#17 - போஜனரசவிபாக சந்தி
***
நூரவொந்து சுரூபதி3ம் ஷா
ந்தீ1ரமண தானன்ன னெனிபை
நூருமேல் மூரதி4க3தச ப்ராணாக்2ய ப்ரத்3யும்ன |
தோருதிஹ னயிவத்து ஐது3 வி
கா1ரமனதொ3ளு சங்கருஷணை
நூரு சதுராஷீதி விக்ஞானாத்ம விஷ்வாக்2ய ||17
அன்னகோஷத்தில், அன்னாதிகளின் சமூகத்திற்கு (உதாரணம்: ஒரு பாத்திரத்தில் உள்ள மொத்த அன்னத்திற்கு) மய என்று பெயர். கோஷம் என்றால் அதற்கான உறை என்று பொருள். அதற்குள் முழுமையாக அன்னத்தை நிரப்பினால், அதை அன்னமய என்று அழைக்கலாம். கண்டரூபத்தினால் அன்னகோஷாதிகளில் இருக்கும் பகவத்ரூபங்களை முன்னர் கூறினார். இப்போது, அன்ன, பிராண ஆகிய சொற்களில் அழைக்கப்பட்டு அகண்ட ரூபங்களாக இருக்கும் பகவத்ரூபங்களை தெரிவிக்கிறார்.
ஷாந்திரமண = ஷாந்திதேவியின் பதியான அனிருத்த நாமக பரமாத்மன்
நூரவொந்து சுரூபதிம் = 101 ரூபங்களால்
அன்னனெனிபை = அன்னமய கோஷத்திற்கு அன்ன என்னும் பெயரில் ஆதாரபூதனாக இருக்கிறான்
ப்ரத்யும்ன = பிரத்யும்ன நாமகன்
ஐனூருமேல் மூரதிகதச = 513 ரூபங்களால்
ப்ராணாக்ய = பிராண என்னும் பெயரால் பிராணகோஷத்தை தரித்திருக்கிறான்
சங்கர்ஷண = சங்கர்ஷண நாமகன்
ஐவத்துஐது = 55 ரூபங்களால்
விகாரமனதொளு = சஞ்சலமான மனஸ் என்னும் கோஷத்திற்கு ஆதாரமாக மனஸ் என்னும் பெயரால் காணப்படுகிறான்
விஷ்வாக்ய = பிரபஞ்சத்தை காத்துக்கொண்டிருக்கும் வாசுதேவன்
ஐ நூருசதுராஷீதி = 584 ரூபங்களால்
விக்ஞானாத்ம = விக்ஞான கோஷத்திற்கு ஆதாரமாக விக்ஞான ஸ்வரூபனான இருக்கிறான்.
ஷாந்திரமணனான அனிருத்தன், சரீரத்தில் அன்னமயனாக அன்ன என்று அழைக்கப்படுகிறான். அதாவது, ஒவ்வொரு பருக்கையையும் தனித்தனியாக எடுத்துப் பார்த்தால், அது கண்ட எனப்படுகிறது. இப்படி பல கண்ட ரூபங்களால் ஆன ஒரு குழுவிற்கு, அகண்டமாக அன்ன என்று பெயர். முந்தைய பத்யத்தில் கண்ட ரூபத்தை சொல்லி, இங்கு அன்ன, பிராண என்னும் அகண்ட ரூபத்தை சொல்கிறார். அன்ன என்பதை எண்ணிக்கையில் சொன்னால், அ=1 ன்ன=10. இதை வலப்பக்கத்திலிருந்து படித்தால், 101 ரூபங்கள் ஆகிறது. இந்த ரூபங்களால் அனிருத்தன் அன்ன என்று அழைக்கப்படுகிறான்.
இதைப்போலவே, பிரத்யும்னன் பிராண என்பதை எண்ணிக்கையில் படித்தால், ப்ர=3 அ=1 ண=5 ஆகிறது. இதை வலப்பக்கத்தில் இருந்து படித்தால், 513 ரூபங்கள் ஆகிறது. இவ்வளவு ரூபங்களால் பிராணகோஷாதாரகனாகி பிராண எனப்படுகிறான்.
சங்கர்ஷணன் மனிதர்களுக்கு ஒவ்வொரு நொடியும் அழியும் தன்மையைக் கொடுக்கும் மனோகோஷத்திற்கு ஆதாரமாக, மன என்று அழைக்கப்படுகிறான். மன = ம=5 ன=5 என 55 என்று வருகிறது. 55 ரூபங்களால் மனஸ் என்று அழைத்துக் கொள்கிறான். விஷ்வாதாரனான வாசுதேவன் விக்ஞான கோஷத்திற்கு ஆதாரனாகி, வி=4, ஞா=8 ன=5 , அதாவது 584 ரூபங்களால் விக்ஞான என்று அழைத்துக் கொள்கிறான்.
***
No comments:
Post a Comment