = ஸ்ரீலட்சுமிதேவியின் பதியான (தருணி = எப்போதும் இளமையாகவே இருப்பவள்)
பரம விபூதி ரூபவ = சிறந்த விபூதி ரூபங்களை
நீத, சாதாரண, விசேஷ, சஜாதி, நைஜ, அஹித, சஹஜ, விஜாதி, அகண்ட, கண்ட = என்னும் 10 விபூதி ரூபங்களை
புதரிந்த = ஞானிகளிடம்
அரிது = அறிந்து
ஈ தெரதி = இதன்படி
மனதலி = மனதில்
சிந்திசுத = தியானித்தவாறு
சம்ப்ரமதி = மகிழ்ச்சியுடன்
நோடு = பார்

முந்தைய சந்தியில், போக்த்ரு, போஜ்யாதிகளில் சிந்திக்க வேண்டிய பகவத்ரூபங்களை சொல்லி, இந்த சந்தியில் பரமாத்மனை தியானிக்க வேண்டுமெனில், பகவத்விபூதி ரூபங்களை அறியவேண்டியது அவசியம் என்று விபூதி ரூபங்களை சொல்லியவாறு, முதலாம் பத்யத்திலிருந்து இந்த சந்தியில் சொல்லப்போகும் விபூதி ரூபங்களின் சாரத்தை விளக்குகிறார். ஆகையால், இந்த பத்யத்திற்கு ‘சந்தி ஸூசனெ’ என்று பெயர் வந்தது. 

சம்சார பந்தனத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமெனில், விபூதி ரூபங்களை கண்டிப்பாக அறியவேண்டும்.  ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் இயற்றிய கீதாவிவ்ருத்தி என்னும் வியாக்யானத்தில் - பகவத்கீதை 10ம் அத்தியாயம் இறுதியில் - ‘அஞ்ஞாத்பைனம் சர்வவிசேஷ யுக்தம் தேவம் பரம்கோவிமுச்யைவ பந்தனாத்’, ‘இதி ஸ்ருத்யா ப்ராகுக்த ஞானஸ்ய அவஷ்யகத்வாத்’ என்று சொல்லியிருக்கிறார். இப்படி ஒவ்வொரு வஸ்துகளிலும் விசேஷமாக இருக்கும் பகவத்விபூதி ரூபத்தை அறியாமல் யாரால் பந்தமுக்தன் ஆகமுடியும்? என்னும் ஸ்ருதி வாக்கியத்திற்கேற்ப விபூதி ரூபஞானம் மிக அவசியம் என்பது மேற்சொன்ன வாக்கியத்தின் அர்த்தம். ஆகையால், தாசராயர் விபூதி ரூபங்களை இந்த சந்தியில் தெரிவிக்கிறார். முதல் பத்யத்தில் எவ்வளவு வகையான விபூதி ரூபங்கள் உள்ளது என்றும், விபூதி ஷப்தார்த்தத்தையும் தாசராயர் விளக்குகிறார். 

விபூதி என்றால் என்ன? கீதை 10ம் அத்தியாயம் 16ம் ஸ்லோகத்திற்கான கீதா விவ்ருத்தி வியாக்யானத்தில்:

விபூதயோ நாம விவிததயா நானாரூபதயா, ராம கிருஷ்ணாதிதயா, பூதாநிரூபாணி |
யத்வாயேஷாம்விஷ்ணு ஸ்வரூபாணாம் சன்னிதேரன்யவஸ்துஷு விஷிஷ்டத்வம்ஸ்வஜாதே: ஸ்யாத்விபூத்யாக்யானி தானிது ||

'விபூதி, விவிததயா, பூதய: விபூதய:' - ஒரே மாதிரியான பொருட்களில் ஒரே ஒன்றுக்கு மட்டும் சிறப்பு இருந்தால், அது விஷ்ணுவின் விபூதியென்று நினைக்கவேண்டும். ‘மனுஷ்யாணாஞ்ச பூபதி:’ என்னும் ஆதாரத்தால் விஷ்ணுவின் அம்சம் இருந்திக்கவில்லையெனில், அவன் அரசன் ஆகியிருக்கமாட்டான் என்று அறியவேண்டும். இப்படி ஒரே ஜாதியான பொருட்களில், சிறப்பு சாமர்த்தியம் இருப்பதை விபூதி என்று சொல்லவேண்டும். 

