#23 - போஜனரசவிபாக சந்தி
ஸுத1ப1னேகோ1த்தர சுபஞ்சா
ஷத வரண க1ரணதி3 சதுரவிம்
ஷதி சுத1த்வதி தா4துக3ளொளித்த3விர தனிருத்3த4 |
ஜத1னமாள்பனு ஜகதி3ஜீவ
ப்ரததி1கள ஷண்ணவதி நாமக
சதுரமூர்த்தி க3ளர்ச்சிசுவ ரத3ரிந்த3 ப3ல்லவரு ||23
சுதப = சூரியனில் இருந்துகொண்டு உலகத்தில் நன்றாக வெப்பத்தை உருவாக்குவதால் சுதப என்று பெயரைக் கொண்ட பரமாத்மன்
ஏகோத்தர சுபஞ்சாஷத = 51
வரண = அ-முதலான அனைத்து எழுத்துக்கள்
கரணதி = மனோ இந்திரியத்திற்கு, காரணமான இதய கமலத்தின் 12 இதழ்களிலும்
சதுரவிம்ஷதி சுதத்வதி = 24 தத்வங்களிலும்
தாதுகளொளு = எலும்பு, தோல் முதலான 7 தாதுகளில் இருந்து
அனிருத்த = அனிருத்த நாமக ஸ்ரீபரமாத்மன்
அவிரத = இடைவிடாமல் (தொடர்ந்து)
ஜகதி = உலகத்தில்
ஜீவ ப்ரததிகள = ஜீவர்களை
ஜதனமாள்பனு = காப்பாற்றுவான்
அதரிந்த = ஆகையால்
ஷண்ணவதி நாமக = ஷண்ணவதி என்று பெயரைக் கொண்ட 96 ரூபங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்
சதுரமூர்த்திகள = அனிருத்த அனிருத்த, அனிருத்த பிரத்யும்ன, அனிருத்த சங்கர்ஷண, அனிருத்த வாசுதேவ என்னும் அனிருத்தனின் நான்கு ரூபங்களை, அறிந்தவர்கள் / ஞானிகள் அர்ச்சிக்கின்றனர்.
மேலே பார்த்த 96 ரூபங்களை விளக்கி, அதில் அனிருத்தனின் வியாப்தித்வத்தை விளக்குகிறார். ‘சம்யுக்தபதீதி சுதப:’ என்னும் குறிப்பினால், சூரியனில் இருந்து, உலகின் இருட்டினை போக்குபவன் ஆகையால், பரமாத்மனு சுதப என்று பெயர். அ-முதல் க்ஷ-வரை 51 எழுத்துகள். வர்ணங்களால் புகழப்படுபவனான பரமாத்மனின் ரூபங்கள் 51. அஜ, ஆனந்த, இந்திர, ஈஷான, உக்ர, ஊர்ஜ, ருதம்பர, ஊக, இஷ, ஈஜ, ஏகாத்ம, ஐர, ஓஜோப்ருத், ஔரஸ, அந்த, அர்த்தகர்ப்ப, கபில, கபதி, கருட, கர்ம, ஞஸார, சார்வங்க, சந்தோகம்ய, ஜனார்த்தன, ஜாடிதாரி, ஞம, டங்கி, டகல, டரிண, ணாத்ம, தார, தப, தண்டி, தன்வி, நம்ய, பார, பலி, பலீ, பக, மனு, யக்ஞ, ராம, லட்சுமிபதி, வராஹ, ஷாந்த, ஸம்வித், ஷட்குண, சாராத்ம, ஹம்ஸ, ளாளுக, நரசிம்ஹ என்று 51 ரூபங்கள், அ முதல் க்ஷ வரைக்குமான எழுத்துகளால் வர்ணிக்கப்படுபவன் என்று அறியவேண்டும்.
இதய கமலத்தில் இருக்கும் 12 இதழ்களில் பகவந்தனின் 12 ரூபங்கள் இருக்கின்றன. அவை: சக்தி, ப்ரதிஷ்டா, சம்வித், ஸ்பூர்த்தி, ப்ரக்ருதி, பரா, வித்யா, மதி, நியதி, மாயா, கால மற்றும் புருஷ. இவற்றைப் பற்றி தந்த்ரசார சங்க்ரஹத்தில் மிகவும் விளக்கமாக படிக்கலாம். ப்ருத்வி முதலான ரூபங்கள் 5, தன்மாத்ரா குணங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, சித்த, புத்தி, மனஸ், அஹங்கார இவற்றைச் சேர்த்து மொத்தம் 24 தத்வங்கள். இந்த தத்வங்களில் கேசவ நாமாதி 24 ரூபங்கள் உள்ளன. த்வக், சர்ம, மாம்ஸ, ருதிர, மேதஸ், மஜ்ஜா, அஸ்தி என்னும் ஏழு தாதுகளில் அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண, ஹம்ஸ, வசிஷ்ட என்னும் 7 ரூபங்கள் உள்ளன. பகவத்ரூப 1, ஜீவ 1 என மொத்தம் 96 ரூபங்களில் அனிருத்தன் அனைத்து ஜீவராசிகளிலும் இருந்து ஜீவர்களை காப்பாற்றுகிறான். ஞானிகள் இந்த அனிருத்தனின் ஸ்வரூபத்தையே அனிருத்தபிரத்யும்ன என்று 4 பாகங்களாகப் பிரித்து அர்ச்சிக்கின்றனர்.
***
No comments:
Post a Comment