#22 - போஜனரசவிபாக சந்தி
ஷண்ணவதி நாமக1னு வசு மூ
க1ண்ண பா4ஸ்கரரொளகெ3 நிந்து1 ப்ர
பன்னரனுதின நிஷ்க1பட1 ஸத்ப4க்தியலி மாள்ப |
புண்யகர்மவ ஸ்வீகரிஸி கா
ருண்யஸாகர பித்ருக3ளிகெ3 அ
க3ண்ய சுக2வித்தவர பொரெவனு எல்லகா1லத3லி ||22
ஷண்ணவதி நாமகனு = 96 ஸ்வரூபங்களால், ஷண்ணவதி என்று அழைத்துக் கொள்ளும் ஸ்ரீபரமாத்மன்
வசுமூகண்ண பாஸ்கரரொளகெ = வசுகண, ருத்ரகண, சூர்யகண என இந்த மூன்று கணங்களுக்குள்ளும்
நிந்து = இருந்து
ப்ரபன்னரனு = தன்னை சரணடைந்தவர்களை
அனுதின = தினந்தோறும் (எப்போதும்)
நிஷ்கபட = கபடம் இல்லாமல்
சத்பக்தியலி = மிகச்சிறந்த பக்தியில்
மாள்ப = செய்யும்
புண்யகர்மவ = புண்ணிய கர்மங்களை
ஸ்வீகரிஸி = ஏற்றுக் கொண்டு
காருண்யசாகர = கருணைக்கடலான (பகவந்தன்)
பித்ருகளிகெ = அந்த பித்ருகணங்களுக்கு
அகண்ய சுகவித்து = அபரிமிதமான சுகங்களைக் கொடுத்து
எல்லகாலதலி = எப்போதும் (நிரந்தரமாக)
அவர = அந்த பித்ருகளை
பொரெவனு = காப்பாற்றுவான்.
பரமாத்மன் ஷண்ணவதி என்று அழைத்துக் கொள்வதற்கான காரணம்:
1 ஆண்டில் 96 ஸ்ரார்த்தங்கள் வருகின்றன. அவை எவை என்றால்:
மன்வாதிகள் 14
யுகாதிகள் 4
பாத்ரபத பகுள பிரதமை முதல் அமாவாசை வரை மகாலய பட்சம் 15
சங்க்ரமணங்கள் 12
அமாவாசைகள் 12
வியதிபாதங்கள் 13
வைத்ருதிகள் 13
திஸ்ராஷ்ட 12
இறந்த திதி 1
ஆக மொத்தம் 96 ஸ்ரார்த்த போக்தன் ஆகையால், பரமாத்மனுக்கு ஷண்ணவதி ஸ்வரூபி என்று பெயர் வந்தது. மேலும், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர்களில் வசு, ருத்ர, ஆதித்ய ரூபங்களால் இருக்கிறான். பிரத்யும்னன் வசு ரூபமாகவும், சங்கர்ஷணன் ருத்ர ரூபனாகவும், வாசுதேவன் ஆதித்ய ரூபமாகவும் இருக்கிறான்.
வசுகள் 8
ருத்ரர் 11
ஆதித்யர் 12
மொத்தம் 31. இப்படி 31 ரூபங்களால் வசு ருத்ர ஆதித்யர்களின் தேகத்தில், வைகாரிக அஹங்கார இருக்கும் மனஸ், தைஜஸ அஹங்கார இருக்கும் இந்திரியங்கள், தாமஸ அஹங்கார இருக்கும் பஞ்சபூதங்கள், என வைகாரிகாதி மூன்று விதமான அஹங்காரங்களில் நிலைத்திருப்பதால், 31*3-93. பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ என 3 ஆக மொத்தம் 93+3=96 ரூபங்களால் பித்ருகளில் இருந்து, தன்னை சரணடைந்தவர்களை, அதாவது ஒருவனின் வம்சத்தில் இருந்த பித்ருகளுக்காக, கபடங்கள் இல்லாமல், பக்தியுடன், ஸ்ரார்த்தங்களை செய்தால், அவற்றை ஸ்வீகரித்து, கருணைக்கடலான ஸ்ரீஹரி, அந்த பித்ருகளுக்கு அனந்த சுகங்களைக் கொடுத்து, அனைத்து காலங்களிலும் அந்த பித்ருகளை, ஸ்ரார்த்தம் செய்பவர்களைக்கூட காப்பாற்றுகிறான்.
***
No comments:
Post a Comment