இந்த விபூதிகளில் 10 விபூதி வகைகள் உள்ளன. 

நீத = பகவத்ரூபங்கள் ஸ்வயம்வியக்தானாக (சுயம்பு) இருக்கும் பொருட்கள். உதாரணம்: சாலிகிராமம்

சாதாரண = பிராமணர்களிலும், கிருஹஸ்தாஸ்ரமிகளில் இருக்கும் பகவத்ரூபங்கள்

விசேஷ = யதிகளில் இருக்கும் பகவத்ரூபங்கள். 

சஜாதிய = ’தேவானாம ஸ்மிவாஸவ:’, ‘ருத்ராணாம் ஷங்கரஷ்சாஸ்மி’ என்னும் கீதா வாக்கியங்களால் ’தேவதைகளில் தேவேந்திரனையும், ஏகாதச ருத்ரர்களில் சங்கரனையும் என் விபூதி ரூபங்கள் என்று அறியவேண்டும்’ என்று ஸ்ரீகிருஷ்ணன் கூறியது. அதாவது, தேவதைகள் அனைவரும் ஒரே ஜாதி என்றும், அவர்களில் இந்திரனும், ருத்ரரும் சஜாதியர்கள் என்றும், அவர்களில் சங்கரரையும் விபூதியாக சொல்லியிருப்பதால், இதற்கு சஜாதி விபூதி ரூபம் என்று பெயர்.

நைஜ = பரமாத்மனின் ஸ்வயம் அம்சங்களான நைஜ ரூபங்கள். உதாரணம்: ராம கிருஷ்ணாதி ரூபங்கள். 'மேரு: ஷிகரிணாமஹம், ஸ்தாவிராணாம் ஹிமாலய:’. சிகரம் உள்ள மலைகளில் மேரு பர்வதத்தை விபூதி என்று அறிய வேண்டும். நகராப் பொருட்களில் (ஸ்தாவரங்களில்) இமாலயத்தை விபூதி என்று அறிய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இத்தகைய ஸ்தாவிரங்களில், விபூதியை சிந்திப்பதற்கு அஹித விபூதி என்று பெயர். சராசர பிரதிமைகளில் விபூதி ரூபங்களை சிந்திப்பதற்கு விஜாதீய விபூதி.. அதாவது ‘நக்‌ஷத்ராணாமஹம்ஷஷி’, ‘அஸ்வத்த: சர்வ வ்ருக்‌ஷாணாம்’, ‘ம்ருகாணாம் ம்ருகேந்த்ரோஹம்’ இந்த உதாரணங்களில் நட்சத்திரத்திற்கும், நிலவிற்கும் பரஸ்பரம் விஜாதியே தவிர, சஜாதி அல்ல. அப்படியே, மரங்களில் அஸ்வத்தத்தையும், மிருகங்களில் சிங்கத்தையும் விபூதி என்று சொல்லியிருக்கிறார். இப்படியாக ஒவ்வொரு ஜாதிகளிலும் அதிக மகிமையுள்ள பொருளில், தனித்தனி பகவத்ரூபங்களை அறிவதே கண்ட விபூதி என்று சொல்வர். (கீதா 10-41ம் ஸ்லோகம்). 

யத்யத்விபூதி மத்ஸத்வம் ஸ்ரீ மதூர்ஜித மேவவா |
தத்தேவாவகஜ்ஜத்வம் மமதேஜோம்ஷ சம்பவம் ||

’ஹே அர்ஜுனனே, எந்தெந்தெ பதார்த்தங்கள், சஜாதி விஜாதிகளில், செல்வத்தினாலோ, வலிமை அல்லது ஒளியாலோ அதிகமாக இருக்கிறதோ, அவற்றையெல்லாம் என் தேஜோம்சம் என்று அறி’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன். இப்படியாக தனித்தனியாக அறிவதே கண்ட விபூதிகள்.

