#21 - விபூதி சந்தி
இன ஷஷாங்காதிக3ளு லகுமி
வனிதெயரஸன த்வாரபாலக
ரெனிசுதிப்பரு மனத3வ்ருத்திக3ளெ பதா3தி1க3ளு |
அனுப4விப விஷயங்க3ளெ ப
ட்டணக்கெ ப3ப்ப பஸாதக3ளு ஜீ
வனு சுவர்த1க1 க1ப்பக3ள கைகொம்ப3 ஹரி தானு ||21
இன ஷஷாங்காதிகளு = சந்திர சூர்யாதி தத்வாபிமானி தேவதைகள்
லகுமி வனிதெ = லட்சுமியென்னும் உத்தம ராணியின்
அரஸன = பதியான ஸ்ரீபரமாத்மனின்
த்வாரபாலகரு = த்வார பாலகர்கள்
எனிசுதிப்பரு = என்று அழைக்கப்படுகிறார்கள்
மனதவ்ருத்திகளெ = மனதில் தோன்றும் கோரிக்கைகளே
பதாதிகளு = காலாட்கள்
அனுபவிப = நாம் அனுபவிக்கும்
விஷயங்களெ = விஷய போகங்களே
பட்டணகெ = சரீரம் என்னும் இந்த பட்டணத்திற்கு
பப்ப = வரும்
பஸாரகளு = மிகப்பெரிய கடைகள்
ஜீவனு = ஜீவர்கள்
ஸுவர்த்தக = நல்ல வியாபாரி
கப்பகள = கப்பங்களை
ஹரி = ஸ்ரீஹரி, தான்
கைகொம்ப = ஏற்றுக்கொள்கிறான்
லட்சுமிதேவியின் ரமணனான ஸ்ரீபரமாத்மனின் த்வார பாலகர்கள், கண்களுக்கு அபிமானி தேவதைகளான சந்திர, சூரியர்கள் என்று அறியவேண்டும். மனதில் அவ்வப்போது தோன்றும் கோரிக்கைகளே காலாட்கள். நாம் அனுபவிக்கும் விஷயபோகங்களே இந்த பட்டணத்திற்கு வரும் மிகப்பெரிய கடைகள். ஜீவனே அந்த பொருட்களை வாங்கும் நுகர்வோன். இதற்கான கப்பத்தை ஸ்ரீபரமாத்மன் ஏற்றுக்கொள்கிறான்.
***
No comments:
Post a Comment