#10 - போஜனரசவிபாக சந்தி
வாசுதேவனு = வாசுதேவ நாமக பரமாத்மன்
அன்னதொளு = அன்னத்தில்
நானாசுபக்ஷ்யதி = பல வகைகளான சிறந்த பக்ஷயங்களில்
சங்கர்ஷண = சங்கர்ஷண நாமக பரமாத்மன்
க்ருதீஷ = பிரத்யும்ன நாமக பரமாத்மன்
பரமான்னதொளு = பாயசங்களில்
அனிருத்த = அனிருத்த நாமக பரமாத்மன்
க்ருததொளகெ = நெய்யில்
இப்பனு = இருக்கிறான்
ஆசுபர்ணாம்சகனு = கருட வாகனனான ஸ்ரீகிருஷ்ணன் (சுபர்ண = கருடன், அவனின் அம்சக = முதுகில் அமர்ந்திருப்பவன்)
சூபதி = பருப்புகளில்
வாசவானுஜ = இந்திரனின் தம்பியான உபேந்திரன் (வாமனன்)
ஷாகதொளு = பொரியல்களில்
மூலேஷ = மூல பிரக்ருதிக்கு தலைவனான, நாராயணன்
சர்வத்ரதலி = அனைத்து போஜ்ய பதார்த்தங்களில்
நெலெஸிஹனு = நிலைத்திருக்கிறான்.
அன்னத்தில் வாசுதேவ மூர்த்தியும்,
பற்பல வகைகளான சிறந்த பக்ஷ்யங்களில் சங்கர்ஷண மூர்த்தியும்,
பாயசத்தில், கிருதிபதியான பிரத்யும்ன மூர்த்தியும்,
நெய்யில் அனிருத்த மூர்த்தியும் இருக்கின்றனர்.
பருப்பில், கருட வாகனனான ஸ்ரீகிருஷ்ணனும்
பொரியல்களில் உபேந்திரனும்
அனைத்து போஜ்ய பதார்த்தங்களில் லட்சுமிபதியான ஸ்ரீ நாராயணனும் நிலைத்திருக்கின்றனர்.
***
வாசுதே3வனு அன்னதொ3ளு நா
நா சுப4க்ஷ்யதி3 சங்கர்ஷண க்ரு
தீ1ஷ பரமான்னதொ3ளு க்4ருத1தொ3ளகி3ப்ப1 னனிருத்த3 |
ஆ சுபர்ணாம்சக3னு ஸுபதி3
வாசவானுஜ ஷாக1தொ3ளு மூ
லேஷ நாராயணனு சர்வத்ரத3லி நெலெஸிஹனு ||10
வாசுதேவனு = வாசுதேவ நாமக பரமாத்மன்
அன்னதொளு = அன்னத்தில்
நானாசுபக்ஷ்யதி = பல வகைகளான சிறந்த பக்ஷயங்களில்
சங்கர்ஷண = சங்கர்ஷண நாமக பரமாத்மன்
க்ருதீஷ = பிரத்யும்ன நாமக பரமாத்மன்
பரமான்னதொளு = பாயசங்களில்
அனிருத்த = அனிருத்த நாமக பரமாத்மன்
க்ருததொளகெ = நெய்யில்
இப்பனு = இருக்கிறான்
ஆசுபர்ணாம்சகனு = கருட வாகனனான ஸ்ரீகிருஷ்ணன் (சுபர்ண = கருடன், அவனின் அம்சக = முதுகில் அமர்ந்திருப்பவன்)
சூபதி = பருப்புகளில்
வாசவானுஜ = இந்திரனின் தம்பியான உபேந்திரன் (வாமனன்)
ஷாகதொளு = பொரியல்களில்
மூலேஷ = மூல பிரக்ருதிக்கு தலைவனான, நாராயணன்
சர்வத்ரதலி = அனைத்து போஜ்ய பதார்த்தங்களில்
நெலெஸிஹனு = நிலைத்திருக்கிறான்.
அன்னத்தில் வாசுதேவ மூர்த்தியும்,
பற்பல வகைகளான சிறந்த பக்ஷ்யங்களில் சங்கர்ஷண மூர்த்தியும்,
பாயசத்தில், கிருதிபதியான பிரத்யும்ன மூர்த்தியும்,
நெய்யில் அனிருத்த மூர்த்தியும் இருக்கின்றனர்.
பருப்பில், கருட வாகனனான ஸ்ரீகிருஷ்ணனும்
பொரியல்களில் உபேந்திரனும்
அனைத்து போஜ்ய பதார்த்தங்களில் லட்சுமிபதியான ஸ்ரீ நாராயணனும் நிலைத்திருக்கின்றனர்.
இந்த சந்தியில் முதல் பத்யத்திலிருந்து துவங்கி இன்னும் அடுத்தடுத்த பத்யங்களில் சொல்லப்பட்டிருக்கும் வியாப்தி விஷயங்கள், ஐதரேய பாஷ்யத்தில் தெளிவாக விவரமாக விளக்கப்பட்டுள்ளது. அதையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார். அதிலும், நிருபமானந்தாத்ம என்னும் 8ம் பத்யத்திலிருந்து 10ம் பத்யம் வரைக்கும் சொல்லியிருப்பதற்கான ஐதரேய உபநிஷத் வாக்கியங்கள் இவையே.
சங்கர்ஷண ப்ரத்யும்னௌ தத்ர போக்த்யஷு சம்ஸ்திதௌ |
போக்த்ய ஷக்திப்ரதௌ நித்யம் போக்தாதௌச விசேஷத: ||
நாராயணானிருத்தௌச போஜ்யவஸ்து ஷுசம்ஸ்திதௌ |
தர்ப்பகோ சர்வஜீவானாம் ||
(இது 8ம் பத்யத்தின் அர்த்தத்தை விளக்கும் உபநிஷத் வாக்கியம்).
அவகாஷப்ரதோ நித்யம் வாசுதேவோ நபஸ்தித: |
பஞ்சரூபாத்மகம் விஷ்ணும் ய உபாஸ்தெ சதைவஹி ||
(இது 9ம் பத்யத்தின் அர்த்தத்தை விளக்கும் உபநிஷத் வாக்கியம்).
வாசுதேவஸ்துஜான்னஸ்தோஹ்ய நிருத்தோக்ருக்தே ஸ்தித: |
நாராயணஸ்து சர்வத்ர ||
(இது 10ம் பத்யத்தின் அர்த்தத்தை விளக்கும் உபநிஷத் வாக்கியம்).
No comments:
Post a Comment