#19 - விபூதி சந்தி
மது4விரோதி4ய ப1ட்டணகெ பூ
ர்வத3 க1வாடக3ளக்ஷி நாஸிக1
வத3ன ஷ்ரோத்ரக3ளெரடு த3க்ஷிண உத்த1ர த்3வார |
கு3த3 உபஸ்த2க3ளெரடு பஸ்சிம
க1த3க1ளெனிபுவு ஷட்ஸரோஜவே
ஸதன ஹ்ருத3யவெ மண்டப த்ரிகு3ணகளெ கலஷக3ளு ||19
மதுவிரோதிய = மது நாமக தைத்யனைக் கொன்ற ஸ்ரீபரமாத்மனின்
பட்டணகெ = நம் இந்த சரீரமே அவன் பட்டணம். அத்தகைய பட்டணத்திற்கு
அக்ஷி = இரு கண்கள்
நாசிக = மூக்கு துவாரங்கள்
வதன = வாய் ஆகியவை
பூர்வத கவாடகளு = கிழக்கு வாசல்கள்
ஸ்ரோத்ரகளெரடு = காதுகள் இரண்டும்
தக்ஷிண உத்தர த்வார = வடக்கு தெற்கு வாசல்கள்
குத உபஸ்தகளெரடு = மல, ஜல த்வாரங்கள் இரண்டும்
பஸ்சிம கதகளெனிபுவு = மேற்கு வாசல்கள் எனப்படுகின்றன
ஷட்ஸரோஜவே = இதயத்தில் இருக்கும் ஆறு தள தாமரையே
ஸதன = பரமாத்மனின் வீடு
ஹ்ருதயவெ மண்டப = இதயமே மண்டபம்
த்ருகுணகளெ = சத்வ ரஜஸ் தமோ குணங்களே
கலஷ = மண்டபத்தின் கலசங்கள் என்று அறியவேண்டும்.
19ம் பத்யத்திலிருந்து 23ம் பத்யம் வரைக்கும், இந்த சரீரத்தை பரமாத்மனின் பட்டணமாக அறிந்து, பூஜிக்கும் விதங்களைப் பற்றி கூறுகிறார் தாசராயர்.
நம் சரீரமே, மதுசூதனனின் பட்டணம் என்று சிந்திக்க வேண்டும். பட்டணம் என்று சொன்ன பிறகு அதன் லட்சணங்கள் எவை என்று சொல்கிறார். அது என்ன என்றால்:
கண்கள், மூக்கு த்வாரங்கள், வாய் இவைகளே இந்த பட்டணத்திற்கு கிழக்கு வாசல்கள். வலது காது தெற்கு கதவு. இடது காது வடக்கு காது. மல ஜல த்வாரங்கள் மேற்கு வாசல்கள். இந்த விஷயத்தைப் பற்றி பாகவதம் 4ம் ஸ்கந்தம் 29ம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஆதார ஸ்லோகங்கள் இவையே.
நவத்வாரம் த்விஹஸ்தாங்க்ரிம் புரம்மனுத ஸாத்விதி |
அக்ஷிணீ நாஸிகே அஸ்யமிதி பஞ்சபுரஸ்க்ருதா: ||
தக்ஷிணாதக்ஷிண: கர்ண: உத்தராசோத்தர: ஸ்ம்ருத: |
பஷ்சிமே இத்யதௌத்வாரௌ குதஷிஷ்னாவிஹோதிதே |
நம் இதயத்தில் இருக்கும் ஆறு தள தாமரையே பரமாத்மனின் வீடு. இதயமே மண்டபம். ஸத்வரஜஸ்தமோ குணங்களே கலசம்.
***
No comments:
Post a Comment