#18 - விபூதி சந்தி
கோ3ளக1வெ கு1ண்ட3க்னி க1ரணவு
மேலொத3கி3ப3ஹ விஷய ஸமிதெ4யு
கா3ளி யத்னவு கா1ம தூ4மவு ஸன்னிதா3னார்ச்சி |
மேளனவெ ப்ரஜ்வாலெ கி1டிக3ளு
தூ1ளிதா3னந்த3க3ளு த1த்த1
த்கா1ல மாது1க3ளெல்ல மந்த்ராத்4யாத்1ம யக்ஞவிது3 ||18
கோளகவெ = சூக்ஷ்ம ஸ்தூல சரீரங்களே
குண்ட = அக்னிகுண்டம்
கரணவு = இந்திரியங்களே அக்னி
மேலொதகிபஹ விஷய = அவ்வப்போது கிடைக்கும் விஷயங்களே
சமிதெயு = காஷ்டங்கள் (குச்சிகள்)
யத்னவு = முயற்சியே, காற்று
காம = விஷயத்தைப் பற்றிய ஆசையே
தூமவு = புகை
ஸன்னிதான = விஷயேந்திரியங்களுக்கும், விஷய போக்ய வஸ்துகளுக்கும் அருகில்
அர்ச்சி = அக்னி ஜ்வாலை
மேளனவெ = விஷயேந்திரியங்களுக்கும் போக்ய வஸ்துகளுக்கும் இருக்கும் பரஸ்பர சம்பந்தம்
ப்ரஜ்வாலெ = விசேஷமான ஜ்வாலை
கிடிகளு = ஒளி
தூளிதானந்தகளு = போகத்தினால் வரும் மகிழ்ச்சியே
தத்தத்காலமாதுகளெல்ல = அந்தந்த காலங்களில் பேசும் பேச்சுக்கள் அனைத்தும்
மந்த்ர = மந்திரங்கள்
இது = இப்படி, சிந்திப்பதே ஆத்யாத்ம யக்ஞம் ஆகும்.
தேஹேந்திரியங்களின் செயல்களையே ஆத்யாத்ம யக்ஞங்களாக சிந்திப்பது என்பது பரமாத்மனின் பூஜை என்று சொல்கிறார் தாசராயர்.
ஸ்தூல மற்றும் ஸூக்ஷ்ம சரீரங்களே அக்னி குண்டங்கள். கண், காது ஆகிய இந்திரியங்களே அக்னி. கண், காது ஆகியவற்றால் செய்யப்படும் விஷயங்களான பார்ப்பது, கேட்பது ஆகியவையே காஷ்டங்கள். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் முயற்சிப்பதே காற்று. அந்த விஷய போகங்களைப் பற்றிய விருப்பமே புகை. கண், காது முதலான இந்திரியங்களுக்கு பார்ப்பதற்கும், கேட்பதற்கும் உரிய பொருட்கள் அதாவது அழகான ரூபமுள்ள பொருள், அல்லது இனிமையான பாடல் ஆகியவற்றின் சமீபமே (அருகாமையே) ஜ்வாலை. இந்திரியங்களுக்கு யோக்ய வஸ்துகள் கிடைப்பதே விசேஷ ஜ்வாலை.
அதிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே ஒளி. அந்தந்த காலத்திற்கேற்ப பேசும் பேச்சுக்களே மந்திரங்கள்.
இப்படி நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பகவந்தனுக்கு சம்பந்தப்பட்ட விஷயத்தையே சிந்திப்பதற்கு ஆத்யாத்ம யக்ஞம் என்று பெயர். பிரத்யட்ச யாகங்களை செய்வதற்கு, அக்னியின் முன் அமர்ந்து கஷ்டமான யக்ஞ யாகங்களை செய்தாலும், இந்த ஆத்யாத்ம யாகத்திற்கு சமமான பலன் கிடைக்காது. இந்த வகையான ஆத்யாத்ம யக்ஞமானது பரமாத்மனின் விசேஷமான பூஜை என்று அறியவேண்டும். த்ரவ்ய யக்ஞாதிகள் கஷ்டமானவை, பலன் குறைவு, ஆனால், இந்த யக்ஞமானது அதிக பலன்களைக் கொடுக்கக்கூடியது.
’ஷப்தாதீன்விஷயானன்யே இந்த்ரியாக்னிஷு ஜுஹ்வதி’ - சில ஞானிகள் தாம் அனுபவிக்கும் விஷய போகங்களை, தம் சொற்களால், இந்திரியாக்னிகளில் ஹோமம் செய்வர். என்னும் கீதா வாக்கியத்தின் சாரமே இங்கு விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.
***
No comments:
Post a Comment