#24 - விபூதி சந்தி
ஈ ஷரீரவெ ரத2 ப1தா1க ஸு
வாஸக3ளு புண்ட்ரக3ளு த்4வஜ ஸிம்
ஹாஸனவெ சித்தவு சுபுத்தி4யெ கலஷ ஸன்மனவெ |
பாஷ கு3ண த3ண்டத்ரயக3ளு ஷு
பா4 ஷுப4த்வய கர்மசக்ர ம
ஹா சமர்த்தா4ஷ்வக3ளு த3ஷ கரணங்க3ளெனிஸுவுவு ||24
ஈ ஷரீரவெ ரத, சுவாஸகளு = நாம் தரித்திருக்கும் வஸ்திரங்களே
பதாக = த்வஜங்கள் (கொடிகள்)
புண்ட்ரகளு = 12 கோபிசந்தன நாமங்களே, த்வஜஸ்தம்பங்கள் (கருட முத்திரை என்றால் கருட த்வஜம் என்று அர்த்தம்)
சித்தஸுபுத்தியெ = பகவத் விஷயமான புத்தியே
கலஷ = ரதத்தின் கலச
ஸன்மனவெ = பகவத் பாதாரவிந்தங்களில் நிலைத்திருக்கும் மனமே
பாஷ = லகான் (குதிரைகளை பிடித்து இழுக்கும் கயிறு)
குண = சத்வ ரஜஸ் தமோ குணங்கள்
தண்டத்ரயகளு = குதிரைகளை அடிக்கும் குச்சிகள்
ஷுபாஷுபத்வயகர்ம = புண்ய பாப கர்மங்கள்
சக்ர = (இரண்டு) சக்கரங்கள்
தஷகரணங்களு = பத்து இந்திரியங்கள்
மஹாஸமர்த்தாஷ்வகளு = மிகவும் திறன் கொண்ட குதிரைகள்
எனிஸுவவு = என்று நினைத்து பூஜிக்க வேண்டும்
நம் தேகத்தை ரதம் என்றும், பரமாத்மன் அதில் அமர்ந்திருக்கிறான் என்றும் சிந்தித்து பூஜிப்பது ஒரு வகையான சாதனை என்று இரு பத்யங்களால் விளக்குகிறார் தாசராயர்.
தேஹோரதஸ்த்வம் த்ரியாஷ்வ: ஸம்வத்ஸர வயோகதி: |
மனோரஷ்மிர்புத்தி ஸுதோஹ்ருன்னீடோ த்வந்த்வ கூபர: ||
(பாகவத 4ம் ஸ்கந்தம் 29ம் அத்தியாயம் 18ம் ஸ்லோகம்)
இந்த வாக்கியத்தின் சாரத்தையே தாசராயர் இங்கு விளக்கியிருக்கிறார். இந்த சரீரமே ரதம். நாம் தரித்திருக்கும் ஆடைகளே ரதத்தின் கொடிகள். 12 கோபிசந்தன நாமங்களே கருட சின்னத்தால் கூடிய த்வஜம். நம் சித்தமே பரமாத்மன் அமரும் சிம்ஹாசனம். பகவத் விஷயத்தில் ஈடுபடும் புத்தியே ரதத்தின் மேல் இருக்கும் கலசம். பகவத் பாதாரவிந்தங்களில் இருக்கும் மனமே குதிரையின் லகான் கயிறுகள். ‘ஸன்மனவுபாஷ’ என்று சொல்கிறார். பாஷ என்றால் கயிறு. இதை லகான் கயிறு என்று ஏன் அர்த்தம் கொள்ளவேண்டும் என்றால், பாகவத வாக்கியத்தில் ‘மனோரஷ்மிபி:’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஆதாரத்தினாலும், ரதத்திற்கு வெறும் கயிறின் சம்பந்தம் இல்லாததாலும், மேற்சொன்ன அர்த்தத்தையே சொல்ல வேண்டியதாகிறது. ஸத்வரஜஸ்தமோ குணங்களே தண்டங்கள் (கொம்பு / குச்சிகள்). புண்ய பாவங்களே சக்கரங்கள். ஞானேந்திரிய கர்மேந்திரியங்கள் பத்து - இவையே மிகவும் புத்திசாலிகளான / திறன்களைக் கொண்ட குதிரைகள்.
***
No comments:
Post a Comment