அகண்ட என்றால்: 
அதவா பஹு நைதேனகிம் ஞானேன தவார்ஜுன |
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்ஷேன ஸ்திதோ ஜகத் ||
(கீதை 10-42 ஸ்லோகம்).

’ஹே அர்ஜுனா! மேற்சொன்ன மாதிரி கண்ட ரூபங்களை அறிந்து உனக்கு ஆவது என்ன? முக்கியமான ஒரு அம்சத்தை சொல்கிறேன், கேள். எனக்கிருக்கும் அனந்தாம்சங்களில், ஒரு அம்சத்தினால், இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் வியாப்தனாக இருக்கிறேன் என்று அறி. ஒரே அம்சத்தினால் அனைத்து இடங்களிலும் இருப்பதாக சிந்திப்பதை அகண்ட விபூதி என்று அறியவேண்டும்’. இப்படியாக 10 விதமான விபூதிகளை மனதில் அறிந்து சிந்திப்பாயாக என்று தாசராயர் ஒரே பத்யத்தினால் விபூதியின் விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். 

’கண்ட ரூபங்களையும் விபூதிகளையும் அறிந்து உனக்கு ஆகப்போவது என்ன?’ என்று ஸ்ரீகிருஷ்ணன் கீதையில் கேட்பதால், இதன்மூலம் அகண்ட ரூப உபாசனையே போதும் என்று சொல்வதால், கீதையின் விபூதி அத்தியாயமும், தாசராயரின் விபூதி சந்தியும்கூட தேவையேயில்லையே என்று தோன்றலாம். 

ஆனால், கீதா விவ்ருத்தியில் இதற்கான தீர்வு உள்ளது. 

நதைதஞ்ஞானாதேவ மோக்‌ஷ சித்தௌப்ராகுத்த பரிச்சின்ன விபூதி ரூபாணாம் ஞானம் வ்யர்த்தமிதி ததுக்தி வ்யர்த்தேதிஷக்யம் |
அஞ்ஞாத்வைனம் இதி ஸ்ருத்யாப்ராகுத்த ஞானஸ்யாவஷ்யகத்வாத் ||
மஹா பலாதிகாரித்வாத்தவோபயஞ்ஞான மவஷ்யகம் |
நவிசேஷஞ்ஞானமாத்ரெண ஆலமிதி தவைதேனஞாதேன கிமிதி பாவேன தவேத்யுக்தம் ||

இப்போது சொன்ன அகண்ட ரூபோபாசனையாலேயே மோட்சம் கிடைக்கிறது என்றால், மேற்சொன்ன கண்ட ரூபோபாசனை எதற்கு? இதுவரை சொன்ன விபூதி அத்தியாயமே வீண் என்று நினைக்கக்கூடாது. ‘அஞ்ஞாத்வைனம்’ என்னும் ஸ்ருதியில் கண்ட ரூபோபாசனை செய்தாலே ஒழிய முக்தி கிடைப்பதில்லை என்று சொல்லியிருப்பர். ஆகையால், கண்ட ரூபோபாசனையும்கூட அவசியமே. நீ மஹா பலாதிகாரியான (பலன்களை தன் விருப்பப்படி கொடுப்பவர்) காரணத்தால், உனக்கு கண்டாகண்ட ஞானம் அவசியம் என்று சொல்லியிருக்கிறாரே தவிர, அந்த ஞானமே அனாவசியம் என்று சொல்லவில்லை என்பது ஸ்ரீகிருஷ்ணனின் அபிப்பிராயம் என்பது மேற்சொன்ன வாக்கியத்தின் அர்த்தம். ஆகையால், உத்தமாதிகாரிகளுக்கு, கண்டாகண்ட ரூபங்கள் இரண்டின் ஞானமும் அவசியம் என்றும், சாமான்யாதிகாரிகளுக்கு, கண்டரூபோபாசனை ஒன்றாவது அவசியம் என்று அறிந்து 10 விதமான ஸ்தானங்களில் நிலைத்திருக்கும் பகவத் விபூதியை நினைக்க வேண்டும் என்று இந்த முதலாம் பத்யத்தினால் சொல்லி, அடுத்த பத்யங்களிலிருந்து கண்ட ரூபங்களை விளக்குகிறார். 

***

No comments:

Post a Comment