ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, April 17, 2020

#29 - போஜனரசவிபாக சந்தி

#29 - போஜனரசவிபாக சந்தி


ஈபரியொளச்யுதன தத்த
த்ரூப தன்னாமக3ள ஸலெ நா
நா பதார்த்த2தி நெனெனெனெது பு4ஞ்சிசுத1லிரு விஷய |
ப்ராபக ஸ்தாபக நியாமக
வ்யாபகனு யெந்த3ரிது நீ நி
ர்லேபனாகி3ரு புண்யபாப3ளர்ப்பி ஸவனடிகெ3 ||29


ஈ பரியலி = மேலே சொன்ன விதமாக
அச்யுதன = அழிவில்லாத ஸ்ரீபரமாத்மனின்
தத்தத்ரூப = அனிருத்த, பிரத்யும்னாதி ரூபங்களை
தன்னாமகள = அன்னாதிகளில் இருக்கும் அன்னமயாதி ரூபங்களை
ஸலெ = ஒன்றாக சேர்த்து
நானா பதார்த்ததி = பக்‌ஷ்ய போஜ்யாதி பல வகையான பதார்த்தங்களில்
நெனெனெனெது = அந்தந்த பதார்த்தங்களில் அந்தந்த ரூபங்களை நினைத்து
புஞ்சிசுதலிரு = உணவினை உண்டு வாருங்கள்
விஷய = விஷய சுகங்களை
ப்ராபக = ஜீவர்களுக்கு சம்பந்தப்படுத்துபவன்
ஸ்தாபக = ஜீவர்களில் நிலைநிறுத்துபவன்
நியாமக = அனைத்தையும் நடத்துபவன்
வ்யாபகனு = அனைத்திலும் வல்லவன்
எந்தரிது = ஸ்ரீபரமாத்மனே என்று அறிந்து
அவனடிகெ = பரமாத்மனின் பாத கமலங்களுக்கு
புண்ய பாபகள = நீ செய்த புண்ய பாவங்களை
அர்ப்பிஸி = சமர்ப்பணம் செய்து
நீ = நீ
நிர்லேபனாகிரு = அந்த செயலுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவாறு விலகி இரு.

மேலே பார்த்த விதங்களில், ஸ்ரீபரமாத்மன், நம் தேகத்தில் அன்னமயனாக கண்ட ரூபியாக இருந்து, அன்னனாக அகண்ட ரூபத்தில் இருந்து, இதைப்போல பிராணமயனாதி ரூபங்களால் அந்தந்த நாமங்களால், அந்தந்த பதார்த்தங்களில் பரமாத்மன் அனிருத்தன் இருக்கிறான் என்று அறிந்து உணவினை உண்ண வேண்டும். ஹே அதிகாரியே (செயல்களை செய்பவனே), விஷயாதி ஆசைகளைக் கொடுப்பவனும், அதை நிலை நிறுத்துபவனும், அனைத்தையும் நடத்துபவனும், அனைத்திலும் வல்லவனும் பரமாத்மனே என்று அறிந்து, நீ செய்த புண்ய பாபாதி அனைத்து கர்மங்களையும் பரமாத்மனுக்கு அர்ப்பித்துவிடு. பரமாத்மன் உன் பாவ கர்மங்களைப் பொசுக்கி, புண்யத்திற்கு தக்க பலன்களைக் கொடுப்பான். அனைத்தும் பரமாத்மனின் செயல்களே என்று சிந்தித்து, உனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறி. அப்போது, உனக்கு கர்மங்கள் வீணாகாது (தக்க பலன்களைக் கொடுக்கும்) என்கிறார் தாசராயர். 

***

No comments:

Post a Comment