#15 - விபூதி சந்தி
பாபக1ர்மவு பா1துகெ1க3ளனு
லேப1னவு ஸத்புண்ய ஷாஸ்த்ரா
லாப1னவெ ஸ்ரீதுளஸி ஸுமனோ வ்ருத்திக3ளு சுமன |
கோ1ப தூ4ப1வு ப4க்தி பூ4ஷண
வ்யாபிஸித3 ஸத்பு4த்தி ச1த்ரவு
தீ3ப1வெ சுக்ஞான ஆரார்த்திக3ளெ கு3ணகத4ன ||15
பாபகர்மவு = அஞ்ஞானத்தால், தெய்வ சங்கல்பத்தால் நடந்துவிட்ட பாப கர்மங்கள்
பாதுககளு = செருப்புகள்
ஸத்புண்ய ஷாஸ்த்ரா லாபனவெ = புண்ணியத்தை தரக்கூடிய சாஸ்திர பிரவசனம் அல்லது, சாஸ்திரம் சம்பந்தப்பட்ட பேச்சுகள்
அனுலேபனவு = சுகந்தம்
சுமனஸ்ஸு = சிறந்த கர்மங்களில் அல்லது பகவந்தனிடம் பக்தி கொண்ட மனம்
வ்ருத்திகளு = இந்திரியங்களின் செயல்கள்
சுமனா = புஷ்பங்கள்
கோபவு = பகவத் த்வேஷிகளில் செய்யும் கோபம்
தூபவு = தூபம்
பக்தி = த்ருடமான பக்தியே
பூஷண = ஆபரணங்கள்
வ்யாபிஸித சுபுத்தி = சத்விஷயங்களில் வியாபித்திருக்கும் உத்தம புத்தி
சத்ரவு = குடை
சுஞ்ஞானவெ = உத்தமமான ஞானமே
தீபவு = ஒளி
குணகதன = பரமாத்மனின் குணங்களை சொல்வதே
ஆர்திகளு = மங்களாரத்தி.
நம் மனப்பூர்வமாக பாவம் செய்யாமல், தெய்வ சங்கல்பத்திற்கேற்ப அஞ்ஞானத்தால் பாவங்களை செய்துவிட்டால், அவற்றை பரமாத்மனுக்கு பாதுகைகள் என்று சமர்ப்பிக்க வேண்டும். உத்தம புண்ணியத்தை தரக்கூடியதான நற்சாஸ்திர பாட, பிரவசனங்களே சுகந்தம் என்று நினைக்க வேண்டும். பரமாத்மனின் பாதாரவிந்தங்களில் இருக்கும் மனஸ்ஸே ஸ்ரீதுளசி. இந்திரியங்களின் செயல்களே புஷ்பங்கள். பகவத் த்வேஷிகளில் நாம் செய்யும் கோபமே, பரமாத்மனுக்கு தூபம் என்று நினைக்க வேண்டும். சத்பக்தியே ஆபரணங்கள். அனைத்து இடங்களிலும் வியாப்தனான பரமாத்மனிடம் நிலைத்திருக்கும் புத்தியே குடை. சுஞ்ஞானவே தீபம். பரமாத்மனின் குணங்களை வர்ணிப்பதே மங்களாரத்தி என்று நினைக்க வேண்டும்.
***
No comments:
Post a Comment